உன்னை பீச்சுக்கு அழைத்தேன்
வரமறுத்தாய்
கோவிலுக்கு அழைத்தேன்
உடனே வந்தாய்
அப்புறம்தான் தெரிந்தது
ஒருவாய் சுண்டலுக்கு என்றாய்
நீ என்னையே உற்றுப்பார்த்தாய்
வெட்கமாய் இருந்தது
அப்புறம்தான் தெரிந்தது
நீ பார்த்தது
என் சம்பள கவரை என்று
ஜவுளிக்கடை அழைத்தாய்
சந்தோசமாக வந்தேன்
எனக்கு முந்நூறு ரூபாய் சட்டை
இன்னும் சந்தோசப்பட்டேன்
உனக்கு ஐயாயிரம் ரூபாய் புடவை
பில்லை மட்டும் என்னிடம் கொடுத்தாய்
மெலிந்துபோய் இருக்கிறாய்
நன்றாக சாப்பிடு என்றாய்
என்ன ஒரு அக்கறை என நினைத்தேன்
உணவகம் அழைத்து சென்று
வாயில்வராத பெயரை எல்லாம் சொல்லி
ஆர்டர் செய்தாய்
எனக்கு ஒரு தட்டும் நீ முப்பது
தட்டுமாய் தின்னு தீர்த்தாய்
என் சம்பள கவர் இன்னும் மெலிந்தது
நீ இன்னும் பருத்தாய்
இறுதியாக சொன்னாய்
நான் லவ்வுவது உன்னையல்ல
உன் நண்பனை என்று
அவனை பழிவாங்க நினைத்தேன்
நல்லபடியாகவே நடந்தது
நானும் சொன்னேன் நான் லவ்வியது
உன்னையல்ல
உன் தங்கைகளை என்று!
நல்ல நகைச்சுவை.
பதிலளிநீக்குஎல்லாம் மாறிப் போகிறது.
வேதா. இலங்காதிலகம்.
தங்கள் வருகைக்கு நன்றி..
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
நன்றி ஐயா.
நீக்குதங்கை “களை“யா...?
பதிலளிநீக்குவம்பளக்கவர் மட்டுமில்லை...
நீங்களும் மெலிந்து விடுவீர்கள்.
ஹா..ஹாஹா.. நான் இதுக்குமேல் மெலிய முடியாது. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி அருணா.
நீக்குவணக்கம் விச்சு...
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
என் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்...
நன்றி இளமதி. தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
நீக்குநகைச்சுவை என ஒடுக்கி விடமுடியவில்லை,நடப்பு என ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.மனம் கசக்கிற யதர்த்தம்.
பதிலளிநீக்குஇன்றைய எதார்த்தம். பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிட்டது. நன்றி விமலன் சார்.
நீக்கு