திங்கள், நவம்பர் 7

அட்வைஸ் வேண்டாம்...ஐடியா கொடுங்கள்

ஓகே! போதும்... உங்க அட்வைஸ்
குழந்தைகளுக்கு நாம் அதிகம் தருவது அட்வைஸ். அது எளிமையானது.யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். வாழ்க்கையில் முன்னேற ஐடியா கொடுக்கத்தான் ஆளில்லை. குழந்தைகளை வாழ்ககையில் வெற்றிபெறச் செய்ய பெற்றோர்கள் முக்கியமாகத் தர வேண்டியது ஐடியா...ஐடியா...ஐடியா மட்டுமே.
ஒரு குழந்தை தனது ரிப்போர்ட்டில் 4 நூறுகளுடனும்,ஒரு 50 மதிப்பெண்களுடனும் வீட்டிற்கு வந்தால்,பெற்றோர் கேட்கும் முதல் கேள்வியே ஏன்? இந்த பாடத்தில் மட்டும் 50 மதிப்பெண் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தையின் எதிர்பார்ப்பு என்ன? மற்ற பாடங்களில் தான் பெற்ற 100 மதிப்பெண்களுக்கான பாராட்டாகத்தான் இருக்கும். அந்த பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் பெற என்ன காரணம்? அதை எவ்வாறு களைவது? இந்த ஐடியாவை பெற்றோர்கள்தான் தரவேண்டும். நாம் வெறுமனே குழந்தைகளை அதைச் செய், இதைச்செய் என்றுதான் சொல்கிறோமே தவிர அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதில்லை.
குழந்தைகளைப் பாரட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். பாராட்டுக்கு மயங்காதவர்கள் யார்தான் இருக்கிறார்கள். சின்னச் சின்ன செயல்களைக்கூட பாராட்டக் கற்றுகொள்ளுங்கள். இது அனைவருக்கும் பொருந்தும். மனைவிகூட பாராட்டைத்தான் எதிபார்க்கிறாள். நாம்தான் அதைச் செய்வதில்லை.
சில குழந்தைகள் சுமாராகத்தான் படிக்கும். ஆனால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியடையும். கீழேயுள்ள மதிப்பெண்களைப் பாருங்கள்.
ஆங்கிலம் - 200க்கு 39, கணக்கு - 175 க்கு 59, அறிவியல் 100 க்கு 45, புவியியல் - 75 க்கு 34, வரலாறு - 75 க்கு 20.
இவ்வளவு சுமாரான மதிப்பெண் வாங்கிய அந்த மாணவன் யார்? இந்திய விடுதலைக்காக இறுதிவரை போராடிய மகாத்மா காந்திதான் அவர்.(நன்றி : சிபி.கே.சாலமன்)
ஷிவ் கெரோ சொன்னது: வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை.அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாகச் செய்கிறார்கள்.
அனுபவத்தின் மூலம் சிலர் முன்னேறியுள்ளனர். நிறைய அறிவியல் அறிஞர்கள் பள்ளிப் படிப்பைக்கூட முடித்திருக்கவில்லை. அதேபோல் அக்பருக்கு எழுதப் படிக்க தெரியாது. ஆனால் சிறந்த நிர்வாகத்திறன் உடையவர். காமராசர் தொடக்கக் கல்வியே முடிக்க வில்லை. ஆனால் தொலைநோக்குப்பார்வையுடன் தமிழகத்தை முன்னேற்றியவர். பள்ளிக்கூடத்தில் வெறும் ஐந்தாண்டுகள் மட்டுமே படித்த பெர்னாட்ஷா உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர். ஆனால் இவர்களெல்லாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஐடியாவைக் கற்றிருந்தார்கள்.
குழந்தைகளுக்கு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், இணைந்து கொள்ளுதல்,  பாராட்டும் எண்ணம் போன்ற பண்புகளை வளர்க்க வேண்டும்.
வெற்றி பெறும் மனநிலையைப் பெற முயற்சி செய்ய வேண்டும். அதற்கு
வளர்ப்பு முறை மிக முக்கியம். இதற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள், குடும்ப அங்கத்தினர்கள் உதவி செய்ய வேண்டும்.எதிர்காலக் கனவுகளை வெல்லக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
இவையாவுமே அட்வைஸ் மூலம் வருவதில்லை. குழந்தைகளை வளர்க்கும் விதம், அவர்கள் முன்னே நாம் நடந்து கொள்ளும் விதத்தின் மூலம் வருவது.
ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கணும்,பாடிக் கறக்கிற மாடை பாடித்தான் கறக்கணும்.
ஒரு மனிதனுக்கு எது ஒன்று உணவாக இருக்கிறதோ இன்னொருவனுக்கு அது விஷமாக இருக்கலாம். என்றுமே அட்வைஷ் விஷம்தான்.

