திங்கள், பிப்ரவரி 13

நூறாவது காதல்

வணக்கம் நண்பர்களே...
                    காதலர் தினத்தன்று என்னுடைய நூறாவது பதிவு. வலைச்சரத்திலும் ஆசிரியர் பணியாக இந்த வாரம் முழுவதும் பொறுப்பு.தொடர்ந்து உற்சாகப்படுத்தும் கீதா, இராஜராஜேஸ்வரி, சி.பி.செந்தில்குமார், திண்டுக்கல் தன்பாலன், தமிழ்வாசி பிரகாஷ், சகோதரி ராஜி, யுவராணி தமிழரசன், ரத்தினவேல் ஐயா, ஹேமா, சசிகலா, ஆமினா, ஸாதிகா, வீடு சுரேஷ், லட்சுமியம்மா, ஸ்ரவாணி, ஆஸியா ஓமர், விமலன், நண்பர் Suryajeeva , மாலதி இன்னும் நிறைய நண்பர்கள் தொடர்ந்து கருத்துக்கள் மூலம் என்னை உற்சாகப்படுத்தும் உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


            எல்லா உயிர்களுக்கும் காதல் பொதுவானது. சில கவிஞர்களின் பார்வையில் காதல். வைரமுத்துவின் வரிகளில் காதல் என்பது:

உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம் விளங்கும்….
உனக்கும் கவிதை வரும்…
கையெழுத்து அழகாகும்…..
தபால்காரன் தெய்வமாவான்
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்…கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்…காதலித்துப்பார் ! 

மு.மேத்தாவின் காதல் வரிகள் :

நீ என் கவிதைகளை 
ரசி்ப்பதாகக் கூறிய பிறகு
என் கவிதைகள் எல்லாம்
உன்னை மட்டுமே ரசிக்கத் தொடங்கிவிட்டன.ந.முத்துக்குமாரின் பார்வையில்:

ஒரு பாதி கதவு நீ
மறு பாதி கதவு நான்
பார்த்துக்கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்துவைக்க காத்திருக்கிறோம்.

பா.விஜய் :

ரோஸ் ஐஸ் சாப்பிட்டுவிட்டு
வாய்சிவக்க நிற்பாய்
நிறமாற்ற விதி என்பது இயற்பியல் அல்ல
இதழியல்!!

மீரா :

 நீ முதல்முறை
என்னைத் தலைசாய்த்துக்
கடைக்கண்ணால் பார்த்தபோது
என் உள்ளத்தில் முள் பாய்ந்தது.
அதை இன்னும் எடுக்கவில்லை.
முள்ளை முள்ளால்தானே
எடுக்கவேண்டும்
எங்கே இன்னொருமுறை பார்!!


பழனிபாரதி :

என்னைத்தவிர யாரிடமும் பேசாதே
உன் இதழ்களில் நனைந்து வருவதால்
வார்த்தைகளெல்லாம்
முத்தங்களாகி விடுகின்றன.

விச்சு :

உன் காலில் ஒலிக்கும் 
கொலுசு சத்தம் நான்...
உன் கண்டாங்கிச் சேலையும் நான்...
உன் இதய ஒலியும் நான்...
உன் இடுப்பு மடிப்பும் நான்...
உன் உதட்டுச் சுழிப்பும் நான்...
உன் உள்ளக்குமுறலும் நான்...
உன் சிரிப்பும் நான்...
உன் சுருண்ட கூந்தலும் நான்...
உன் காலடியும் நான்...
உன் சுவாசமும் நான்...
உன் கன்னக்குழியும் நான்...
உன் காதுமடலும் நான்...
உன்னுள் எல்லாமும் நானாக இருக்க
நீ இருக்கும் என் இதயம் மட்டும் 'லப்டப்'
எனத் துடிக்காமல்
உன் பெயரைச் சொல்லியபடி
கல்லறையில் !!!


நன்றி...


