சனி, அக்டோபர் 1

SR கிருஷ்ணமூர்த்தி...தடைகளைத் தாண்டி

        நமக்கு ஒரு கட்டை விரல் மட்டும் இல்லையென்றால்... கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!!.சரி ஒரு கையே இல்லையென்றால்? அய்யோ அவ்ளோதான்!! நாம் அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து விடுவோம். இங்கு ஒருவர் இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாமல் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் வாழ்வில் ஜெயித்துக் காட்டிக்கொண்டிருக்கிறார்.
நான் கடவுள் படத்தில் நடித்த  Sri S.R.கிருஷ்ணமூர்த்தி'தான் அவர்.இவர் 07/05/1946 ல் பிறந்தவர். தற்போது கோயம்புத்தூரில் குடியிருந்து வருகிறார்.

               பள்ளிப் படிப்பே கிடையாது. ஆனால் ஹோமியோபதியில் டிப்ளமோ,   ஹிந்தி பண்டிட்,    சமஸ்கிருதத்தை    நன்கு கற்றவர்,  சிறந்த vocalist... இன்னும் இன்னும்... இவர் வாங்கியுள்ள பாராட்டுக்களும்  பட்டங்களும்   நிறைய.   அவை...

கலைமாமணி - 2005 by Tamilnadu Govt
சங்கீத பூஷணா by Kamataka Sangeetha Academy
LIMBLESS TITAN OF MUSIC by the Commissioner for Endowments,Andhara pradesh
'BEST VOCALIST' Award of Music Academy
'LAYA LAKSHIYA LAKSHANA VIDHWAN' at Shanmughananda Sabha,Bombay
சங்கீதத் திலகம்' at Villupuram
'SWARA MANDALA' at Chennai
'LIMBLESS MASTREO OF MUSIC' at Hyderabad
'MANA VIDHWAN' at Salem
'TRIUMPH OF SPRIT OVER MAHER' at Delhi
An approved up-graded Artiste of AIR fOR Music and Drama
National Award Winner (2001)
State Award Winner (2001)

         இவரைப் பார்த்து யாரும் பரிதாபப்பட்டால் இவருக்கு பிடிக்காது.    ஆனால் இன்றைய   இளைஞர்கள்  இவரை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டால் அதுதான் இவருக்கு நாம் செய்யும் மரியாதை. நாமும் குறையுடைய குழந்தைகளை மதிப்போம். அவர்களின் திறமைக்கு வாய்ப்பளிப்போம்.
    "Every child is a child First          Disability is next"

1 கருத்து: