திங்கள், அக்டோபர் 17

வேலையில்லாதவனின் டையரி

பெயர் : வேலையில்லாதவன்
பிறந்த தேதி : கல்யாணம் முடிஞ்சிருந்தா இரண்டு பிள்ளைகள் இருக்கும்
முகவரி : வெட்டி ஆபிஸர்'னா எவனாயிருந்தாலும் கரெக்டா சொல்லிடுவான்
சாதி : சொன்னா மட்டும் வேலை கிடச்சுருமாக்கும்
படிப்பு : படிச்சு வாங்கின பட்டம் - 'எம் ஏ'
               கிடச்ச பட்டம் - வீட்ல 'தண்டச்சோறு'
               கடைக்கு போனா 'கடங்காரன்'
               ஊர்ல 'தறுதல'
               ப்ரெண்ட்ஸ்குள்ள 'வெட்டிஆபிசர்'
               மாமா பொண்ணுகிட்ட 'ஊர் சுத்தி' 
எக்ஸ்ட்ரா குவாலிபிகேஷன்: நிறைய அறிவு இருக்கு(அது யாருக்கும் வேண்டாமாம்)
பொழுதுபோக்கு : எல்லா கப்பல் வியாபாரிக்கும்(கம்பெனிக்கும்) விண்ணப்பம் அனுப்புவது, காலையில டீக்கடைக்கு போனா அம்புட்டு பேப்பரையும் ஒருத்தரையும் படிக்கவிடாம படிக்கிறது, ரோட்ல போற பொண்ணுங்ககிட்ட சந்தோசமா திட்டு வாங்கிறது.
எதிர்பார்ப்பு :    காலில்லாத   ஒருத்தன்   கால்பந்தாட்டத்த   பார்க்கிற    மாதிரி தபால்காரன எதிர்பார்ப்பது.
எதிர்கால லட்சியம்  : வேலை கொடுக்கிறவனுக்கு கோவில் கட்டணும்.
எப்படியாவது ஒரு வேலையில சேர்ந்து  நல்லதா ஒரு சட்டை எடுக்கணும்.எம்பிளாய்மெண்ட் ஆபிஸை ஹோட்டலா மாத்தனும் ( ஒரு 10 பேருக்காவது வேலை கிடைக்கும்)
பொறாமை : ஹோட்டல கிளீன் பண்ணும் சின்னப்பையன் கூட நிறைய சம்பாதிப்பது.
பிடித்த சினிமா : வேலைக்காரன்.
பிடித்த நடிகர்கள் : ஹீரோவுடன் சுத்தும் நண்பர்கள் குரூப்(அவங்கதான் எப்பவும் வேலையில்லாம இருப்பாங்க)
பிடித்த இடம் : டீக்கடை, ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கும் கட்டைச்சுவர்( அத வளரவிடாம மெயிண்டெயின் பண்றோம்)
பிடித்த நண்பர்கள் : என்னைப்போல் ஒருவன்( நிறைய இருக்காய்ங்க)
எரிச்சலான வார்த்தை : 'இன்னுமா வேலை கிடைக்கல' 
பிடிக்காத விசயம் : 'வேலை காலி இல்லை' விளம்பர போர்டு.
ஆறுதலான விசயம் : என்னவிட நிறைய படிச்சுட்டு சும்மா சுத்துறவங்கள பார்க்கும் போது.
மேற்கண்ட விபரங்கள் அனைத்தும் உண்மை எனவும், இதை எங்க வேணுமுன்னாலும் சத்தியம் செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்.

5 கருத்துகள்:

 1. மேற்கண்ட விபரங்கள் அனைத்தும் உண்மை எனவும், இதை எங்க வேணுமுன்னாலும் சத்தியம் செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்///உறுதி கூறினா மட்டும் வேல கெடைச்சிடுமாக்கும்?சொந்தமா ஏதாச்சும் பொழைக்கிறதுக்கு வழி இருக்கான்னு பாக்கலாமில்லை?

  பதிலளிநீக்கு
 2. நல்ல விஷயம் தான், வேலைக்கு அப்பளை பண்ணும் போது இந்த வலைபூ முகவரியை கொடுக்காதீங்க, வலைப்பூவுக்கு உபயோகிக்கும் மின்னஞ்சல் முகவரியையும் கொடுக்க வேண்டாம்...

  பதிலளிநீக்கு
 3. எம்பிளாய்மெண்ட் ஆபிஸை ஹோட்டலா மாத்தனும் ( ஒரு 10 பேருக்காவது வேலை கிடைக்கும்)//

  ஹா ஹா ... செம ... ஆதங்கம் அருமை

  பதிலளிநீக்கு
 4. ஆறுதலான விசயம் : என்னவிட நிறைய படிச்சுட்டு சும்மா சுத்துறவங்கள பார்க்கும் போது.//

  நிறைய விசயத்துல இப்படி தான் ஆறுதல் பட்டுக்குறோம்ம்ம்.. ஹா ஹா

  பதிலளிநீக்கு
 5. employment officku pona pakkathula erukura browsing centerla pooi apply panunga nu solluranga.. renewal panna kuda browsing thaan poganumaam.. 2 yearsku munadi register pannunathu ennum onlinla update pannula.. ketathuku puthusa onlinla register pannunga nu solluranga.. eathuku avangaluku office salary ellam.. pakkathu browsing centerku sambalam kudutha avunga correcta register panni kuduthuruvangala..
  www.busybee4u.blogspot.com

  பதிலளிநீக்கு