இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து படங்களும் கூகுள் தேடலில் கிடைத்தவை. மூட மனிதர்களின் மூடநம்பிக்கைகள்தான் இவை.இப்போதுள்ள பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பதே கஷ்டம். அதிலும் தவளைக்கும் பெண்ணுக்கும் கல்யாணமாம். யாருக்கு நன்மையோ இல்லையோ? சுற்றியுள்ளோருக்கும் மீடீயாக்களுக்கும் நல்லா பொழுது போகும்.
பெண்ணுக்கு தவளை என்றால் ஆணுக்கு நாய்தான். நாய் வாழ்க்கை என்பது இதுதானோ?
அடுத்த நல்ல செய்தி... மனிதர்களுக்கு கல்யாணம் செய்து போரடித்துவிட்டது. அதனால கழுதைகளுக்கு கல்யாணம் செய்தால்... எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க.
மனிதனின் நம்பிக்கைகள் நிச்சயம் அவன்மேல் கிடையாது. அடுத்தவர்கள்மீதும் கிடையாது. கிளிமேல் நம்பிக்கை வைத்தான். அது எடுக்கும் சீட்டில்தான் மனிதனின் வாழ்க்கை. ஆறறிவு யாருக்கு என்பது சந்தேகமே!ஆனால் நல்லா பொழுது போகும்.
என்ன இது உப்பு சப்பு இல்லாத வாழ்க்கை என்று யாரும் சொல்லாமல் இருக்க வேண்டுமா? இதோ ஐடியா...அடுத்த அவனது நம்பிக்கை பச்சை மிளாகாயிலும் எலுமிச்சை பழத்திலும். காரமும் புளிப்பும் சேர்ந்தால் வாழ்க்கையில் ஒரு சுவை வந்துவிடுமோ!
ரொம்ப போர் அடிக்கிறதா? கவலையே வேண்டாம். மண்டையில் தேங்காய் உடைக்கலாம், குழந்தையின்மீது ஏறி மிதிக்கலாம், குழந்தையை தூக்கி எறியலாம் (எனக்கு ஒரு டவுட்.. குழந்தையும் தெய்வமும் ஒன்னுனு சொல்றாங்க... தெய்வத்தை இப்படிசெய்யலாமா?)
என்ன ஒரு கொலைவெறி... |
தர்காவில் குழந்தையை எறிதல் |
அடுத்த நல்ல பொழுதுபோக்கு பேயை விரட்டும் சாக்கில் சாட்டையால் அடிக்கலாம், முடியைப்பிடித்து இழுத்து முட்டலாம்.
கடவுள் அனைத்து இடத்திலும் இருக்கிறார் என்றாலும் அவர் தூணில் தெரிகிறார், சுவற்றில் தெரிகிறார் என்று புரளியைக் கிளப்பி கூட்டம் சேர்க்கலாம்.பணமும் சம்பாதிக்கலாம், பொழுதையும் போக்கலாம்.
இதையெல்லாம்விட உட்சபட்சமாக பொழுதுபோகவேண்டுமென்றால் பார்க், தியேட்டர், பீச், விளையாட்டு, நடனம் என்று அனைத்தும் ஒட்டுமொத்தமாக கிடைக்கும் ஏதாவது ஆசிரமத்துக்கு செல்லலாம்.
கடவுள் மனதில் மட்டும் இருந்தால்போதும். அவர் அனைத்து இடங்களிலும் நிறைந்துதான் இருக்கிறார். உலகிலுள்ள அனைத்து நல்ல உள்ளங்களும் கடவுள்தான். அன்பே சிவம்.
என்னக் கொடுமைகள் இவை !!!
பதிலளிநீக்கு:) nice collection. Good that you have listed these kodumai in all the religions.
பதிலளிநீக்குகுழந்தை படங்கள் வேதனைப்பட வைத்தது... அவர்கள் எல்லாம் மனிதர்களா ?
பதிலளிநீக்குஎல்லாம் சரி குழந்தையின் மேல் ஏறி மிதிப்பது மிகவும் கொடுமையாக இருக்கிறது.மூடநம்பிக்கைகள் மனிதனை என்ன பாடு படுத்துகின்றன?
பதிலளிநீக்குவித்தியாசமான தொகுப்பு நன்றி நண்பா
பதிலளிநீக்குநல்லா நல்லா சொல்றீங்க..:))
பதிலளிநீக்குபடங்களும்,பகிர்வும் திகைப்பு,நகைச்சுவை,பயங்கரம்,வெறுப்பு ஆச்சரியம் போன்ற பல்வ்வேறு உணர்வுகளை பிரதிபலிக்க வைத்து விட்டன.
பதிலளிநீக்குவித்தியாசமான / கொடுமையான தொகுப்பு...
பதிலளிநீக்குவாத்தியாருக்குப் பொழுது போகேல்லப்போல.அதுதான் இந்தப் படங்களையெல்லாம் தேடியெடுத்துப் போட்டிருக்கிறார்.தவளைக்கும் கல்யாணம்.அந்தக் குழந்தைகள் படம் கஸ்டமாயிருக்கு விச்சு.அதென்ன நேர்த்திக்கடனா ?!
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு ஆயிரம் பெரியார் வந்தாலும் இவங்களை திருத்த முடியாது
பதிலளிநீக்குசில படங்கள் பார்க்க கஷ்டமா இருக்கு அண்ணா! பொழுதுபோக்கா சொன்னாலும் யோசிக்க வைக்கிர பதிவு அண்ணா!
பதிலளிநீக்குlast line is true message i like this author by vijay
பதிலளிநீக்குவேதனையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு; மூடத்தனமான பழக்க வழக்கங்கள்.
நமக்கு இன்னும் எத்தனை பெரியார்கள் வந்தாலும் மாற்ற முடியாது.
நன்றி.