செவ்வாய், மே 8

மனைவி புராணம்

அலையல்ல சுனாமி

காளையையும் அடக்க வேண்டாம்
ஊர் கல்லையும் தூக்க வேண்டாம்

டிஸ்கொதே போக வேண்டாம்
எல்சிடி வாங்க வேண்டாம்


உறுமால் கட்டி உழவு செய்து
குடும்பம் நடத்த நீ
கொண்டுவரும் குறுந்தொகை
எனக்குப் போதும்...

சன்டிவி கனெக்‌ஷனும் வேண்டாம்
சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகவும் வேண்டாம்

பகலெல்லாம் என்கூட இருக்கவும் வேண்டாம்
பஞ்சுமெத்தையும் போடவேண்டாம்

சூழ்தேடி வரும் 
மகரந்தம்போல நீ
என்னைத் தேடி வந்தால் போதும்...


சத்தியவானும் ஆகவேண்டாம்
சக்களத்தியும் எனக்கு வேண்டாம்


சாயங்காலம் ஆனா சாராயமும் வேண்டாம்
என்னுடன் சண்டையும் போட வேண்டாம்

என் அம்மம் மீது 
உன் முகம் இருக்க 
நான் செம்மாந்து இருக்கும் 
சந்தோஷம் எனக்குப் போதும்...


பங்களாவும் கட்ட வேண்டாம்
பணங்காசும் சேர்க்க வேண்டாம்

பட்டுபுடவையும் எனக்கு வேண்டாம்
கட்டுமஸ்தான திரேகமும் வேண்டாம்

என் தாபம் போக்க
உன்மதம் கொண்டு
என் அதரம் கடிக்கும்
உன் அன்பு போதும்...

21 கருத்துகள்:

 1. சன் டிவி, பட்டுப்புடவை, பங்களா, பணம் காசு, எல்சிடிலாம் வேணம்ன்னு சொல்ற பொண்ணை உங்க கவிதையில மட்டும்தான் சகோ பார்க்க முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையிலாவது பார்த்துக்கிடுவோம்.

   நீக்கு
 2. மனைவி புராணம் ... புராணம் !!!????

  பதிலளிநீக்கு
 3. கலக்கிடீங்க போங்க. அருமை. அருமையான சிந்த்தனைகள் சூப்பெரான கவிதை

  பதிலளிநீக்கு
 4. நம்பவே முடியேல்ல விச்சு.எந்த நாட்டில செய்த பொம்பிளை பொம்மை இது ?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹேமா இப்படி ஒரு பொண்ணு இருந்தா எப்படி இருக்கும்...

   நீக்கு
  2. இருக்கும்....இருக்கும்.அடுத்தவங்கமாதிரி நானும் பறக்கணும்ன்னு நினைச்சாத்தான் தப்பு.அதுக்காக பறக்காமலேயே இருந்தா அது பொம்மை.உங்ககூட பேசக்கூட வேணாம்ன்னு சொல்லிடும்.கவனம் !

   நீக்கு
  3. //அடுத்தவங்கமாதிரி நானும் பறக்கணும்ன்னு நினைச்சாத்தான் தப்பு//உண்மைதான் ஹேமா.. வரவுக்கு ஏற்ற செலவு செய்யும் பெண் என்று அர்த்தம்.

   நீக்கு
 5. நம்பவே முடியாத கவிதை வரிகள்:)

  பதிலளிநீக்கு
 6. சன் டிவி, பட்டுப்புடவை, பங்களா, பணம் காசு, எல்சிடிலாம் வேணம்ன்னு சொல்ற பொண்ணை உங்க கவிதையில மட்டும்தான் சகோ பார்க்க முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்வது? அப்படியாவது மனச தேத்திக்கிடுவோம்.

   நீக்கு
 7. அம்மம் என்றால் என்ன அன்பரே கவிதை அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரேம் அண்ணே.., பப்ளிக்ல இலைமறைவு காய்மறைவா ஒரு வாத்தையை உபயோகிச்சா அதை நோண்டி நோண்டியா கேப்பீங்க .., எனக்கும் தெரியலைதான், இருந்தாலும் எப்புடி தெரிஞ்ச மாதிரியே கருத்து போட்டிருக்கேன் பாருங்க கீழே.., ஹி ஹி ஹி ..!

   நீக்கு
  2. இலைமறைவு காய்மறைவா ஒரு வாத்தையை உபயோகிச்சா அதை நோண்டி நோண்டியா கேப்பீங்க ..,

   தங்கள் பதிலுக்கு நன்றி வரலாற்று சுவடுகள்..

   நீக்கு
 8. பின்னி எடுக்குறீங்களே தல..,

  பதிலளிநீக்கு
 9. பின்னி எடுக்குறீங்களே தல., அதிலும் அந்த பினிஷிங் ட்ச் fantastic ..!

  பதிலளிநீக்கு
 10. எப்படியோ...எதுகை..மோனை..போட்டு கவிதைன்னு எழுதிட்டீங்க..கொஞ்சம் தப்பும் தவறுமா இருக்கே திருத்த வேண்டாமா...? ஆங்கில வார்த்தைகளை கொண்டு தமிழ் கவிதை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்கு இணையான தமிழ் வார்த்தைகள் கொண்டு எழுத வார்த்தைகளைத்தேட வேண்டியுள்ளது. நம்து தமிழ் புலமை அவ்வளவுதான்.தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.

   நீக்கு
 11. பங்களாவும் கட்ட வேண்டாம்
  பணங்காசும் சேர்க்க வேண்டாம்

  பதிலளிநீக்கு
 12. இப்பொஎல்லம அப்படி இல்ல தல

  பதிலளிநீக்கு