ஞாயிறு, டிசம்பர் 4

பேச்சை முடிப்பது எப்படி?

   முன்னொரு பதிவில் பேச்சு என்பது பற்றி நிறையப் பேசியிருந்தோம். இப்பதிவில் ஒரு மேடைப்பேச்சினை எவ்வாறு முடிப்பது என்பதைப் பற்றி மதிப்பிற்குரிய அ.கி.பரந்தாமனார் அவர்கள் எழுதிய நூலின் அடிப்படையில் பகிர்ந்துகொள்கிறேன்.
      ஒருவர் மேடைப்பேச்சினைச் சிறப்பாக தொடங்கியிருப்பார், பேசும் பொருளினைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்திருப்பார். ஆனால் பேச்சின் முடிவில் கவனம் செலுத்தத் தவற விட்டால், பேசிய பேச்சு மதிப்பிழந்து போகும். வள்ளுவரும் பயனுள்ள பேச்சுதான் வேண்டுமென்பதை
    "பயனில்சொல் பாராட்டு வானைமகன் எனல்
   மக்கட் பதடி எனல்"  என்றார்.
      ஜார்ஜ் ரௌலண்ட் காலின்ஸ் என்ற அறிஞர் இதைப் பற்றி கூறும்போது "பேச்சை முடிப்பதில் ஒரு குறிக்கோள் இருக்கிறது. அது பேச்சை முடிவுக்கு கொண்டு வருவதுடன் சிறிது நேரத்திற்குள் பேசிய பேச்சின் முழுப்பொருளையும் கேட்போருடைய கவனத்துக்கு கொண்டு வந்து, பேச்சில் சிதறிக் கிடக்கும் கருத்துக்களை ஒருமுகப்படுத்தி, உள்ளத்தில் பசுமரத்து ஆணிபோலப் பதிய வைக்கிறது.ஒருநாளும் பேச்சை விரைவாக அழகற்று முடியுமாறு முடிக்கக் கூடாது"
1. பேசிய பேச்சின் கருத்துக்களைக் கூறி முடிக்கலாம்.
2.பேச்சின் முடிவில் அதைச் செயலாற்றுவதற்கு ஏற்றவகையில் உணர்ச்சி எழும்பப் பேசி முடிக்கலாம்.
3.நிகழ்ச்சி அமைப்பாளர்களைப் பாராட்டி பேசி முடிக்கலாம்.
4.நகைச்சுவையுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் பேச்சினைக் கேட்போர் ஆழுமாறு முடிக்கலாம்.
5. செய்யுள், மேற்கோளுடன் பேச்சினைச் சிறப்பாக முடிக்கலாம்.
6.எல்லாவற்றிற்கும் மேலாக பேச்சினை செவிமடுத்து கேட்டோருக்கு நன்றி சொல்லியும் முடிக்கலாம். இதனை நண்பர் SURYAJEEVA அவர்கள் முந்தைய பேச்சு பதிவின் கருத்துரையில் சொன்னது போல் "பேசுவதை விட, பேசுவதை கூர்ந்து கவனிப்பது ஒரு கலை...எனவே அவர்களுக்கு நன்றி சொல்வது சிறப்பாக அமையும்.
7. சந்தர்ப்பம் அறிந்தும் பேச்சினை முடிப்பதும் சிறப்பு. சிலநேரம் நமக்கு முந்திப் பேசியவர்கள் நீண்ட நேரமாகப் பேசி விடுவர். நாம் பேசும்போது சுருக்கமாகவும் விரைந்தும் முடிப்பது நலம்.
8.குருடன் அவையிலிருந்து கேட்டாலும் பேச்சு முடிவடையப்போகிறது என எண்ணுமாறு முடிக்கலாம்.

திரு.வி.க  அவர்களும் பேச்சினைப் பற்றி
"பேச்சு என்பது ஒரு கலை;
பேராற்றல் வாய்ந்தது;
முத்தொழில் புரியும்;
வல்லமையும் வாய்ந்தது;
பேச்சைக் கலையாக்குவது
அறிவுடைமை."
"மேடைப்பேச்சு நாட்டை
வளம்படுத்தும்;
வாக்காளரைப் பண்படுத்தும்;
சட்டசபையைச் சீர்செய்யும்;
நல்லமைச்சு அமைக்கும்." என்று கூறுகிறார்.
    கடைசியாக எனது முடிவுரையாக 'என்ன சொன்னாலும் இதுதான் முடிக்கும்முறை என்று திட்டமாகக் கூறிவிடமுடியாது. அவரவர் திறமைக்கும் அறிவுக்கும் ஏற்றவாறு முடிவுரையினை அமைத்துக்கொள்ளலாம்.'

16 கருத்துகள்:

  1. ஆரம்பம் எல்லாம் நல்லா தான்பா இருக்கு ஆனா உன்கிட்ட பினிஷிங் சரியில்லையே என்று வடிவேல் மாதிரி புலம்ப கூடாது என்று சொல்கிறீர்கள்... ரைட்டு

    பதிலளிநீக்கு
  2. அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றலை பற்றி கூறாத ஒரு பேச்சு திறமையை பற்றிய கட்டுரை நான் குறையாக கூறவில்லை சொன்னா நல்லாயிருக்கும் என்று சொல்கின்றேன் மற்றபடி கட்டுரை அருமை....

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு.
    தொடர்ந்து இதே மாதிரி நல்ல விஷயங்களாக முயற்சி செய்து, நல்ல பதிவுகளாக எழுதுங்கள்.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. வீடு K.S.சுரேஸ்குமார் அவர்களே அண்ணாவைப் பற்றி சொல்லாததற்கு வருந்துகிறேன்.Suryajeeva, Rathnavel ஐயா, திண்டுக்கல் தனபாலன் அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பேச்சு என்பது முடிவில் தான் முழுமை பெறுகிறது...
    அருமையாக விளக்கியுள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு
  6. பேச்சினைப்பற்றிய விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
  7. மேடைப்பேச்சாளர்களுக்கு நல்ல குறிப்புக்கள்.அதுசரி...நிறையவே சாதாரணமாகப் பேசுபவர்கள் எப்படி முடிக்கணும் விச்சு !

    பதிலளிநீக்கு
  8. ஹேமா... நிறைய பேசுபவர்கள்கிட்ட நாமதான் முடிச்சுக்கணும்.

    பதிலளிநீக்கு
  9. விச்சு...சூப்பர் பதில்.அதிர்ச்சியாயிட்டேன் !

    பதிலளிநீக்கு
  10. ஹேமா எதுக்கு அதிர்ச்சி?

    பதிலளிநீக்கு
  11. எதுக்கா...இப்பத்தானே தெரியுது எத்தனைபேர் என்கிட்ட கதையை முடிக்காம போனாங்கன்னு !

    பதிலளிநீக்கு
  12. நிறைய பேசுபவர்கள்கிட்ட நாமதான் முடிச்சுக்கணும்.:)

    உண்மை வரிகள்

    பதிலளிநீக்கு
  13. அழகாகச் சொன்னீர்கள்
    தேவையான பதிவு..

    பதிலளிநீக்கு
  14. பேச்சினைப்பற்றி அழகா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு