மனிதன் குரங்கிலிருந்து வந்தால் குரங்கு எதிலிருந்து வந்தது?
சுமார் 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரே மூதாதையரிடமிருந்து இரண்டும் தோன்றின.லெமூர்கள், லாரிஸ் மற்றும் டார்சியர் இனங்கள் 500 லட்சம் வருடங்களுக்கு முன் தனியாகப் பிரிந்தன. சுமார் 300 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமிநோய்டியா என்ற ஒரு தொகுதி பழங்கால குரங்குகளிடமிருந்து பிரிந்தது. இத்தொகுதி மனிதனையும், மனிதக்குரங்குகளையும் உள்ளடக்கியது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
Hominoidea |
| ||||||||||||||||||||||||
ரிலாக்ஸ் :ஒரு பையனுக்கு இப்படித்தான் மனிதன் எதிலிருந்து தோன்றினான் என்ற சந்தேகம் தோன்றியது. அவன் அம்மாவிடம் சென்று கேட்டான். ஆதாம் ஏவாள் என்ற மூதாதையரிடமிருந்து மனிதன் தோன்றினான் என்று அம்மா கூறினார்கள். திரும்பவும் அவனுக்கு சந்தேகம் தீரவில்லை. அப்பாவிடம் சென்று கேட்டான். குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று அப்பா சொன்னார். அவனுக்கு குழப்பம் ஆகிவிட்டது. மறுபடியும் அம்மாவிடம் சென்று விளக்கம் கேட்டான். உடனே அவர் டேய்! யார் யார் எதிலிருந்து தோன்றினார்கள் என்று அவரவர்களுக்குத்தான் தெரியும் என்றார்.
கிமு 8 ஆம் நூற்றாண்டிற்கும் கிபி 8 ம் நூற்றாண்டிற்கும் இடையில் மொத்தம் எத்தனை ஆண்டுகள் உள்ளன?
கிமு கிபி ல் '0' ஆண்டுகள் என்பதே வரலாற்றில் இல்லை. கிறிஸ்து பிறந்த ஆண்டை கிபி 1 என்றுதான் காலங்கள் கணக்கிடுகின்றன. எனவே கிமு 8 ஆம் நூற்றாண்டிற்கும் கிபி 8 ம் நூற்றாண்டிற்கும் இடையில் மொத்தம் 15 ஆண்டுகளே இருக்கின்றன எனலாம்.
மண்ணிலுள்ள நீர் தாவரத்தின் உச்சிக்கு செல்வது எப்படி?
சிமினி விளக்கிலுள்ள திரி மண்ணெண்னையை மேலே உறிஞ்சி எடுத்து எரிகிறது. அதுபோல தாவத்திலும் நிறைய நுண்ணிய குழாய்கள் உள்ளன. மண்ணிலுள்ள நீர் இந்தக் குழாய்களின் (TUBULAR CELLS) வழியே தந்துகிப்பெயர்ச்சி (CAPILLARY ACTION) முறையில் புவியீர்ப்பு விசையினை மீறி தாவரத்தின் உச்சிக்கு செல்கிறது.
வீடு கட்டும்போது செங்கற்களை நனைத்து கட்டுவது ஏன்?
செங்கல் நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. செங்கலை நனைக்காவிடில் அது கலவையில் உள்ள நீரை உறிஞ்சும். அப்போது கலவையில் உள்ள நீரின் அளவு குறையும்.இதனால் அதன் முழுத்திறனும் வெளிப்படாது.கட்டிடத்தின் உறுதித்தன்மை குறைந்துவிடும். எனவே செங்கற்களை நனைத்துக் கட்டினால் அது கலவியின் நீரினை உறிஞ்சும் தேவை இருக்காது. ஆதலால் கட்டிடமும் வலுவானதாக இருக்கும்.
உயரே செல்லச்செல்ல வெப்பநிலை குறைவது ஏன்? கதிரவனை நோக்கி செல்வதால் வெப்பநிலை உயரத்தானே வேண்டும்?
சூரியனின் வெப்பம் கதிவீச்சு முறையில் விண்ணில் பரவுகிறது. இதனை பூமி உட்கவர்ந்து சூடாகும்.நிலப்பரப்பின் வெப்பத்தினை வளிமண்டலத்தின் மூலக்கூறுகள் வெப்பச்சலனம் முறையில் உயரே அனுப்பும். இதனால் பூமியின் அருகே வெப்பம் அதிகமாகவும் உயரே செல்லும்போது வெப்பம் குறைவாகவும் இருக்கும். சூரியனிடமிருந்து 1.5 கோடி கி.மீ தொலைவில் பூமியினை கொண்டு சென்றால் மட்டுமே (ஒரு கற்பனைதான்) பூமியின் வெப்பநிலை உயருமாம்.
நல்ல தகவல்! அறிவியல் விளக்கம்! மனிதன் கண்டிப்பா குரங்கில இருந்துதான் பிறந்திருப்பான் செய்யற குறும்பு அப்படி.....
பதிலளிநீக்குஅருமையான தகவல்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
நல்ல தகவல்கள் நண்பரே...
பதிலளிநீக்குஅருமையாக இருக்கிறது... தொடருங்கள்.. வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஅறிவியல் ஆனந்தம் ஆனந்தமாக உள்ளது. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
பதிவில் விளக்கங்கள் நல்லா இருக்கு சார். தொடருங்க.
பதிலளிநீக்குநல்ல தகவல்கள் நன்றி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமையான தகவல்கள்.
பதிலளிநீக்கு