வெள்ளி, நவம்பர் 11

ஆன்லைனில் அனுப்பும் போட்டோவின் ஃபைல் அளவை மாற்ற

       நாம் சிலநேரம் ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்புவோம். அப்போது போட்டோவினையும் அனுப்ப வேண்டிய சூழல் உருவாகும். நாம் வைத்திருக்கும் போட்டோவின் அளவானது சிலநேரம் MB யில் இருக்கும். அதை சில விண்ணப்பங்கள் அனுப்பும்போது KB அளவில் அனுப்ப சொல்லியிருப்பார்கள். MB அளவில் இருக்கும் படத்தினை மிக எளிதாக KB அளவில் மாற்ற IMAGE OPTIMIZER என்ற வெப்சைட் நமக்கு உதவுகிறது. அந்த வெப்சைட் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.



இதில் BROWSE என்ற இடத்தில் உங்கள் படம் இருக்கும் போல்டரைத் திறந்து கொள்ளவும். அடுத்து QUALITY  படத்துக்குத் தேவையானதை செலக்ட் செய்யவும்.MAX WIDTH, MAX HEIGHT ல் தேவையான அளவுகளைக் கொடுத்து OPTIMIZE NOW என்பதை கிளிக் செய்யவும். சிறிது நேரத்தில் KB அளவிலான படங்கள் கிடைக்கும். அதனை SAVE செய்து கொள்ளவும்.

கூடுதல் தகவல்: 
       வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள் இந்த தளத்திற்கு செல்லவும். 

அம்புக்குறியிட்ட இடத்தில் கிளிக் செய்தால் கீழுள்ள விண்டோ தோன்றும்.


தேவையான விவரங்களைக் கொடுத்து உங்கள் Mail Id கொடுக்கவும். இறுதியாக உங்கள் படத்தினை அப்லோட் செய்யவும். இதில் 350 KB அளவிலான உங்கள் புகைப்படத்தினை அனுப்ப வேண்டும். பின்பு உங்கள் மெயிலைத் திறந்து அதனை உறுதி செய்து கொள்ளவும்.விண்ணப்பிக்க கடைசி நாள் 11.11.11 (இன்றுதான்). புகைப்படத்தின் அளவை  (MB TO KB) மாற்ற (350KB க்கு குறைவாகவும் இருக்கலாம்)  இந்த IMAGE OPTIMIZER தளம் உதவும்.

 

4 கருத்துகள்:

  1. பெயரில்லா11 நவம்பர், 2011

    11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. சம்பந்தப் பட்ட படத்தை paintbrush மென்பொருளில் ஓபன் செய்து save செய்தாலும் குறையும்... இணையம் வேலை செய்யாத பொழுது இதை பயன்படுத்திக் கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
  3. ம்..நல்ல தேவையான விஷயம் !

    பதிலளிநீக்கு