ஞாயிறு, ஜூன் 10

எனக்குப் பிடித்த நிலா

அலையல்ல சுனாமி

நீ ஒரு இயற்கையின்
வாழ்க்கைப்பாடம்
தேய்வதும் வளர்வதுமாக...


பருவத்திற்கு வந்த
பெண்ணுக்கும் உனக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்
அவள் முகத்தை 
மட்டும் மூடிக்கொள்வாள்
நீ உடம்பையே
மூடிக்கொள்வாய் மேகத்தினுள்...


சிலநேரம் என்னவளின்
முகம் பார்த்து
நீ என்று
ஏமாந்திருக்கிறேன்...


மாசு மருவற்ற 
குழந்தைநிலாவாகவும்
குழந்தைக்கு சோறூட்டும்
தாயுமானவளுமாக நீ...


நீ பவுர்ணமி
வளர்கிறாய்
நான் அமாவாசை
உனை நினைத்து
தேய்கிறேன்...


எப்போதும் காட்சியளிப்பாய்
வானம் வெளித்த பின்பும்
சந்தோசமான
ஒரு அழகு நிலாவாக...


                                 இப்படிக்கு
                                     விச்சு...



15 கருத்துகள்:

  1. பெயரில்லா10 ஜூன், 2012

    ''...நீ ஒரு இயற்கையின்
    வாழ்க்கைப்பாடம்
    தேய்வதும் வளர்வதுமாக...''..
    உண்மை...உண்மை....
    இதை மனதில் பதித்தால் துன்பம் என்பதே இல்லை..
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  2. //////சிலநேரம் என்னவளின்
    முகம் பார்த்து
    நீ என்று
    ஏமாந்திருக்கிறேன்////

    நான் ரசித்து வாசித்த வரிகள்.,

    பதிலளிநீக்கு
  3. அழகு நிலவைக் கொண்டாடும் கவிதையும் அழகு.

    பதிலளிநீக்கு
  4. //பருவத்திற்கு வந்த
    பெண்ணுக்கும் உனக்கும்
    ஒரே ஒரு வித்தியாசம்
    அவள் முகத்தை
    மட்டும் மூடிக்கொள்வாய்
    நீ உடம்பையே
    மூடிக்கொள்வாய் மேகத்தினுள்.//

    யதார்த்தமும்
    அழகிய ரசனையும் சார்

    பதிலளிநீக்கு
  5. நீ பவுர்ணமி வளர்கிறாய் நான் அமாவாசை உனை (என்னவளை) நினைத்து
    தேய்கிறேன்...

    இது எனக்காக எழுதப்பட்ட வரிகள்

    பதிலளிநீக்கு
  6. அட.....என்னாச்சு விச்சுவுக்கு.இதுக்குத்தான் வாத்தியாரே..... வளைச்செடுக்கிற வகுப்பு எடுகேக்கயே எனக்குத் தெரியும்.....ஹாஹாஹாஹா !

    அழகான கவிதை.உள்ளூடல் விளங்குது.அமைதியும் அன்பும் சொல்கிறது காதல் வரிகள்.நிலவும் அலையும் அழகுதான் கவிதையில்....!

    பதிலளிநீக்கு
  7. ஆஹா விச்சு அருமை அருமை....

    இவ்வரிகளைப் படிச்சதும் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன் விச்சு.... ஹா..ஹா..ஹா...

    //சிலநேரம் என்னவளின்
    முகம் பார்த்து
    நீ என்று
    ஏமாந்திருக்கிறேன்...///

    எல்லோரும் தன்னவளைத்தான் நிலவுக்கு ஒப்பிடுவினம்.... இது விச்சுவோ.. அப்போ உங்களவ நிலவு இல்லையா?:)))) கர்ர்ர்ர்ர்ர்:))) அல்லது என் புரிதல் தவறா?


    ஹா...ஹா...ஹா.. முடியவில்லை சூப்பர் கற்பனை.. வித்தியாசமான சிந்தனை..

    பதிலளிநீக்கு
  8. நல்லாயிருக்கு,இது ஒரு சுகமான கற்பனை.எப்போதுமே காட்சிக்கு உட்பட்டவர்கள் நம் மனம் நெருங்கியவரகளாகவும்,நமக்கு பிடித்தமானவர்களாகவும்/

    பதிலளிநீக்கு
  9. நல்ல கவிதை சார் ! வாழ்த்துக்கள் ! என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி !

    பிளாக்கினில் ஆடியோவினை பதிவிடுவது எப்படி...?-உங்களின் கேள்விற்கான பதில் :

    1. நமக்கு பிடித்த பாடல் வரிகளை Audio Cutter மூலம் கட் செய்து கொள்ள வேண்டும்.
    2. பிறகு Audio Joiner மூலம் எல்லா பாடல் வரிகளையும் சேர்க்கவும். எந்த பாடல் முன்னே, எந்த பாடல் பின்னே என்பதை ஒரு முறை கேட்டு விட்டு, உங்களுக்கு திருப்தி ஆனவுடன் Join செய்யவும்.
    3. முதலில் நமது ஆடியோ பைல்களை கூகிள் சைட்ஸ்-ல் தரவேற்றம் (upload) செய்ய வேண்டும். உதவிக்கு நம்ம நண்பர் (http://www.bloggernanban.com/2010/11/how-to-add-music-in-blogger.html) தளத்தைப் பார்த்து செய்யவும்.
    4. அவ்வளவு தாங்க... இனி நம் பதிவிற்கேற்ற பாடல்களை கேட்கலாம். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. என்ன வாத்தியாரே!வூட்டுல சோறு ஒழுங்கா விழுதில்லையோ?கற்பனையைத் தட்டி விட்டுருக்கீங்க?

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா12 ஜூன், 2012

    விச்சு சார்,"அந்த நெலாவத் தான் நான் கையில புடிச்சேன்"னு இளையராஜா பாட்டு மட்டும் தான் பாடலாம்,வானத்து நெலாவை எல்லாம் நம்பளால புடிக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  12. //சிலநேரம் என்னவளின்
    முகம் பார்த்து
    நீ என்று
    ஏமாந்திருக்கிறேன்...
    //

    கவிதை முழுவதுமே அருமையான வரிகள்


    படித்துப் பாருங்கள்

    வாழ்க்கைக் கொடுத்தவன்

    பதிலளிநீக்கு
  13. நிலவை பற்றிய ரம்யமான கவிதை மனதை வருடிச்சென்றன

    பதிலளிநீக்கு