ஞாயிறு, நவம்பர் 27

பேச்சு

பேச்சக் குறைங்கடா...
அவன் பேச்சைக் கொண்டுபோய் குப்பைல போடு...
பேச்சு பேச்சாதான் இருக்கணும்...
இப்படியே பேசிக்கிட்டேப் போனா எப்படி?...
பேசியேக் கொல்லாதடா...
பேச்சு...அதுலதான் எத்தனை வகை. எத்தனை விதமாகப் பேசுகிறோம்.

வியாழன், நவம்பர் 17

வழிப்போக்கர் மண்டபம் - அழிவை நோக்கி

      இப்போதெல்லாம் நடந்து போவது என்பதே உடற்பயிற்சிக்காக மட்டும்தான். மற்ற நேரமெல்லாம் அடுத்த தெருவிற்கு போவதற்கு கூட பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறோம்.     ஆனால்   அந்தக்  காலத்தில் தூர தேசத்திற்கு போவதற்கு கூட நடந்துதான் செல்லவேண்டும். வேறுவழியுமில்லை. இந்தக் காரணத்தில்தான்   அவர்களின்   உடலும்   உள்ளமும்   சுறுசுறுப்பாக இருந்தது.     

ஞாயிறு, நவம்பர் 13

செல்லின்றி அமையாது உலகு

செல்லின் பரிணாமத்தில்
குரங்கிலிருந்து மனிதன்.
பரிணாமம்....
மனிதனின் செல்லுக்கு மட்டும்தானா?
மனிதன் வைத்திருக்கும் செல்லுக்கும்தான்!

வெள்ளி, நவம்பர் 11

ஆன்லைனில் அனுப்பும் போட்டோவின் ஃபைல் அளவை மாற்ற

       நாம் சிலநேரம் ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்புவோம். அப்போது போட்டோவினையும் அனுப்ப வேண்டிய சூழல் உருவாகும். நாம் வைத்திருக்கும் போட்டோவின் அளவானது சிலநேரம் MB யில் இருக்கும். அதை சில விண்ணப்பங்கள் அனுப்பும்போது KB அளவில் அனுப்ப சொல்லியிருப்பார்கள். MB அளவில் இருக்கும் படத்தினை மிக எளிதாக KB அளவில் மாற்ற IMAGE OPTIMIZER என்ற வெப்சைட் நமக்கு உதவுகிறது. அந்த வெப்சைட் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

திங்கள், நவம்பர் 7

அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள்

ஓகே! போதும்... உங்க அட்வைஸ்
குழந்தைகளுக்கு நாம் அதிகம் தருவது அட்வைஸ். அது எளிமையானது.யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். வாழ்க்கையில் முன்னேற ஐடியா கொடுக்கத்தான் ஆளில்லை. குழந்தைகளை வாழ்ககையில் வெற்றிபெறச் செய்ய பெற்றோர்கள் முக்கியமாகத் தர வேண்டியது ஐடியா...ஐடியா...ஐடியா மட்டுமே.

வெள்ளி, நவம்பர் 4

கைக்கெட்டும் தூரம் வானம்!

              நாம்  ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தூரத்தைக் கடக்கலாம்.   நடந்து சென்றால்  5  அல்லது   6   கிலோமீட்டர்.  பேருந்தில்    பிரயாணித்தால்  60 -80 கி.மீ.விமானத்தில் சென்றால் 400 - 500 கி.மீ.  சில விமானங்கள் மணிக்கு 1500 கி.மீ கடக்கும் வல்லமை பெற்றுள்ளன. ராக்கெட்டுகள் இதைவிட அதிக தூரத்தை (சுமார் 20,000 கி.மீ) கடக்கலாம். இவற்றையெல்லாம் 'கி.மீ ' என்ற அலகால் எளிதில் அளந்து விடுகிறோம்.

புதன், நவம்பர் 2

ஆசிரியர்களுக்குத் தேவையான வெப்சைட்

ஆசிரியர்கள் பற்றிய செய்திகள்,அவர்களுக்குத் தேவையான அரசாணைகள், விதிமுறைகள், தமிழக அரசால் ஆசிரியர்களுக்கு என அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் மற்ற நாளிதழ்களில் உள்ள பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள பல்வேறு தளங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றின் பட்டியலை இணைத்துள்ளேன்.

செவ்வாய், நவம்பர் 1

தாவரவியல் - வினா விடைகள்.


போட்டித்தேர்வுகளில் தாவரவியலில் கேட்கப்படும் முக்கியமான வினாவிடைகளின் தொகுப்பு.நேரம் கிடைக்கும்போது வழங்கி வருகிறேன்.இப்போது மேலும் சில வினா விடைகளின் தொகுப்பு. பழைய வினாக்களின் தொகுப்பை காண  கீழேயுள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.
தாவரவியல் 13 
தயவு செய்து உங்கள் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். அதன்மூலம் பல நண்பர்களுக்கு சென்றடையும்.