செவ்வாய், அக்டோபர் 15

நினைவுகள்நினைவுகளுக்கு
நரை இல்லை போலும்
மீண்டும் மீண்டும்
அப்போது பிறந்த
குழந்தைபோல்
புதிதாகவே இருக்கிறது
உன் நினைவுகள்
என்மீது சிறுசிறு
எறும்புகள் போல
ஊர்ந்துகொண்டிருக்கிறது
எனக்கு தெரியும்...
எப்போதும் என்னை 
நினைவில் வைத்திருப்பாய்
நினைக்கத்தோன்றும்
முகமும் மறக்க
நினைக்கும் முகமும்
ஒன்றாக இருப்பது
காலத்தின் கோலம்தான்
எப்போதாவது
என்னை மறக்க 
நினைத்தால் 
என்னைப்பற்றிய மிச்ச
நினைவுகளை மட்டுமாவது
வைத்துக்கொள்...
நானும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்
நினைவுகள்
வரமா? சாபமா?


16 கருத்துகள்:

 1. ரசித்தேன்... நம் மனதைப் பொறுத்து எல்லாம் மாறும்... எதுவும் கடந்தும் போகும்...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் விச்சு!.. நலமா? நீண்ட நாட்களாகக் காணவில்லையே..:)

  நினைவுகளுக்கு மூப்பில்லைத்தான்..
  நீங்களே அழகாகச் சொல்லிவிட்டீர்கள்..:)

  நல்ல நினைவுகள் வரம்! அல்லாதவை சாபம்...:)

  அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் தேடலுக்கு நன்றி இளமதி.. அருமையாகச் சொன்னீர்கள் நல்ல நினைவுகள் மட்டுமே வரம்.

   நீக்கு
  2. நினைவுகள் வரமே
   இல்லையெனில் இத்தனை அற்புதமான
   கவிதைப் பிறக்க ஏது சாத்தியம் ?
   மனம் கவர்ந்த படைப்பு
   நினைவுகள் தொடர வாழ்த்துக்கள்

   நீக்கு
 3. பெயரில்லா16 அக்டோபர், 2013

  வணக்கம்
  நினைவுக்கவிதை மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்படன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. வரமும் சபாமும் கலந்த கலவை...

  ஞாபகங்கள்...

  அழகிய கவிதை

  பதிலளிநீக்கு
 5. வாய்க்கப்பெறுகிற நினைவுகள் வரங்களாயும்,சாபமாயும்/

  பதிலளிநீக்கு
 6. வாய்க்கப்பெறுகிற நினைவுகள் வரங்களாயும்,சாபமாயும்/

  பதிலளிநீக்கு
 7. நினைவுகள் என்றும். மறையாத அழகான வரமே

  பதிலளிநீக்கு