புதன், செப்டம்பர் 28

டிகிரியோ டிகிரி

               வெப்பநிலை அளவிடுதல் பற்றிய ஒரு சிறப்பு வெளியீடு. என்.சொக்கன் அவர்கள் எழுதிய கட்டுரை உதவியுடன் இந்த வெளியீடு. ஒரு இடத்தில் இரண்டு   மாணவர்கள்   அமர்ந்திருக்கிறார்கள்.    ஒரு பெரியவர் வருகிறார்.இன்னைக்கு ரொம்ப வெயிலா இருக்கே!! என்கிறார். முதலாமவன் ஒரு கருவியை உற்றுப் பார்க்கிறான்.
             ஆமா, இன்னிக்கு வெப்பநிலை 40 டிகிரி என்கிறான். இரண்டாமவன் இன்னொரு கருவியைப் பார்க்கிறான். இன்னிக்கு வெப்பநிலை 104 டிகிரி என்கிறான்.
             இதென்ன கூத்து?  சரியான வெப்பநிலைதான் என்ன?
            இரண்டுமே சரிதான்.
            உலகம் முழுக்க வெப்பநிலையைக் குறிப்பிட பலவிதமான அளவைகள் உள்ளன. அவற்றில் மிகப் பிரபலம் இரண்டு - பாரன்ஹீட் மற்றும் செல்சியஸ்.
          ஜெர்மனியைச் சேர்ந்த 1686ல் பிறந்த டேனியல் காப்ரியேல் ஃபாரன்ஹீட்(Daniel Gabriel Fahrenheit) என்பவர், வெப்பநிலையைச் சரியாகக் கணக்கிட பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு தெர்மாமீட்டரைக் கண்டுபிடித்தார்.
          சில வருடம் கழித்து, ஸ்வீடனைச் 1701ல் பிறந்த சேர்ந்த ஆண்ட்ரஸ் செல்சியஸ்(Anders Celsius) வெப்பநிலையைக் கணக்கிட இன்னொரு தெர்மாமீட்டரைக் கண்டுபிடித்தார்.
     இரண்டுமே சரி.
      ஆனால் நம்பர் விஷயத்தில் ஒத்துப்போகவில்லை. உலக அளவில் இரண்டு முறைகளும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
        உதாரணமாக , தண்ணீர் பனிக்கட்டியாக உறைகிறது. இப்போது என்ன வெப்பநிலை?
   ' பூஜ்ஜியம் டிகிரி' என்கிறார் செல்சியஸ். அதேவெப்பநிலையை ஃபாரன்ஹீட் '32 டிகிரி' என்கிறார்.
    இப்போது தண்ணீரைக் கொதிக்க வைக்கிறோம். ஆவியாக மாறிவிடுகிறது. இப்போது வெப்பநிலை செல்சியஸ் '100 டிகிரி' என்கிறார். ஃபாரன்ஹீட்" 212 டிகிரி" என்கிறார்.
          இந்த குழப்பத்தைப் போக்க வெறுமனே 'டிகிரி' என்று சொன்னால் போதாது. 'டிகிரி செல்சியஸ்' அல்லது 'டிகிரி ஃபாரன்ஹீட்' எனத் தெளிவாகச் சொல்லவேண்டும். ( Thermometer with Fahrenheit and Celsius units : Right side Image)


இதைக் கணக்கிட எளிய ஃபார்முலா:
ஃபாரன்ஹீட்டிலிருந்து செல்சியஸ்
[°C] = ([°F] − 32) × 59
உதாரணமாக , 100 டிகிரி ஃபாரன்ஹீட் என்றால்
[செல்சியஸ்] = (100 - 32 )* 5/9 = 37.8 டிகிரி
இதேபோல்  செல்சியஸிலிருந்து ஃபரன்ஹீட்டுக்கு மாற்ற
[°F] = [°C] × 95 + 32
இதேபோல் கெல்வினிலிருந்து செல்சியசுக்கு மாற்ற
[°C] = [K] − 273.15
செல்சியஸ் to கெல்வின்
[K] = [°C] + 273.15
செல்சியஸ் to ரான்கைன் (Rankine)
 [°R] = ([°C] + 273.15) × 9⁄5
ரான்கைன் to செல்சியஸ்
[°C] = ([°R] − 491.67) × 59.
     4 கருத்துகள்:

 1. பெயரில்லா06 செப்டம்பர், 2012

  I gοtta admit, I аm mοre angered by the “generic
  cοmmenteг” than by the blаtant spammer.
  Why? yоu might аsκ, Because
  at least the obvious spammer is more oρen anԁ honеst about their intentiοnѕ!
  Ӏ know ωhо they are. Τhe so called generic commentеr іs a liar and а
  charlatan You can ρrobаbly see that I haѵe verу ѕtrong opinіons toward this group οf people
  Here is my page ; height insoles

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா06 செப்டம்பர், 2012

  Нi, yеѕ this pіece of writing iѕ genuіnelу fastidіous and I
  have leaгned lot of things from іt regarԁing blоgging.

  thanks.
  Look at my web-site ... tights

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா11 செப்டம்பர், 2012

  This is a genuinely inѕpiring articlе.
  Ι гeally am truly imprеѕsed when гeading your work.

  Yοu come up with useful stuff. Keep it up.
  Keep blogging. Really looking foгward
  to seeing уоur next posting.
  Here is my web-site Insoles

  பதிலளிநீக்கு
 4. நல்வணக்கம்!
  திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
  "வலை - வழி - கைகுலுக்கல் - 1"

  இன்றைய வலைச் சரத்தின்
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

  வாழ்த்துகளுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  http://youtu.be/KBsMu1m2xaE

  (எனது இன்றைய பதிவு
  ("கவி ஒளி" அருட்பெருஞ்சோதி வள்ளலார் / "தென்னகத்து தென்றல்" கண்டு இன்புற்று
  படித்தது கருத்திட வேண்டுகிறேன் வேண்டுகிறேன். நன்றி!)

  பதிலளிநீக்கு