சில சுவாரஸ்யமான அறிவியல் துணுக்குகளைப் பார்க்கலாம்.
* சில பேருக்கு வாயில் துர்நாற்றம் வீசும். அதற்கு காரணம் சாப்பிடும் உணவுப் பொருட்களாக இருக்கலாம் அல்லது உணவுகுழாயிலோ, மூச்சுக் குழாயிலோ கிருமி தொற்று ஏற்பட்டிருக்கலாம்.இதனை 'Halitosis'(bad breath) என்று பெயர்.
*சிலருக்கு எப்போதும் வாய் உணர்ந்து காணப்படும். இது உமிழ்நீர் சுரப்பியால் ஏற்படும் பிரச்சினையாகும்.இதனை 'Xerostomia'(Dry mouth) என அழைக்கிறார்கள்.
*சில பேர் வாயில் துர்நாற்றம் அடிக்காவிட்டாலும் மனதளவில் அவ்வாறு நினைப்பார்கள்.இதற்கு 'Pseudohalitosis' என்று பெயர்.
* 1Kg அகத்திகீரையில் இருக்கும் சுண்ணாம்பு சத்தின் அளவானது 113 Kg ஆப்பிள் பழத்தில் இருக்கும் சுண்ணாம்பு சத்திற்கு சமமானது.
* நுரையீரல் ஒரு நாளைக்கு சுமார் 23040 தடவி சுவாசிக்கும்.
*சைனஸ் இடது,வலது மூக்கின் வேர் பகுதியில் காணப்படும்.இது 'Frontal' எனப்படும்.
*மூக்கிற்கும் விழிக்கும் இடையில் காணப்படும் சைனஸ்சிற்கு 'Ethmoidal' என்று பெயர்.
*கபாலத்தின் கீழ்பகுதியில் வலதுபுறமும்,இடதுபுறமும் காணப்படும் சைனஸ்சிற்கு 'Sphenoidal' என்று பெயர். இரண்டு கன்னங்களுக்கு இடையில் காணப்படும் சைனஸ்சிற்கு "Maxillary' என்று பெயர்.
*P J. DEORAS 1952ல் இந்தியாவில்முதல் பாம்பு பண்ணையை அமைத்தார்.
71 அமினோ அமிலங்கள் பாம்பின் விஷத்தில் உள்ளது.
*நிமிடத்திற்கு 72 தடவை இதயம் துடிக்கும்.ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் 70 மிலி ரத்தம் வெளியேறும். 70*72 =5040 மிலி(5 லிட்டர்)
* ரேனே தேபைல் ஹைசிந்த் லேனேக் என்ற பிரஞ்சு மருத்துவர் 1816ல் ஸ்டெதெஸ்கோப்பைக் கண்டுபிடித்தார். 1855ல் Drசேமென் நவீன ஸ்டெதெஸ்கோப்பை கண்டுபிடித்தார்.
*மயிர் கூச்செறிவதற்கு 'அரெக்டஸ் பைலோரம்' என்ற தசை இருக்கமடைவதே காரணம்.
*வெங்காயம் வெட்டும் போது 'sulfoxide' வெளியேறி கண்ணிலுள்ள ஈரத்துடன் கலந்து 'Sufuric acid'ஆக மாறுகிறது.எனவே வெங்காயம் உறிக்கும் போது கண் எரிகிறது.
* மாறுகண்ணை உடையவர்களின் மூளையானது மாறுகண்ணை(Lazy eye - Amplyopia) செயலிலக்கச் செய்கிறது.
*மூக்கினுள் 'ஆஸ்பெர்ஜில்லஸ்' என்ற பூஞ்சை வளர்ந்து மூக்கடைப்பை உண்டாக்கும்.'மியூக்கர் மைக்கோஸிஸ்' என்ற பூஞ்சை மூக்கில் வளர்ந்து திசுக்களை அழித்து விடும் . சிலநேரம் மூக்கின் பகுதிகளை அகற்ற நேரலாம்.
நல்ல துணுக்குகள்
பதிலளிநீக்குvary nice
பதிலளிநீக்குthank you