சனி, டிசம்பர் 22

ஓலைக்குடிசை

இரவு வானின் அழகை
எங்கள் ரசிக்க முடியாத
ஓட்டை குடிசையின் 
வழியே ரசிக்கலாம்
ஒரு மழைக்காலத்தில்
கிழிந்த பாய்
பழைய துணி
நைந்துபோன சாக்கு
இத்துப்போன கிடுகு
வீணாய்போன பாலித்தீன்
இவற்றில் ஏதோ
ஒன்றை வைத்து
தற்காலிகமாய்
மழை நிற்க வைப்போம்
அடுத்த மழைக்குள்
ஓட்டையை சரி செய்யனும்
இயலாமையை வெளிப்படுத்துவார்
தந்தை
எனக்கும்
ஓலையில் செய்த
கால்சட்டை எங்கேனும்
கிடைக்குமா?
இவற்றில் ஏதேனும்
ஒன்றை வைத்து மறைத்து
நானும் மானம் காத்துக்
கொள்வேன்!




16 கருத்துகள்:

  1. மிக மிக அருமை
    வீட்டின் மேலாடையையும்
    உடலின் மேலாடையையும்
    இணைத்த விதம் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அழகிய கவிதை விச்சு.. அந்த பின்னாலிருக்கும் மரங்களும்.. ஓலைக் குடிசையும் பார்க்க ஆசையாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. //
    Your comment will be visible after approval.

    // என்னாச்சு விச்சுவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  4. இப்படியான ஒரு பெரிய பிரிவு மக்களே நம் நாட்டின் அடையாளமாக இருக்கிறார்கள்,ஓட்டைக்கூரை வழி வான் பார்ப்பதும்,பெய்கிற மாழக்கு ஒழுகுகிற கூரையை பிளக்ஸ் ,பாலிதின் பேப்பர் போட்டு மறைத்துக்கொள்வதும் இன்னும் இன்னுமாய் வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட அவர்கள் இப்படியான் கூரை வீடுகளில் நிரந்தரம் காக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி விமலன் சார். என்னுடைய நம்பரை தங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கிறேன்.

      நீக்கு
  5. வணக்கம் விச்சு சார்.உங்கள் போன் நம்பர் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு நன்றி இராஜராஜேஸ்வரி...

      நீக்கு

  7. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    01.01.2013
    kambane2007@yahoo.fr

    பதிலளிநீக்கு
  8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா02 ஜனவரி, 2013

    happy new year 2013.
    Wellcome to my blog.
    Vetha.Elangathilakam

    பதிலளிநீக்கு