வெள்ளி, ஆகஸ்ட் 15

தேவை ஒரு மணப்பெண்


தேவை
ஒரு மணப்பெண்
கொஞ்சம் அழகுடன்
நிறைய பொறுமையுடன்

கல்யாண வியாபாரத்தில்
அதிக தொகைக்கு யாராவது
அவனை ஏலம் எடுத்துக்கொள்ளுங்கள்

உன்னை முடிந்தவரை நகைகளால்
உன் வீட்டிலிருந்து பூட்டிக்கொள்
எதற்கென்று கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

வீட்டிற்கு தேவையான
அத்தனையும் சீராய் கொண்டுவந்துவிடு
எல்லாம் நானே என்றால்
அவன் எதற்கு 
என்று எதிர்கேள்வி கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

இரவுப்பசிக்கு உன்னைக்கேட்காமல்
எடுக்க அனுமதி
ஏனென்று கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

புகுந்தவீட்டில் எல்லோரையும்
அனுசரித்துப்போ
ஏனென்று கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

வீட்டு வேலைகள் அத்தனையும்
எதிர்கேள்வி கேட்காமல் செய்துவிடு
தேவை உனக்கு பொறுமை

ஏன் லேட்டு 
ஏன் குடித்தாய்
சம்பளம் எங்கே
எதையும் கேட்டுவிடாதே
தேவை உனக்கு பொறுமை 

அவனின் காலை அமுக்கிவிடு
பாவம் அவன் மட்டும்தானே
நாளெல்லாம் வேலை பாக்குறான்
தேவை உனக்கு பொறுமை 

உன் உடல்நலத்தை உடைத்து
குடும்பத்தாரின் உடல்நலம் பேண்
தேவை உனக்கு பொறுமை 

இப்படிப்பட்ட குணவானுக்கு
தேவை ஒரு மணப்பெண்
கொஞ்சம் அழகுடன்
நிறைய பொறுமையுடனும்..!



6 கருத்துகள்:

  1. .மிக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட
    மிக மிக அழுத்தமானக் கரு கொண்டக் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆழமான அர்த்தங்களைக் கொண்ட கவிதை.. :)

    பதிலளிநீக்கு
  3. ஐயையோ! இப்படி போட்டு உடைத்துவிட்டீர்களே நியாத்தை ஹா ஹா எப்படி உங்களுக்கு மட்டும் தோன்றுகிறது. இப்படி அனைவருக்கும் தோன்றினால் சாபக் கேடு நீங்கி எங்கும் சந்தோஷம் தேங்குமே ! அருமை அருமை! இப்படி நிறையவே போட்டு உடையுங்கள் உலகம் உணரட்டும் கேள்வி பிறந்தால் தாடனே நியாயம் கிடைக்கும். தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை போட்டு உடைக்க எதற்கு தயக்கம். நன்றி இனியா.

      நீக்கு