அதுவும் இன்றைய தலைமுறையினர் கேட்கும் மனநிலையிலும் இல்லை. அவர்களுக்கு என்ன தேவை என்பதை நாம்தான் உணரச்செய்ய வேண்டும். சிறு வயதிலேயே கஷ்டத்தை உணரவைத்தால்தான் அவர்களுக்கு பணத்தின் அருமை புரியும்.சிறு வயதிலேயே பெரியவர்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு முன்பாகவே நாம் பெரியவர்களை அவமதித்தால் அது அவர்களின் மனதில் பதிந்துவிடும். இது நாளை நமக்கு எதிராக திரும்பவும் செய்யும் என்பதை மறக்காதீர்கள். அறிவியல் சிந்தனைகளை வளர்க்க கற்றுக் கொடுங்கள். தொலைக்காட்சிகளில் தொலைந்து விடாமல் காப்பது நம் கடமை. நாம்தான் தொலைந்து கிடக்கிறோம். குழந்தைகள் மீது பழி போடுகிறோம்.
பல சமயங்களில் நம்முடைய விருப்பத்தைதான் குழந்தைகள் மீது திணிக்கிறோம். அவர்களின் விருப்பங்கள், தேடல்களுக்கு முக்கியத்துவம் தருவதேயில்லை.
துரியோதனன், தர்மர் இரண்டு பேரும் பார்த்தவற்றை கர்ணன் கேட்கும்பொழுது துரியோதனன் தீய செயல்களையும் ,தர்மர் தான் பார்த்த நல்ல செயல்களையும் சொல்லுவார்கள். நாம் எப்படியோ அப்படித்தான் நம்மைச் சுற்றியுள்ளவையும் இருக்கும்.
குழந்தைகள் செய்யும் சிறு தவறுகளை பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம் அல்லது அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளச் செய்யலாம்.
குழந்தைகளுடன் கலந்து பேச நாம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதைவிடுத்து விவாதம் செய்துகொண்டு இருக்கிறோம். அவர்கள் சொல்லும் பிரச்சினைகளைப் பொறுமையாகக் கேளுங்கள், அவர்களுடன் சண்டை புரியாதீர்கள், அல்பமான விசயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.குழந்தைகளைத் தூண்டுவதன் மூலம் வெற்றியாளர்களாக மாற்ற முடியும்.அது செயல்பாடுகளைச் செய்வதற்கான தூண்டுதலாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஏர்ல் நைடிங்கேல் சொல்வதுபோல் ஒரு மதிப்புமிக்க இலக்கை படிப்படியாக அடைதலே வெற்றி என்பதாகும். அதை நாம் குழந்தைகளை அடையச்செய்வது நம் கடமையாகும்.
சும்மா உட்கார்ந்து கேளுங்க!

ஐயா இது உங்களுக்கான அட்வைஸ் இல்ல.சும்மா உட்கார்ந்து படிச்சிட்டு கருத்துக்களையும் , உங்கள் பொன்னான வாக்குகளையும் பதிவு செய்ய மறந்துடாதீங்க!

21 கருத்துகள்:

  1. குழந்தைகளை வாழ்ககையில் வெற்றிபெறச் செய்ய பெற்றோர்கள் முக்கியமாகத் தர வேண்டியது ஐடியா...ஐடியா...ஐடியா மட்டுமே./

    பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. சில குழந்தைகள் சுமாராகத்தான் படிக்கும். ஆனால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியடையும். /

    நிதர்சன உண்மை!

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவுங்க. இதைப்போல பயனுள்ள குறிப்புகள் கொண்ட பதிவுகள், தொடர்ந்து தரவும். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அற்புதமான கட்டுரை..

    உண்மையில் நாம் எல்லோரும் அறிவுரை கூறுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டிருக்கிறோம்...


    வழிகாட்டுவதும் தீர்வு சொல்வது மட்டுமே உண்மையான முன் உதாரணமாக குழந்தைகள் எடுத்துக் கொள்ளும்...

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா07 நவம்பர், 2011

    நல்ல பயனுள்ல பதிவு.. தொடர்ந்து பகிருங்கள்.. பகிர்வுக்க் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. அருமையான பகிர்வு... நண்பா...

    பதிலளிநீக்கு
  7. குழந்தைகள் மீது நம்பிக்கை வைப்பதும், அவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து எடுத்தாலே அரிய பெரிய சாதனைகளை செய்வார்கள்

    பதிலளிநீக்கு
  8. நல்ல எடுத்துக்காட்டுகளுடன்
    நயம் பட எடுத்துரைத்துள்ளீர்கள்!

    அட்வைசை விட ஐடியா தருவோம்.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய சூழ்நிலைக்கேற்ற பதிப்பு.நல்லது விச்சு !

    பதிலளிநீக்கு
  10. நல்ல சொன்னிங்கய்யா, இப்பவாவது தெளியட்டும் சிலருக்கு,

    பதிலளிநீக்கு
  11. அருமையான பயனுள்ள பகிர்வு!

    பதிலளிநீக்கு
  12. வரலாறு பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்த காந்தி உலக வரலாற்றில் இடம்பிடித்து விட்ட உதாரணம் அருமை.இது போல பயனுள்ள பதிவுகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  13. [im]http://3.bp.blogspot.com/_iuloMxNSplo/TRNemE04DyI/AAAAAAAAAA8/1r3JpF6TqzI/s1600/THANK+YOU.jpg[/im]

    பதிலளிநீக்கு
  14. [ma]கருத்துக்களைப் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி[/ma]

    பதிலளிநீக்கு
  15. தேவையான பகிர்வு.நிறைய என்னை யோசிக்க வைத்தது..

    பதிலளிநீக்கு
  16. பயனுள்ள தெளிவான பதிவு
    பதிவுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 12

    பதிலளிநீக்கு
  17. பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் .......

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா24 ஜனவரி, 2012

    தங்களின் ஐடியா + அட்வைஸ் இரண்டுமே அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு