சனி, பிப்ரவரி 4

அறிவியல் ஆனந்தம் 4

அறிவியல் ஆனந்தம் 1
அறிவியல் ஆனந்தம் 2
அறிவியல் ஆனந்தம் 3

அறிவியல் ஆனந்தம் 4  பகுதியில் சில சுவாரஸ்யமான துணுக்குகள்.


                                                மின்மினிப்பூச்சிகளுக்கு ஒளி உண்டாவது எப்படி?


மின்மினிப்பூச்சியின் அடிவயிற்றுப்பகுதியில் தனிச்சிறப்பான செல்களில் லூஸிஃபெரின் என்ற வேதிப்பொருள் காணப்படும். இந்த செல்களுடன் சுவாசக்குழல் தொடர்பு கொண்டிருப்பதால் ஆக்ஸிஜன் சேர்ந்து வினைபுரிந்து ஒளியைத் தருகிறது.இதற்கு லூஸிஃபெரேஸ் என்ற நொதி அவசியமாகிறது.பச்சோந்தி நிறம் மாறுவது எவ்வாறு?
    இதன் தோலின் உட்பகுதியில் (dermis) பல்வேறு அளவில் சுருங்கிவிரியக்கூடிய நிறமிச்செல்கள் (Chromotophores) இருக்கின்றன,இது தானியங்கு நரம்பு மண்டலத்தின் உதவியால் நிறமிகளை உருவாக்குகின்றன.
தக்காளி சிவப்பாக மாறுவது எப்படி?
      காயாக இருக்கும்போது குளோரோஃபில் அதிகமாகக் காணப்படும். அதனால் பச்சையாக இருக்கும்.கனியாக மாறியவுடன் இந்த நிறமி மறைந்துவிடும்.கரோட்டின், ஸாந்தோஃபில் நிறமிகள் அதிகமாக காணப்படும். குறிப்பாக லைக்கோபின் (Lycopene) நிறமியால் சிவப்பாக மாறும்.
மருதாணியைக் கையில் அரைத்துப்போட்டால் சிவந்துவிடுவது ஏன்?
      மருதாணி இலையிலுள்ள ஆந்தோசயனின் (Anthocyanin) என்ற நிறமிதான் தோல் சிவந்துவிடக் காரணமாகும்.

தலைமுடி கருப்பாக இருக்க காரணம் என்ன?  
   ரோமக்கால்களின் அடிப்பகுதியில் மெலனோசைட் (melanocyte) என்ற சிறப்பு வாய்ந்த செல்கள் காணப்படுகின்றன. இது மெலானின் (Melanine) என்ற நிறமியைச் சுரக்கிறது. இதுதான் கருப்பு நிறத்தைக் கொடுக்கும். 
பச்சையான இலைகள் காய்ந்ததும் நிறம்மாறுவது ஏன்?
   இலைகளில் பச்சையம் (Chlorophyll) அதிகமாக இருப்பதால் பச்சை வண்ணமாய் இருக்கும். இது காய்ந்துவிடும்போது ஆக்ஸிஜன் ஏற்றத்தால் பச்சையம் மறைந்து ஸாந்தோஃபில் (Xanthophyll) என்னும் பழுப்பு நிறம் தோன்றும். இதனால் இலை நிறம் மாறிவிடுகிறது.
சிவப்பு மலர் நீல நிறக்கண்ணாடியில் பார்த்தால் கருப்பாகத் தோன்றுவது எவ்வாறு?
சிவப்பு மலரிலிருந்து சிவப்பு ஒளிதான் வெளிப்படும். இந்த ஒளியை நீலநிறக்கண்ணாடி உட்கவர்ந்துவடும். ஏனெனில் நீலக்கண்ணாடி வழியாக நீலநிற ஒளி மட்டுமே ஊடுருவிச் செல்ல முடியும். சிவப்புநிற ஒளியை நீலநிறக்கண்ணாடி தடுத்துவிடுவதால் மலர் கருப்பாகத் தெரியும்.

22 கருத்துகள்:

 1. நிறைய விஷயங்களை அறிந்து கொண்டேன்....

  பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 2. அறியாத தகவல்களை அரிய வைத்தமைக்கு நன்றி நண்பரே !

  பதிலளிநீக்கு
 3. கலருக்கு இத்தனை காரணங்களா?? அரிய தகவல்கள். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சி.பி.செந்தில்குமார். தங்கள் தளம் அட்ரா சக்க அருமை.தங்களின் சினிமா விமர்சனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

   நீக்கு
 4. வண்ணங்களை வைத்து பதிவா? வானவில் போல கலர்ஃபுல்லா ரசிக்கத்தக்கதா இருக்கு உங்க பதிவு. வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ராஜி. உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கத்தை கொடுக்கக்கூடியது.

   நீக்கு
 5. அரிய தகவல்கள். பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 6. வண்ணங்களின் காரணங்கள் அறிந்து வியந்தேன். பாராட்டுகள். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. விரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..

  http://www.thamilnattu.com/2012/02/blog-post_05.html

  பதிலளிநீக்கு
 8. ம்...சிறப்பான பதிவு விச்சு.மின்மினிப்பூசியைக் கண்டு எவ்வளவோ காலமாச்சு !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்மினியைப் பிடிக்காதவங்க இருப்பங்களா? என்னுடைய பதிவுக்கு நீங்கள் இடும் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 9. தங்கள் எழுத்துக்கு ஒரு மரியாதை செய்துள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்வையிட வரவும் சகோதரரே.
  http://rajiyinkanavugal.blogspot.com/2012/02/blog-post_06.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது என்னைப்பொறுத்தவரை எனக்கு கிடைத்த மிகப்பெறும் அங்கீகாரம். நன்றி ராஜி.

   நீக்கு
 10. அறிவியல் பதிவு - பல தகவல்கள் - பகிர்ந்தமைக்கு நன்றீ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு