சனி, செப்டம்பர் 24

இந்தியத் திட்ட நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

                  இந்தியா  ஒரு  பெரிய  நாடு.  எனவே  ஒரே  மாதிரியான    நேரம் தேவைப்படுகிறது.  இல்லையெனில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நேரம் இருக்கும். இதனால் அதிகப்படியான குழப்பங்கள் ஏற்படும். இந்த குழப்பத்தைத் தீர்க்க அலகாபாத் வழியாகச் செல்லும் தீர்க்க கோடு (82.30 டிகிரி) இந்தியத் திட்ட நேரத்தைக் கணக்கிட எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?


முதலில் GMT( GREENWICH MEEN TIME)  பற்றித் தெரிந்து    கொள்ளலாம்.      வலது   பக்கத்திலுள்ள போட்டோவானது  'Meridian Line' ல் எடுக்கப்பட்டது  ( Thanks : "National Maritime Museum')    இங்கிலாந்திலுள்ள     கிரீன்விச்    என்ற     இடத்தை    GMT யாகக்    கணக்கிட         1884 ல் INTERNATIONAL MERIDIAN CONFERENCE ல் தீர்மானிக்கப்பட்டது.  MERIDAIAN (LATIN WORD : MERI - MIDDLE,   DIEM - DAY)  என்பது ஒரு கற்பனைக் கோடு.  தீர்க்ககோட்டினை (LONGITUDE)  PRIME MERIDIAN ( '0' டிகிரி LONGITUDE) எனவும் அழைக்கலாம். எனவேதான் முற்பகலை AM (ANTE MERIDIAN)  எனவும் , பிற்பகலை  PM  (POST MERIDIAN)    எனவும் அழைக்கப்படுகிறது.  வடதுருவத்திலிருந்து தென்துருவம் நோக்கிச் செல்லும். '0'   டிகிரி தீர்க்க கோடு   கிரீன்விச்சிலுள்ள    'OLD ROYAL ASTRONOMICAL OBSERVATORY' வழியாகச் செல்கிறது.  எனவே இது உலகநேரமாகக் கணக்கிட எடுத்துக்கொள்ளப்படுகிறது. கிரீன்விச்சில் 'TRANSIT CIRCLE' என்ற தொலைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைத்தவர் 'Sir George Biddell Airy" ஆவார்.
     
                   கிடைமட்டமாகச் செல்லும் கோடுகள் அட்சக்கோடுகள் எனவும், செங்குத்தாகச் செல்லும் கோடுகள் தீர்க்க கோடுகள் எனவும் அழைக்கப்படும். தீர்க்க கோடுகள்  மொத்தம்  360 உள்ளன.   ஒரு தீர்க்ககோட்டிற்கும் மற்றொரு தீர்க்ககோட்டிற்கும் இடையே  உள்ள நேர  வித்தியாசம்  4  நிமிடங்கள்.(360 * 4 =1440)   ஒரு   மணி நேரத்திற்கு  60 நிமிடங்கள் (1440/60 = 24 Hrs).
  
                   இந்தியாவில்  WESTERNMOST POINT   குஜராத்   (68  டிகிரியில் அமைந்துள்ளது),     EASTERNMOST POINT அருணாச்சலப் பிரதேசம்       ( 97 டிகிரியில் அமைந்துள்ளது). இரண்டுக்கும்    இடைப்பட்ட இடம் (68 + 97=165 / 2 =82.5) உத்திரப்பிரதேசத்திலுள்ள அலகாபாத் ஆகும். 

                இது 82.5 டிகிரி தீர்க்ககோட்டில் அமைந்துள்ளது. ஒவ்வொரு தீர்க்ககோட்டிற்குமுள்ள நேர வித்தியாசம்  4 நிமிடங்கள். எனவே 82.5 * 4 = 330/60= 5.5 மணி நேரம்  இந்தியத் திட்ட நேரமாகக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தியாவானது கிரீன்விச் நேரத்தில் 5.5 மணி நேரம் கூடுதல் வித்தியாசமுள்ளதால்  இதனுடன்  '+' சேர்க்கப்படுகின்றது. எனவே இந்தியத்திட்ட நேரம் +5.30 ஆகும்.

7 கருத்துகள்:

  1. உடான்ஸ் திரட்டி மூலமாக உங்கள் தளத்தை அறிந்தேன். நீண்ட நாட்களாக எனக்கு நேர நிர்ணயிப்பில் குழப்பம் உண்டு. மிக மிக எளிய தமிழில், குழப்பமின்றி, சுவாரஸ்யமாக அளித்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நன்றி புதுகை அப்துல்லா அவர்களே...

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான விளக்கம்.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் விச்சு - அருமையான விளக்கம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. இன்னும் நிறைய தகவல்களை பதிவிடுங்கள் எதிர்பார்க்கிறோம்,மிகவும் அருமை நன்றி.........

    பதிலளிநீக்கு