செல்லின் பரிணாமத்தில்
குரங்கிலிருந்து மனிதன்.
பரிணாமம்....
மனிதனின் செல்லுக்கு மட்டும்தானா?
செல்லில் பலவகை
ஒருசெல் உயிரினம் முதல்
பலசெல் உயிரினம் வரை
ஆம்!
மனிதனும் பலசெல் உயிர்தான்!
கண்ணும் கண்ணும்
நோக்கியா
நோக்கியாவிலிருந்துதான்
காதலும் வந்தது...
கள்ளத்தனமும் வந்தது!
குழந்தையும்
ஹலோ! சொல்லும்
கர்ப்பமாக்கியவன் யாரென்று கேட்க?
தாய்மையில்லையென்று
நினைத்தோ என்னவோ?
புட்டிப்பால் அருந்தும்
மழலையும்
புளுடூத்தில்தான்
பாடல் கேட்கும்.
அப்பத்தாவும்
காது வளர்ப்பாள்
அசைந்தாடும் நகைக்காக...
இன்றைய ஆணும்
காது வளர்ப்பான்
அதிரும் இசைக்காக.
உடம்பு செல் நனைய
குளிக்க வேண்டியவள்...
உடனிருக்கும் செல் நனையாமல்
குதூகலமாய் ரசித்து
குளிக்கவும் முடியவில்லை.
அன்பானவரை
அணைக்கவும் நேரமில்லை...
அவனின் மார்பில்
முகம் புதைத்து
ரசிக்க வேண்டியவள்
அலைபேசியின்
அழகை ரசித்தாள்.
உனக்குப் பித்தியா
உனக்குப் பித்தியா
நான்... என்று
நினைத்தோ என்னவோ?
மனைவியின் அழகில்
மயங்க வேண்டியவன்!
மதி மயக்கும்
செல்லில்
மனம் தொலைத்தான்.
நான் கெட்டது போதுமென...
நல்லது நினைக்காமல்
நாயே!
நீயும் கெட்டுப்போவென...
துள்ளி விளையாடும் நாயும்
துள்ளல் இசையில்
செல்லோடு.
எல்லோரும் இன்புற்றிருக்க
கூடிதான் இருக்கிறோம்.
ஆனாலும்
தனித்தனி தீவுகளாய்
கைகளில் செல்லோடு.
கற்றோருக்கு சென்ற
இடமெல்லாம் சிறப்பு.
இன்றைய இளைஞனுக்கு
செல்லிருக்குமிடம்தான்
சிறப்பு!
செல்லோடு பிறந்தவனே...
செல்லோடு செல்.
ஆம்!
செல்லின்றி அமையாது
இனி உலகு.
நன்றி : GOOGLE IMAGES
சரி தான்,
பதிலளிநீக்குமாறுபட்ட அருமையான சிந்தனை
பதிலளிநீக்குஅருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஒவ்வோரு புகைப்படத்திக்கும் ஒரு கவிதை அருமை...
பதிலளிநீக்குஅ.....போன் வருது பிறகு வருகிறேன்...
செல்லும் சொல்லும் லொள்ளும் அருமை..
பதிலளிநீக்குசெல்லின்றி அமையாது
பதிலளிநீக்குஇனி உலகு.
அருமை..
நடைமுறையில் உள்ளதை அழகிய படத்துடன் நச் என்ற கவிதையாக தந்து இருப்பது அருமை.
பதிலளிநீக்குகாலத்தின் கொடுமையை கச்சிதமாய்க் கவிதையாக்கியுள்ளீர்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குரசனையோடு உண்மையும் கலந்திருக்கு கவிதை வரிகளில் !
பதிலளிநீக்குகர்ப்பத்திலிருக்கும்
பதிலளிநீக்குகுழந்தையும்
ஹலோ! சொல்லும்
கர்ப்பமாக்கியவன் யாரென்று கேட்க?
>>>
ஒரு வேளை நிஜமாகிடுமோ?
அருமையாக உள்ளது!
பதிலளிநீக்குஅன்பின் விச்சு - படங்களுக்கேற்ற் பொருத்தமான கவிதை. கர்ப்பத்திலிருக்கும் குழந்தை கேட்கும் - காலம் வரும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு