புதன், அக்டோபர் 5

சண்டை போடாத மனைவி!!!

    புது டிரைவர் காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். அவருடைய முதலாளி டிரைவரின் தோளைத் தொட்டார். டிரைவர் அலறி விட்டார். முதலாளி ஏன் இப்படி அலறுகிறாய் ? எனக் கேட்டார். நான் 10 வருஷமா பிணத்தைக் கொண்டுபோகிற வண்டிய ஓட்டிக்கிட்டிருந்தேன்...அதான் கொஞ்சம் பயந்துவிட்டேன் என்றார்.
                       *                   *                   *                  *                         *

    ஒரு கணவனும், மனைவியும் 25 வருஷமாக சண்டையே போட்டதில்லை (கதையிலதான்). இதை ஒரு விழாவாகக் கொண்டாட எண்ணினர். விழாவிற்கு அனைவரும் வந்திருந்தனர். எல்லோருக்குமே ஆச்சரியம்! அதெப்படி 25 வருஷமாக சண்டையே போடாமல் ஒரு தம்பதி இருக்க முடியும். இதை அந்த கணவனிடமே கேட்டனர். அவர் அதைச் சொல்ல ஆரம்பித்தார். எனக்கும் என் மனைவிக்கும் திருமணம் முடிந்தவுடன் ஹனிமூனுக்கு ஒரு மலைப் பிரதேசத்திற்கு அனுப்பினர்.அங்கு என் மனைவி குதிரைச் சவாரி செய்ய விரும்பினார். நான் ஒரு குதிரையிலும், என் மனைவி ஒரு குதிரையிலும் அமர்ந்து சவாரி செய்தோம். என் மனைவி சென்ற குதிரை கொஞ்ச நேரத்தில் சண்டித்தனம் செய்து என் மனைவியைத் தள்ளி விட்டது. அவள் கீழே விழுந்து அடிபட்டது. அவள் ஒன்றும் செய்யவில்லை...குதிரையைப் பார்த்து இதுதான் உனக்கு முதல் எச்சரிக்கை என்றாள். திரும்பவும் ஏறி அமர்ந்து சென்றாள் . திரும்பவும் அது கீழே தள்ளி விட்டது. இது உனக்கு இரண்டாவது எச்சரிக்கை என்றாள். மறுபடியும் அமர்ந்து செல்லும்போது குதிரை அதே தவறைச் செய்தது. இப்போது என் மனைவி ஒன்றும் சொல்லவில்லை. கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தாள். குதிரையை சுட்டு விட்டாள். நான் உடனே அடிப்பாவி! குதிரை வாயில்லா ஜீவன்.. அதை கொன்று விட்டயே என்றேன். உடனே அவள் இதுதான் உனக்கு முதல் எச்சரிக்கை என்றாள். அதற்கப்புறம் இது வரை சண்டை வந்ததேயில்லை என்றார்.
           *                    *                     *               *                          *
   ஒரு கணவன் மனைவியைக் காணோம் என புகார் செய்ய  வந்தான். உடனே அங்குள்ளவர் ஐயா இது போலிஸ் ஸ்டேசனில்லை... போஸ்ட் ஆபிஸ் என்றார். ஐயோ சந்தோசத்தில தலைகால் புரியல என்றான்.
              *               *                          *                 *                              *
   ஒரு கணவனும், மனைவியும் கோவிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு இருந்தது. கணவன் மனமுறுக வேண்டினான். கணவன் வேண்டுவதைப் பார்த்து மனைவி கிணற்றை எட்டிப்பார்த்தாள், தவறி உள்ளே விழுந்து விட்டாள். உடனே கணவன் கிணற்றைப் பார்த்து நிஜமாகவே விருப்பத்தை நிறைவேற்றுகிறதே!! என்றான்.
               *                      *                      *                   *                          *
       ஒரு கணவனும் , மனைவியும். மனைவி அதிகமாக கடன் வாங்க ஆரம்பித்தாள். உடனே கணவன் என் மனைவி வாங்கும் கடனுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என விளம்பரம் செய்தான். உடனே மனைவி நான் வாங்கும் கடனுக்கு யார் பொறுப்பேற்கிறார்களோ அவர்தான் என் கணவன் என விளம்பரம் கொடுத்தாள்.
        *                             *                            *                            *                     *
மனைவி : ஏங்க! ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினாராமே.      நான் செத்தா நீங்க என்ன கட்டுவீங்கன்னு ?
கணவன்: உன் தங்கச்சியை கட்டுவேன்.
                 *            *                   *                  *          *

கணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 40,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனா!!ஆண்கள் அதுல பாதிதான்  பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா?
மனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல
வேண்டியிருக்கு. அதனால்தான் பெண்கள் அதிகம் பேச வேண்டியிருக்கு.
கணவன் : என்னது?திரும்ப சொல்லு..
                *              *                    *                  *               *
ஒரு ஆபிஸில் ஒரு தமிழர்,ஒரு பெங்காளி,ஒரு சர்தார் மூன்று பேரும் ம்தியம் சாப்பிட அம்ர்ந்தார்கள். தமிழர் டிபன் பாக்ஸைத் திறந்தவுடன்..சே! இன்னைக்கும் இட்லியா? நாளைக்கும் இட்லி இருந்துச்சுனா நான் செத்தே போயிடுவேன் என்றார்.   
 அடுத்து பெங்காளி டிபன் பாக்ஸைத் திறந்தவுடன்..சே! இன்னைக்கும் மீனா? நாளைக்கும் மீனு இருந்துச்சுனா நான் செத்தே போயிடுவேன் என்றார்.
அடுத்து சர்தார் டிபன் பாக்ஸைத் திறந்தவுடன்..சே! இன்னைக்கும் சப்பாத்தியா? நாளைக்கும் சப்பாத்தி  இருந்துச்சுனா நானும் செத்தே போயிடுவேன் என்றார்.
மறுநாள் அதே இட்லி,மீனு, சப்பாத்திதான் இருந்தது.மூன்று பேரும் தற்கொலை செய்து இறந்து போனார்கள். அடக்கம் செய்யும் போது தமிழரின் மனைவி அய்யோ தினமும் இட்லியா கொடுத்து அவர சாகடிச்சிட்டேன் என்று அழுதாள். பெங்காளியின் மனைவி நானும் தினமும் மீனா கொடுத்து அவர சாகடிச்சுட்டேன் என்று அழுதாள். சர்தாரின் மனைவி இவரு எதுக்கு செத்தார்னே தெரியலியே? தினமும் அவருதான சமையலே செய்வாரு என்று அழுதாள்.
                       *                    *                   *                         *                      *
ஒருவர் : ஏன் டாக்டர் ஆப்பரேஷன் முடிஞ்சவுடனே நோயாளியை தண்ணீர் குடிக்கச் சொல்றார்?
மற்றொருவர் : அப்போதான எங்கெங்க ஓட்டையிருக்குனு கண்டுபிடிக்க முடியும்.
               *                     *                 *                     *                 *
ஆஸ்பிட்டல் பன்ச் டயலாக் : கூட்டிட்டு வாங்க.... தூக்கிட்டு போங்க!!
                 *                   *                *               *                     *

6 கருத்துகள்: