காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். இவர் தேங்காய் வியாபாரம் செய்தவர். 1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள். காமராஜரின் தங்கையின் பெயர் நாகம்மாள். தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். பின்பு ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல போராட்டங்களில் கலந்து கொண்டார்.
விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். 1954ம் ஆண்டு தமிழக முதல்வரானார். காமராஜரின் அமைச்சரவையில் குறைந்த எண்ணிக்கையிலேயே உறுப்பினர்கள் இருந்தனர். தன் ஆட்சிக்காலத்தில் கல்விக்கு பெரும்பணியாற்றினார்.
1975ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2ம் நாள் தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த் போது பையில் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, எந்தவிதமான சொத்துக்களோ, ஆடம்பரமான பொருட்களோ இல்லை. அவருடையை எளிமை வியக்காதவர் யாருமில்லை.
காமராஜர் வாழ்ந்த இல்லம் நினைவுச்சின்னமாக அதுவும் எளிமையான நிலையில் உள்ளது. எல்லா நாட்களும் சென்று பார்க்கலாம். ஒரு குறுகிய தெருவில் அமைந்துள்ளது. புதிதாக டைல்ஸ் மட்டும் மாற்றியமைத்துள்ளனர்.
அவருடைய புகைப்படங்கள், பயன்படுத்திய சில பாத்திரங்கள், அவருடைய ஆடைகள் (நான்கு கதர் சட்டை, வேஷ்டிகள் ), பயன்படுத்திய பொருட்கள் ( பிளேடு, கிரீம், சோப்பு, சீப்பு, பிரஷ், மூக்கு கண்ணாடி, பேனா) , பெட்ஷீட், படித்த புத்தகங்கள் மட்டும் உள்ளது. வீட்டின் வெளிப்புறம் ஒரு சிறிய கோவில் அமைத்துள்ளனர். அவருடைய வீட்டிற்கு செல்லும் வழியில் சில அலங்கார விளக்குகள் அமைத்துள்ளனர். இன்றைய அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும்போது எளிமையாக வாழ்ந்த அவர் இன்றைய பாஷையில் வாழத்தெரியாதவர் என்றே சொல்லலாம்.
விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். 1954ம் ஆண்டு தமிழக முதல்வரானார். காமராஜரின் அமைச்சரவையில் குறைந்த எண்ணிக்கையிலேயே உறுப்பினர்கள் இருந்தனர். தன் ஆட்சிக்காலத்தில் கல்விக்கு பெரும்பணியாற்றினார்.
பின்னாடி அமர்ந்துள்ளவர் காமராஜர் |
காமராஜர் வாழ்ந்த இல்லம் நினைவுச்சின்னமாக அதுவும் எளிமையான நிலையில் உள்ளது. எல்லா நாட்களும் சென்று பார்க்கலாம். ஒரு குறுகிய தெருவில் அமைந்துள்ளது. புதிதாக டைல்ஸ் மட்டும் மாற்றியமைத்துள்ளனர்.
அவருடைய புகைப்படங்கள், பயன்படுத்திய சில பாத்திரங்கள், அவருடைய ஆடைகள் (நான்கு கதர் சட்டை, வேஷ்டிகள் ), பயன்படுத்திய பொருட்கள் ( பிளேடு, கிரீம், சோப்பு, சீப்பு, பிரஷ், மூக்கு கண்ணாடி, பேனா) , பெட்ஷீட், படித்த புத்தகங்கள் மட்டும் உள்ளது. வீட்டின் வெளிப்புறம் ஒரு சிறிய கோவில் அமைத்துள்ளனர். அவருடைய வீட்டிற்கு செல்லும் வழியில் சில அலங்கார விளக்குகள் அமைத்துள்ளனர். இன்றைய அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும்போது எளிமையாக வாழ்ந்த அவர் இன்றைய பாஷையில் வாழத்தெரியாதவர் என்றே சொல்லலாம்.
நாம் அறிந்துகொள்ளப்பட வேண்டிய தலைவர்களில் அவர் மிக முக்கியமானவராய்/
பதிலளிநீக்குமற்றவர்களை வாழ வழி வகுத்தவர்கள் (காமராஜர் அவர்கள் உட்பட) இன்றைக்கு வாழத்தெரியாதவர்கள் தான்... படங்களோடு சிறப்புகளுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநண்பர் திரு மாரிமுத்து அவர்களின் தலைவர் திரு காமராஜர் அவர்கள் பற்றிய அருமையான பதிவு.
பதிலளிநீக்குஎனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் நண்பரே.