வியாழன், செப்டம்பர் 29

வேடிக்கையான தற்கொலை...

       ஹாய் ஃபிரண்ட்ஸ்....  வாழ்க்கையில நிறைய பிரச்சினை. அவனவன் லெவலுக்கு பிரச்சினைகள் இருக்கு. பிரச்சினை இல்லாத மனிதன் யார்?
கண்டிப்பாக யாருமில்லை... பிரச்சினை இல்லையென்றால் அவன் மனிதனும் இல்லை. அப்போ கடவுளா? சாரி.. அவருக்குத்தான் நிறையப் பிரச்சினைகள் என நமது புலனாய்வுத்துறை கூறுகிறது. மனிதனுடைய பிரச்சினைகளை நினைத்தே அவருக்குப் பிரச்சினைகள்.
     இப்போ உனக்கு என்னதான் பிரச்சினை? என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.
    சில பேர் பிரச்சினைகளை நினைத்து தற்கொலை முடிவைத் தேடுகின்றனர். பாவம் அவர்களுக்குப் புரிவதில்லை. தற்கொலை செய்தவுடன் ஆவியாக மாறி அவர்கள் படும் பிரச்சினைகள் இருக்கிறதே... அதுக்கு இதுவே பரவாயில்லை!! என நினைக்கத் தோணும். 
       முதலில் ஆவி DRESS அணிந்துகொள்ள முடியாது. எனவே அது மானப் பிரச்சினை. கால் கிடையாது. வால் மாதிரி ஏதோ தொங்கும் ( நன்றி : தமிழ் சினிமாக்கள்)  இது PRESTIGE( குக்கர் அல்ல) பிரச்சினை. அப்புறம் சாப்பிட என்ன செய்ய... அது ஒரு பிரச்சினை. அப்புறம் ஜோடியை எப்படி செலெக்ட் செய்வது? அது ஆணா? பெண்ணா? எனக் கண்டுபிடிப்பதே கஷ்டம் . அதையும் மீறி முடி நீளமாக இருப்பதால் இது பெண்தான் என முடிவெடுத்து ஜோடி சேர்ந்தாலும்  அடையாளம் வைத்துக் கொள்வது கஷ்டம். நம் பிகரை நமக்கு முன்னாடியே எந்த ஆவியாவது  லவட்டிக்கொண்டு போனாலும் கண்டுபிடிப்பது மகா கஷ்டம். அப்புறம் வீடு என்று சொன்னால் முருங்கை மரத்தில் தொங்கியே வாழ்வது பெரும் பிரச்சினை. அப்புறம் தேவையில்லாமல் யாரையாவது (பேய்)பிடித்துக் கொண்டால் அந்தக் கிராமத்துக் கோடாங்கி அசிங்க அசிங்கமாகத் திட்டி சாட்டையாலே அடிப்பான். நாம கேட்ட மாதிரி சொல்லி அவன் எல்லாத்தையும் லவட்டிக்கிடுவான். அப்பப்பா!!! எத்தனை பிரச்சினைகள். இதுக்கு நாம தற்கொலை பண்ணாம எப்படியாவது வாழ்ந்து காட்டிரலாம். (டேய் நான் ஒழுங்கா இருந்தேன்.. தேவையில்லாமல் உன் கட்டுரையைப் படித்து... ஆவியா போனாலும் பரவாயில்லை...நான் தற்கொலை செய்யப் போகிறேன் என நீங்கள் முடிவெடுத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!!
அவர்களுக்கும் சில டிப்ஸ். எப்படி தற்கொலை செய்வது? கீழே படங்களைப் பாருங்கள்... முடிவெடுங்கள் Thanks : Google Images

அய்யோ!! பாம்பு
சிங்கம் பிளீஸ்.. என்னை கடி


துப்பாக்கி, கோடாரி,கத்தி, விஷம் அப்பவும் சாகலனா? குண்டு இருக்குல.. எங்க இருக்கு? டிக்கிக்கு கீழ பாரு.. அதான் டிக் டிக்'னு சத்தம் கேட்குதா!!!
நீங்களே உங்களை டேஸ்ட் பாருங்க

யாராவது வெட்டி விடுங்கப்பா...
சிரி பிளீஸ்

டாக்டர் OPERATION செஞ்சாதான் சாவாங்களா?

நான் போறேன்

செத்தே தீருவேன்

5 கருத்துகள்:

 1. சிரிப்பு தாங்க முடியலிங்க...

  உண்மையில் குபீர் சிரிப்பை வரவைக்கிறது..
  படங்கள்...

  பதிலளிநீக்கு
 2. சிரிப்பு வரவைக்கிற படங்களை தேடித் தேர்ந்தெடுப்பதே பிரச்சினை தான்...

  என்ன நண்பரே... உண்மைதானே...

  படங்கள் சூப்பர்...ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
 3. VorpX Crack is an easy method to transfer 3D videos, images, and games. With this program, you can play virtually anything and is simple to use for anyone, even beginners. It is loaded with powerful capabilities and features and also defaults to allow 3D viewing. The software allows you to convert your videos, photos, and games into 3D stereo. The most frequently used area to perform client-related jobs is VorpX Performance Guide. It’s extremely easy to use with any headset, regardless of the condition of the headset.
  SUPERAntiSpyware Professional Key
  Steganos Safe Crack
  VorpX Free Download
  ABL3 VST Crack

  பதிலளிநீக்கு