திங்கள், பிப்ரவரி 27

பூச்சி மொழிகள்

எறும்பு மொழி :
         எறும்புகளின் மீசைகள் அவற்றின் உணர்வுகளைத் தெரிவிக்கின்றன. அதாவது வேதியியல் முகர்ச்சி மூலம் பேசுகிறது. எறும்புகள் ஒன்றையொன்று தீண்டுவதில்தான் அவற்றின் மொழி இருக்கிறது. மீசையைத் தீண்டுவதிலுள்ள இடைவெளியினைப் பொறுத்து அவற்றின் எண்ணங்கள் மாறுபடுமாம். அதனுடன் தாடைகளை திறப்பது, மூடுவது போன்ற அங்க அசைவுகளாலும் எண்ணங்கள் மாறுபடும்.

          மீசையை மெதுவாகத் தீண்டுகின்றனவா? முன் நெற்றிப்பகுதியையா? பக்கவாட்டுப் பகுதியா? மற்ற உறுப்புகளையா? இதுபோன்ற நிறைய விசயங்களில் அவற்றின் மொழி அடங்கியுள்ளது. தூது எறும்புகள் வேலை எறும்புகளிடம் கண நேரம் நின்று பின் அடுத்த எறும்புக்கு செல்லும்.இது உணவுப் பயணத்திற்கான சமிங்கையாகும்.


 தேனீ மொழி :
          தேனீக்கள் வாலாட்டி நடனம் மூலம் உணவு, தன் இருப்பிடம் போன்றவற்றினை அறிவிக்குமாம். தேனீக்கள் நடனம் மூலம் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்கிறது. சற்று தொலைவில் உணவிருந்தால் தேனீ தன் கூட்டினில் உள்ள மற்ற வேலைக்கார தேனீக்களுக்கு இந்த வாலாட்டி நடனம் (WAGGLE DANCE) மூலம் தகவல் கொடுக்கிறது. இது தன் இடத்திலிருந்து வாலை ஆட்டிக்கொண்டே அரைவட்டத்தில் துவங்கி பின் மீண்டும் பழைய பாதைக்கு வருகிறது. திரும்பவும் வலதுபுறம் சுற்றி வந்து ஆரம்பித்த இடத்திற்கே திரும்பவும் வரும். இதன் மூலம் உணவு, இருப்பிடம் மற்றும் மலரின் மணத்தினை கூட அறிவிக்குமாம். இந்த வாலாட்டி நடனம் மூலம் புதிய இடத்தினைத் தேர்வு செய்து அங்கு இடம்பெயரவும் பயன்படுகிறது. தகவல் கிடைத்த அடுத்த வினாடி அனைத்து வேலைக்காரத் தேனீக்களும் அந்த இடத்தினை அடைந்துவிடுமாம்.
படங்கள் மற்றும் வீடியோக்கள் கூகுள் தேடலில் கிடைத்தவை.