சனி, செப்டம்பர் 17

பேனா நடத்திய பாடம்

என் பேனா குல்லா (மூடி) அணிந்திருக்கிறது.
எனவே இஸ்லாமியனா?
திறந்தால் முள் முடி (நிப்) தரித்திருக்கிறது
எனவே கிறிஸ்துபிரானா?
எழுதினால் பட்டை அடிக்கிறது
எனவே சைவனா?
மூடியின் கிளிப் நீண்ட நாமம் போலிருக்கிறது
எனவே வைணவனா?
மூடியுடன் கூடிய பேனாவை முழுமையாகப்
பார்க்கிறேன்...ஒன்று (1) என்று தோன்றுகிறது.
சிந்தித்துப் பார்க்கிறேன்...
எல்லாமே ஒன்று என்று தோன்றுகிறது.
                      
                           - கவியரசர் அப்துல் காதர்          
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக