வெள்ளி, அக்டோபர் 2

குழந்தைநிலா ஹேமா

குழந்தைநிலா ஹேமா என்ற பெயரை பதிவுலகில் அனைவரும் அறிந்திருப்பர். வானம் வெளித்த பின்னும் என்னும் வலைப்பூவில் 2008 முதல் கவிதைகள் எழுதி வருகிறார். கவிதைகள் மட்டுமே என்பது கூடுதல் சிறப்பு. இவரின் வார்த்தை பிரயோகங்களைக்கண்டு வியக்காதோர் இருக்க முடியாது.ஒவ்வொரு கவிதையும் படிப்போரின் மனநிலைக்கு ஏற்ப அவர்களுக்கே பொருந்தியதுபோல இருக்கும். தமிழில் இவ்வளவு வார்த்தைகளா என நம்மை ஆச்சரியப்படவும் வைக்கும். இளமை விகடன், திண்ணை, அதீதம்,உயிரோசை, இன்னும் பல இதழ்கள், இணையதள இதழ்கள் போன்றவற்றில்இவருடைய கவிதைகள் வந்துள்ளன. இவருடைய கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இனிப்பு ரகம்.காதல், ஈழம், நகைச்சுவை, குடும்பம், நட்பு, விரக்தி என பல தலைப்புகளில் கவிதைகள் எழுதி திகைக்க வைப்பவர்.இவர் எட்டு வயதிலேயே எழுதிய வாழ்த்து மடல் இதோ...

சின்னஞ்சிறு
பறவை சிறகிருந்தால்
பறந்துவரும்
இன்னும் பிரிந்திருக்க
இயலாமல் வாடுகின்றோம்
அன்பே பிறந்தீரே
அனைத்தும் பெற வாழ்த்துகின்றோம்..
அன்பு மனம் அண்ணா
ஆசை மனம் அக்கா
இங்கிருந்து வாழ்த்துகிறோம்
அங்கிருந்து நலம் பெறுவீர்...

இவரின் முதல் கிறுக்கல் இதுதான். கவிதை வாசிப்பில் ஆர்வம் இருப்போர் இவரின் வலைப்பூ சென்று வாசியுங்கள். நிச்சயம் வியப்பில் ஆழ்ந்துதான் போவீர்கள். வலைப்பூவில்(இதழ்கள் தவிர்த்து) 700க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். இன்னும் இவரைப் பற்றி நிறைய எழுதலாம். தமிழின்மீது ஆர்வம் உள்ளவர்கள் குழந்தைநிலா ஹேமாவை வாழ்த்துங்கள். அவரைப்பற்றிய சுய அறிமுகத்தில் புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. .நட்போடு ஹேமா.உயிரோசையில் இவர் எழுதிய அவள் அப்படித்தான் எனும் கவிதை

விதிகளை நிர்ணயிக்கும்
நூதன மாத்திரைகளை
விழுங்கியிருந்தாள் அவள்.
வேம்புக் குயில்
மூங்கிலுக்குள் சாரம் அனுப்ப
சுவைத்தவன் நாக்கில்
ஒட்டிக்கொள்கிறது கசப்பு.
மூக்கடைத்திருப்பவனிடம்
மணங்கள் பற்றிக் கேட்டால்...
சகாயங்களேதும் செவிநுழையா
சஞ்சாரப்  பொழுதுகளில்
வெள்ளைச்சுருட்டு
சுட்டுப் புகைக்கிறாள்
சூரியக் கண்களில்.
மூங்கிலிசைத் துவாரம்
நொதித்து நிறம்மாற
நோய் எதிர்ப்புச்சக்தி
அதிகமாய்த் தேவையென
முறைப்பாடு வைக்கிறாள்
மாத்திரைக்கும் 
பின் அவனுக்குமாய்!!!

இதுபோன்ற அறுசுவைகளையும் ருசிக்க வானம் வெளித்த பின்னும் என்னும் அவரின் வலைப்பூ சென்று வாசியுங்கள். நன்றி...

4 கருத்துகள்:

 1. நல்ல அறிமுகம்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஹேமா கவிதை கட்டுரை மட்டுமல் ல வானொலியிலும் வலம் வரும் புலமை மிக்க ஒரு ஈழன பாடைப்பாளி!ஆனால் இன்று தந்தையின் பிரிவால் முகநூல்/வலை என்று வனவாசம் ஆனாலும் விரைவில் காண்போம் நிலாவை!

  பதிலளிநீக்கு
 3. வானம் வெளித்த பின்னும் வலைபதிவு சென்று வந்தேன் அருமையான கவிஞர் ... அவரின் தந்தையின் பிரிவு அவரை ஆறா துயரில் ஆழ்த்தியுள்ளதை அறிந்து வேதனையுற்றேன் ... அவரின் திறன் வளர வாழ்த்துக்கள்...
  https://www.scientificjudgment.com/

  பதிலளிநீக்கு