செவ்வாய், அக்டோபர் 23

நானோ

தனிமமாக இருக்கும் நம்மை
உன் தந்தை சேர்மமாக மாற்றுவாரா!

இது வேதியியல் படிக்கும் ஒரு மாணவரின் காதல் கவிதை. சரி தனிமம் என்றால் என்ன? சேர்மம் என்றால் என்ன?

தனிமம் : தனிமம் என்பது தனிப்பட்ட ஒரே வகை அணு. ஒவ்வொரு தனிமத்திற்கும் ஓர் அணு எண் உண்டு.  தங்கம், வெள்ளி, இரும்பு போன்றவை வெவ்வேறு தனிமங்கள் ஆகும். 2006 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் மொத்தம் 117 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றுள் அணுவெண் 1 கொண்ட ஹைட்ரஜன் முதலாக அணுவெண் 94 கொண்ட புளுட்டோன்யம் வரை உள்ள 94 தனிமங்களும் இயற்கையில் கிடைப்பன. இது, சாதாரண வேதியியல் நுட்பங்களைப் பயன்படுத்தி வேறு பதார்த்தங்களாகப் பிரிக்க அல்லது அவ்வாறு மாற்ற முடியாதவை ஆகும். இத் தனிமங்களின் இயல்பு கெடாமல் மேலும் பிரிக்கமுடியாத மிகச் சிறிய துகள் அணு எனப்படும். தனது எல்லா அணுக்களிலும் ஒரே அளவான புரோட்டான்களை (protons) கொண்ட பதார்த்த வகையே தனிமம் ஆகும். கால்சியம் என்ற தனிமம் அனைத்து உயிரிகளின், உடல் செயல்பாட்டுக்கும் கட்டாயம் தேவையாகும். கால்சியம் என்றால் என்ன தெரியுமா? அதுதான் சுண்ணாம்பு. லத்தீனில் கால்சிஸ் என்ற வார்த்தைக்கு சுண்ணாம்பு என்பதுதான் பொருள். ஓஸ்மியம் (osmium) அல்லது இருடியம் (iridium) தான் அடர்த்தி மிகுந்த தனிமம் ஆகும்.