நாம் படிக்கும்போது கிமு - கிபி பற்றிய குழப்பம் ஏற்படும். கிமு என்பது கிறிஸ்து பிறப்பிற்கு முன்(Before Christ), கிபி என்பது கிறிஸ்து பிறப்பிற்கு பின் (After Christ) ஆகும்.
BC - BEFORE CHRIST
AD- ANNO DOMINI (சில பேர் தவறுதலாக AFTER DEATH எனச் சொல்வதுண்டு)
ANNO DOMINI NOSTRI JESU CHRIST இது லத்தீன் சொல் ஆகும். இதனுடைய அர்த்தம் என்னவென்றால் "THE YEAR OF OUR LORD JESUS CHRIST" என்பதாகும்.
![]() |
Dionysius Exiguus |
இதனை முதலில் ரோமில் பிறந்த Dionysius Exiguus என்ற பாதிரியார் அறிமுகப்படுத்தினார்.
BC 1 & AD 1என்பதிலிருந்தே இம்முறை ஆரம்பிக்கும்.
தமிழில் கிமு மற்றும் கிபி என்பதை வருடம் எழுதுவதற்கு முன்புறம் எழுதுவோம். கிமு 500 அல்லது கிபி 500 என்றுதான் எழுதுவோம். ஆனால் ஆங்கிலத்தில் கிமு (BC - இது ஆங்கில வார்த்தை கிடையாது. 2000BC) என்பதை வருடத்தின் பின்புறமும், கிபி (AD - இது LATIN வார்த்தை AD 2000) என்பதை வருடத்தின் முன்புறமும் எழுதுவதுதான் முறை. ஆனால் பொதுவாக இரண்டையுமே வருடத்தின் பின்புறம் எழுதுவது நடைமுறையில் உள்ளது.
தற்போது கிமு , கிபி என்பதற்கு பதிலாக CE (COMMON ERA) என்பதை சில பேர் நடைமுறைப்படுத்துகின்றனர் (2009 AD is 2000 CE ; 500 BC is 500 BCE).
சில மாணவர்களுக்கு படிக்கும்போது கிமு 200 என்பது கிமு 300யை விட முன்னாடியா? அல்லது பின்னாடியா? என்ற குழப்பம் ஏற்படும். இந்த அட்டவணையைப் பார்த்தால் எளிதாகப் புரியும்.
அன்பின் விச்சு - புரியும் படியாக படம் போட்டு விளக்கியமை நன்று. CE பற்றி இன்னும் விளக்கலாமே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு