வெள்ளி, டிசம்பர் 2

ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்

பருவத்தில்...
வயசு நெருங்கிடுச்சி
சீக்கிரமா கல்யாணத்த முடிங்க!

முகூர்த்த நேரத்தில்...
நல்ல நேரம் போகுது
சீக்கிரம் தாலிய கட்டுங்க!

வீட்டில்...
சீக்கிரம் எந்திரிங்க
பிள்ளைகளை சீக்கிரமா
ஸ்கூலுக்கு கிளப்புங்க
சாப்பாட ஊட்டுங்க
ட்ரெஸ்ச வேகமா போடுங்க
ஆட்டோ வந்திருச்சு
ஐயோ இன்னும் டென்ஷன்! 

ஆபிஸ் போகும்போது...
நேரமாச்சு
வண்டியை வேகமா ஓட்டுங்க

ஆபிஸில்...
 இந்த ஃபைலை சீக்கிரம் முடிங்க
அத வேகமா டைப் பண்ணி
கொடுங்க!

கடையில்...
சீக்கிரமா பில்லை
போடுங்க!

பஸ்ஸில்...
ஏன் இப்படி உருட்டுரான்
கொஞ்சம் வேகமா ஓட்டுங்க!

ரோட்டில்...
வேகமா ரோட்டை கிராஸ் பண்ணுங்க!

பொது கழிப்பறையில்...
சீக்கிரமா வெளிய வாங்க சார்
எவ்ளோ நேரமா அடக்குறது!

தியேட்டரில்...
சீக்கிரம் டிக்கெட் கொடுங்க
படம் போட்டாச்சாம்!

பிரசவத்தில்
நல்ல நேரம் முடிஞ்சிரும்
சீக்கிரமா சிசேரியன் பண்ணிடுங்க!

ஹோட்டலில்...
சர்வர் ஆர்டர் பண்ணி
எவ்வளவு நேரமாச்சு!

தபால் அனுப்பும்போது...
போஸ்ட் ஆபிஸ்ல லேட்டாகும்
கூரியர்ல அனுப்பு!

இழவு வீட்டில்...
சீக்கிரம் பாடிய எடுங்க!

மயானத்தில்...
ரொம்ப நேரமாச்சு
சீக்கிரம் பாடிய புதைங்க!

ஃபாஸ்ட் புட் சாப்பிட்டு எல்லாமே ஃபாஸ்ட்...

இது கவிதை மாதிரி தெரியலையேனு தோணுதா?
மன்னிச்சுக்கோங்க...
கவிதைனு நினைச்சு 
சீக்கிரமாய் டைப் பண்ணியது...

சீக்கிரமா படிங்க!
சீக்கிரம் கமெண்ட் போடுங்க!
சீக்கிரம் வோட்டைப் போடுங்க!
ஐயோ! எல்லாமே சீக்கிரமா?