மனம் ஏற்கவும் மறுக்கிறது
நிராகரிக்கவும் தயங்குகிறது
அந்த மாயம்தான்
கடவுளோ
உன் மொழியை நான் அறியேன்
உன் பாலினமும் அறியேன்
இருக்குமிடமும் நான் அறியேன்
ஏதோவொன்றாய் நீ
அதுதான் கடவுளோ
குழந்தையின் சிரிப்பு
யாருக்கோ செய்யும் உதவி
யாரிடமோ பெறும் ஆறுதல்
ஏதோவொன்றில் நீ
அதுதான் கடவுளோ
உலகம் தோன்றிய
அந்த ஆரம்பப்புள்ளி
சிந்தையில் அடங்காத உருவம்
மனித எண்ணத்திற்கும் அப்பாற்பட்ட
ஏதோவொன்று
அதுதான் கடவுளோ
எந்த மதமும் இன்னொரு
மதக்கடவுளை ஏற்பதில்லை
ஏதோவொரு பெண்ணை
பார்த்த நிமிடத்தில் வரும் காதல்
மூத்தோர்களின் பயமுறுத்தலிலேயே
வரும் கடவுள் நினைப்பு
இதுபோல்
பல குழப்பங்களில் வாழும்
மனம்தான் கடவுளோ
அதனால்தான்
மனம் ஏற்கவும் மறுக்கிறது
நிராகரிக்கவும் தயங்குகிறது
அந்த மாயம்தான்
கடவுளோ..!
அவ்வ்வ்வ்வ்வ் விச்சுவும் கவிஞர் ஆகிட்டார்ர்ர்ர்ர்... வாழ்த்துக்கள் விச்சு அழகா எழுதியிருக்கிறீங்க...
பதிலளிநீக்குநாம் போடும் பின்னூட்டங்களில்கூட கடவுள் இருக்கலாம்:) பார்த்து பதில் போடுங்க கவனம்:)..
பதிலளிநீக்குஅதிரா கடவுள் எப்படியும் வருவாருன்னு தெரியும். நன்றி கடவுளே..!
நீக்குமனம் ஏற்கவும் மறுக்கிறது
பதிலளிநீக்குநிராகரிக்கவும் தயங்குகிறது
அந்த மாயம்தான்
கடவுளோ //
நல்லா இருக்கு....கவிதை.
மாயம்தான்
பதிலளிநீக்குகடவுளோ..!
கடவுள்கள் சிலையாய் அல்லது காட்டில் தனிமையாய் குலதெய்வங்களாய் இருந்தவரை ஒன்றுமே பிரச்சனையில்லை,கிம்பிட்டோம்,பூஜித்தோம் ,,,,,,,,அதை நிறுவனமயப்படுத்தும் போதுதான் பிரசனை உண்டாகிப்போகிறது/
பதிலளிநீக்குஅருமை நண்பரே
பதிலளிநீக்குகடவுளையும் மதத்தில் பெயரால்
பிரிவினை செய்யும்போதுதான்
பிரச்சனை தொடங்குகிறது
காணும் இடமெல்லாம் - மனதைப் பொறுத்து...!
பதிலளிநீக்குகற்பனைக்கு உயிர் கொடுத்துள்ளீர்கள் கவிதையாக ...
பதிலளிநீக்குஹா ஹா அப்படியே விலாவாரியாக போட்டு உடைத்து விட்டீர்களே சகோ ! அதே அதே அத்தனையும் உண்மைதானே. கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் அல்லவா?ம்..ம்..ம்.. ரசித்தேன் நன்றாக வந்துள்ளது. நன்றி வாழ்த்துக்கள் .....!
பதிலளிநீக்குஅருமையான கவி ரசித்தேன். பொறாமையுடன் அல்ல.
பதிலளிநீக்கு