தூரம் எனினும்
தொட்டுவிட முடிகிறது
குளத்தில் நிலா!
----------------------------------------எந்தப்
பரிசல்
ஏற்றிவரும்?
நீரற்ற குளத்தில்
விளையாடிக் கிடந்த
குழந்தையின்
குதூகலங்களை....
-----------------------------------------நான் அறிந்த
முதல் கவிதை
எழுதியதாக இல்லாமல்
பார்த்து ரசித்ததாக
மட்டுமேயிருந்தது
மழை!!!
------------------------------------------இந்த
நகரத்தில்
சோடியம் விளக்கு
தெருக்களில்
தன்னை
எங்கு
தொலைத்திருக்கும்?
மின்மினிகள்!
-------------------------------------உங்களை
எனக்கும்
என்னை
உங்களுக்குமானதொரு
அறிமுகத்தில்
அநேகமாய்
போலியாகவே
இடம்பெயர்கின்றன...
புன்னகைகளும்
சில வார்த்தைகளும்!!
------------------------------------------அது என்ன நுணுக்கம்
நீ பேசப் பேச கூடவே அசைந்தாடும்
உன் காது வளையங்கள்!
மழை பெய்த
இரவின்
தவளைச்
சப்தங்களை
புதைத்து
எழும்பியிருக்கின்றன
ஊருணி வீடுகள்!
-------------------------------Thanks : Google images
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக