சனி, செப்டம்பர் 24

பெண்ணின் ஏக்கம்...

அள்ளிக் கொடுக்க வேண்டாம்
அரண்மனையில் பாகம் வேண்டாம்
அன்பான வார்த்தை சொல்லி - என்னை
அரவணைத்தால் போதும்.

பனங்காசு கொடுக்க வேண்டாம்
பட்டுப்பாய் போட வேண்டாம்
பாசமுள்ள வார்த்தை சொல்லி - என்னை
பராமரிச்சா போதும்.
சீர்வரிசை செய்ய வேண்டாம்
சிப்பக்கட்டு கட்ட வேண்டாம்
சாந்தமான வார்த்தை சொல்லி - என்னை
சிரிக்கவச்சா போதும்.
                                        -  எங்கோ படித்தது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக