ஞாயிறு, செப்டம்பர் 25

மாறிப்போச்சு...

பார்த்து ரொம்ப நாளாச்சு
தூரக்காற்றில்
மெல்ல சலசலக்கும்
ஒற்றைப்பனை.

பால்காரனின்
வருகையில்
ஒலியெழுப்பி
கன்றுக்குட்டிகளின்
மடிமுட்டலில் அடங்கும்
கொல்லை பசுக்கள்.

ஆலமரத்தின் கீச்சுக்களில்
கண்விழிக்கும்
சாவடிதூக்கம்

அறுப்பு... நடவுக்கு
ஆட்களை
சத்தம் காட்டி
போகும்
கொத்தச்சிகள்.

அத்தனையும்
தொலைந்தோ,
தொலைக்கப்பட்டோ
ஆலைச்சங்கும்
ஆளேற்றிப்போகும்
வண்டிகளுமாய்
எங்கள் ஊரும்!!!
                              -  இராஜபாளையம் நந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக