வெள்ளி, ஆகஸ்ட் 22

குண்டுப் பெண்


கடந்த பத்தாயிரம்
ஆண்டுகளில் எந்த நாட்டின்
மீதும் இந்தியா
போர்தொடுக்கவில்லையாம்
நான் ஒவ்வொரு மணித்துளியும்
தொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்
விட்ட அம்புகள் எல்லாம்
என் விலா எலும்பில்
சரியான ஆசான்தான்
இல்லையோ என்ற 
சந்தேகம் எனக்கு
வளைந்த பெண் பற்றி 
வகுப்பெடுத்தவன் நான்
நீ கொஞ்சம் உடம்பைக்குறை
என்றால்
நீ கொஞ்சம் சதை வை
என்கிறாய்
உலகில் என்றுமே நடக்க 
வாய்ப்பில்லாதவை இவை
போர் வீரன் என்று
பெயரெடுக்க நினைத்தால்
என்னை சரியான 
‘போர்’ வீரனாக்கி விடுகிறாய்
என்னுடன் விழிச்சண்டைக்கு வா
ஒற்றைக்கு ஒற்றையாய்
சற்றே பொறுத்திரு
இன்னும் கொஞ்சம் எனது
அம்பை கூர்மையாக்கிவிட்டு
வருகிறேன்
கூரியவற்றை எல்லாம் வெல்லும்
காதல் வீரனாய்..!



6 கருத்துகள்:

  1. ஆஹா.......உங்கள் காதல் விழியால் காத்திருப்பாள் கவலை வேண்டாம் சகோ...

    பதிலளிநீக்கு
  2. காதலிக்கறவர்கள் எல்லாம் போர் வீரர்கள்தானோ?

    பதிலளிநீக்கு
  3. உடம்பு குறைப்பது எல்லாம் இப்ப சாதாரண விசயமாயிற்று நீங்கள் விஜய் டிவி பாரப்பதே இல்லையோ .....

    மனம் இருந்தால் மாரக்கம் உண்டு

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான சிந்தனைகளுடன் கவிதையும் கரருத்தும் அருமை ! தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு