திங்கள், அக்டோபர் 3

வண்ணச்சுவை

        சில காய்கறிகள் நல்ல அடர்த்தியான வண்ணங்களைக் கொண்டிருக்கும். சிலவற்றில்  பலவிதமான  சுவைகள்  இருக்கும்.    ஒவ்வொரு   வண்ணமும், சுவையுமே உடல் நலத்திற்கு நல்லது. வண்ணக்காய்கறிகள் கொண்டிருக்கும் நலன்கள் என்னென்ன?
பச்சை    -  ரத்த ஓட்டத்திற்கு நல்லது  - முட்டைகோஸ், கீரை வகைகள்.
சிவப்பு  -  Phytochemical நிறைய கொண்டிருக்கும். தோலுக்கு நல்லது.-  தக்காளி
ஆரஞ்சு  - கரோடினாய்டுகள் இருக்கும்.இது கேன்சர் வராமல் தடுக்கவும்,          வைட்டமின்கள் A அதிகமாக இருக்கும்  - கேரட், ஆரஞ்சு, பூசணி
வெள்ளை - வைரஸ் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டிருக்கும் - வெங்காயம், வெள்ளைப் பூண்டு.
மஞ்சள் - இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும், வைட்டமின்கள் C இருக்கும்  - பப்பாளி, அன்னாசிப் பழம்.
பல விதமான சுவைகளைக் கொண்டிருக்கும் காய்கறிகளின் நலன் என்ன?
துவர்ப்பு - ரத்தம் பெருக்கும், வியர்வை கட்டுப்படுத்தும் - வாழை, மா, அவரை
                     இது அதிகமானால் வாத நோய் வர வாய்ப்புண்டு.
இனிப்பு - தசை வளர்க்கும் -பழ வகை, கேரட், கரும்பு
                    இது அதிகமானால் எடை கூடும்.
புளிப்பு - கொழுப்புச் சத்தினைக் கொண்டிருக்கும் - எழுமிச்சை, தயிர்.
                    இது அதிகமானால் இரத்தக் கொதிப்பு, அரிப்பு ஏற்படும்.
கார்ப்பு  -  எலும்பு வளர்க்கும் - மிளகாய், இஞ்சி, மிளகு
                     இது அதிகமானால் குடல் புண் உண்டாகும்.
கசப்பு  -  நரம்பு பலமாகும் - பாகற்காய், சுண்டக்காய், வேப்பம் பூ.
                  இது அதிகமானால் மயக்கம் உண்டாகும், மேனி வறண்டு போகும்.
உவர்ப்பு - உமிழ்நீர் சுரக்கும் - கீரை, வாழை, சுரைக்காய்
                     இது அதிகமானால் தோல் நோய் உண்டாகும்.
       எனவே பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தனித்தனியாக உண்ணாமல் கலவையாக (SALAD) உண்பது நல்லது.
       
 நாம் BMI (Body Mass Index) பற்றி அறிந்து கொள்வதும் நல்லது. இதைப் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்து இருந்தாலும் இங்கு அதை ஞாபகமூட்டுவதாக இருக்கும்.
       உயரம் * உயரம்  = ?
      எடை   /    உயரம்  = ?

உதா: உயரம் 1.62 மீ எனவும் எடை 51 கி.கி எனவும் கொண்டால்
 1.62 * 1.62 = 2.62
 51 /  2.62  = 19.47
இப்போது எவ்வளவு எடை இருந்தால் ஆரோக்கியமான எடை எனப் பார்க்கலாம்.
< 18.5          - குறைவான எடை
18.5 - 24.9  - ஆரோக்கியமான எடை
25 - 29.9     -  அதிக எடை
30  - 34.9   - மிக அதிக எடை
>35            -  மிக மிக அதிகம்
 மேலேயுள்ள உதாரணத்தில் 19.47 என விடை கிடைத்ததால் அது ஆரோக்கியமான எடையாகும்.    
          அடுத்து இடுப்பு அளவினைக் கணக்கிடுவது எவ்வாறு?
HIP = தொப்புளின் மேல் உள்ள அளவு / தொப்புளின் கீழ் உள்ள அளவு 
உதா:
தொப்புளின் மேல் உள்ள அளவு  = 28
தொப்புளின் கீழ் உள்ள அளவு      = 40
HIP = 28 / 40
       =0.7
இது பெண்களுக்கு 0.7 எனவும் ஆண்களுக்கு 1 (ONE) எனவும்  இருந்தால் சரியான இடுப்பளவு ஆகும். 
      பதிவு பிடித்திருந்தால் கருத்தும், வோட்டும் போடவும்... நன்றி!!!

1 கருத்து:

  1. முதல் வருகை.முற்றிலும் தொடர்கிறேன்

    ஒவ்வொன்றும் அற்புதமான தகவல்கள் நண்பரே..

    வாழ்த்துக்களுடன்
    சம்பத்குமார்

    பதிலளிநீக்கு