வெள்ளி, செப்டம்பர் 30

இராஜை நந்தனின் கவிதைகள்...II

இராஜை நந்தனின் கவிதைகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளன. அவற்றில் சிலவற்றின் தொகுப்பு அவரின் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றது.

    
பேச நினைத்த அத்தனையும்
வென்று விடும் மௌனம்
நமக்கான சந்திப்பில்
                      -  செம்மலர்

ஊர் மொத்தம் குடங்களோடு
நான் மட்டும் காகிதங்களோடு
மழை!!!
                        -  தினமலர்  

அனுமதியின்றி
அத்து மீறல்
அறையுள் காற்று!!
                         - களம்அனுமதியில்லா இடத்தில் வீடோ?
இடித்து இடித்து போகிறதே அலை
குழந்தையின் மணல் வீடு!!
                                - செம்மலர்
  அம்மா வைத்துவிட்ட
திருஷ்டி பொட்டு
அழகாய் ரசித்தனர் ஊரார்!!


எதுவுமில்லையெனினும்
தந்துவிட முடிகிறது
புன்னகை!!
                              - களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக