பாசமான பாட்டி!! |
யேய்!! புது டீவி
சின்னப் பையனின் குரல்
டேய் பேராண்டி
இது பாட்டியின் குரல்...
என் டிரெஸ் சூப்பரா இருக்கு
மூத்தவளின் குரல்
ஏட்டி! ஜானகி
இது பாட்டியின் குரல்...
நெக்லஸ் நல்லாயிருக்கு
மருமகளின் குரல்
அம்மாடி! வசந்தி
இது பாட்டியின் குரல்...
புது ஏசி' அம்சமாயிருக்கு
மகனின் குரல்
டேய்! குமரேசா
இது பாட்டியின் குரல்...
அவரவர் சந்தோஷம்
உயிரற்ற பொருளுக்காக!
பாட்டியின் சந்தோஷம்
கண்டுகொள்ளாத உறவுக்காக!!!
எல்லோர் வீட்டிலும் இப்படி ஒரு ஜீவன் அன்பிற்க்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது...
பதிலளிநீக்குகண்டுக்கொள்ளத்தான் ஆள் இல்லை...
தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅருமைன்னுன் ஒரு வார்த்தையில் அடக்கிட முடியாது :(
பதிலளிநீக்கு//அவரவர் சந்தோஷம்
பதிலளிநீக்குஉயிரற்ற பொருளுக்காக!
பாட்டியின் சந்தோஷம்
கண்டுகொள்ளாத உறவுக்காக!!!//
நெஞ்சை சுடும் நிஜம் நண்பரே..
மேலே நண்பர்
ILA(@)இளா சொன்னது போல்
அருமைன்னுன் ஒரு வார்த்தையில் அடக்கிட முடியாது
அவரவர் சந்தோஷம்
பதிலளிநீக்குஉயிரற்ற பொருளுக்காக!
பாட்டியின் சந்தோஷம்
கண்டுகொள்ளாத உறவுக்காக!!!
அருமை.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
பாட்டியின் சந்தோசத்திற்க்காக மட்டும் அல்ல.. பாசத்திற்காக ஏங்கும் பாட்டிக்காக.... இன்றைய கொண்டாட்டத்தில் முதியோர்களை மறந்துவிடும் உறவுகளை நாசுக்காக சாடியுள்ளீர்கள்.... அருமை நண்பரே!
பதிலளிநீக்குஉண்மை தான் நண்பரே ,பொருட்களின் மீதுள்ள பற்று மனிதத்திடம் .....
பதிலளிநீக்குஉங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தாருக்கும்
தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே
குழந்தைகளுக்கு
பதிலளிநீக்குதெரியாது
பகுத்தாய!
இதே தவறை
பெரியவர்கள் செய்வது தான்
உறுத்தும்....
அருமையான கவிதை
பதிலளிநீக்குதீபாவளி வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇன்று என் வலையில்
இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.
அவரவர் சந்தோஷம்
பதிலளிநீக்குஉயிரற்ற பொருளுக்காக!
பாட்டியின் சந்தோஷம்
கண்டுகொள்ளாத உறவுக்காக!!!
நயமாகவும்
நறுக்கெனவும் கேட்டீர்கள்..
அருமை..
சிந்திப்போம்...
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...
பதிலளிநீக்குஇனிய நட்புகளுக்கும் நேசமிகு நட்புக்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதிருமதி.சாகம்பரி சொன்னது: "நண்பர் விச்சுவின் வலைப்பூவில் முதியோர் பற்றிய இந்த பதிவை படியுங்கள். பாசத்திற்கு ஏங்கும் பாட்டி"
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2011/11/blog-post_06.html
- நன்றி.