19 கருத்துகள்:

 1. ஒரு கதம்ப பதிவு பார்த்த திருப்தி அருமைங்க .

  பதிலளிநீக்கு
 2. விச்சு ஒரே லவ் மூடுல இருக்கிறாரு போல.....பாஸ் என்ன நாளைக்கு எதாவது விசேசமா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காதலர் தினத்தை எப்படியும் கொண்டாடிவிடுவது என்ற முடிவுதான். நன்றி நண்பா!!

   நீக்கு
 3. வணக்கம்விச்சு சார்,நலம்தானே.பிப்,14க்கு எனது பதில் எனது படைப்பே/  வணக்கம்பிரியமே /.

  அப்போதெல்லாம் உன்னை காதலித்தாகவோ உன் மேல் ப்ரியம் கொண்டு உன்னை
  நேசித்தாகவோ ஞாபகமில்லை கண்ணே.
  ஆனால் உன்மேல் கிஞ்சித்தும் ப்ரியம் குறையாமல் உன்னையே மனதில் சுமந்து வருகிறேனே ............,,,,,,
  அன்பே உனக்கு ஞாபகமிருக்கிறதா?முதன் முதலாக உன்னை பார்த்த இடமும் உனது அழகும் பெரிதாக என்னை வசிகரப்படுத்தி விடவில்லை. தொட்டால் ஒட்டிக்கொள்ளும் அளவெல்லாம் இல்லை. ஒட்டினால் போகாத அளவு கருமை பூசியிருந்த நீ உனது எளிர் தெரியும் வெள்ளந்திச் சிரிப்பால் அதை விரட்டிவிட்டாய்தான்.
  உனது குட்டைச் சடையும், வட்ட முகமும் ,எண்ணெய் வழிந்த பிசு,பிசுபான உடலும் கலைந்து பரந்திருந்த தலைமுடியும், சுமாரான பாவாடை தாவணியும் என்னை உன் வசம் ஈர்த்து விட்டதுதான். அப்போதெல்லாம் உன் அனுமதி இல்லாமலேயே நினைத்திருக்கிறேன் அன்பே.
  இரு காதேரங்களிலும்,பின் தலையில் இறங்கும் முடியின் நுனியிலும் இறங்கிச் சொட்டும் நீர் துளியை நீ குளித்து முடித்து தலை துவட்டும் தருணங்களில் பார்க்க ஆசைப் பட்டதுண்டு கண்ணே.அந்த பாக்கியம் அப்போது .....,,,,ம்ம்ஹும்,.ஒல்லியாய் வளர்ந்து கருத்து நின்ற நீ என்னை கட்டிப்போட்டு விட்டாய்தான், உன்னையே சுற்றிச் சுற்றி வருமளவு கயிறு விட்டு. ஆனால் கண்ணே அப்போதுக்கும் இப்போதுக்கும் மாற்றம் நிறைவே கண்ணே .அதென்ன அப்படி ஒரு ஏற்பாடு என புரியவில்லை. பெண்களில்(பெரும்பாலோனோர் )திருமணமாகி விட்டதும் அதுவும் ஒரு குழந்தை பிறந்துவிட்டபின் தனது உடல் நிலை பராமரிப்பை ஏறக்குறைய கைவிட்டு விடுகிறார்கள்தான், அல்லது மறந்தே போய்விடுகிறார்கள்.அது ஏற்பாடா?சாபக்கேடா? என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே.
  ஊர் மந்தை காளியம்மங்கோவிலை ஒட்டிய ஆண்டாள் அத்தையின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஏதோ ஒன்றை முறத்திலிட்டு சுத்தம் செய்து கொண்டும்,புடைத்துக் கொண்டுமாய் இருந்தாய் நீ. அந்த வேலைத் தளமும், உனது கைவிரைவும் ,உடல் அசைவுகளுமே எனக்கு பிடித்துப் போனது. சுண்டினால் ரத்தம் வருமளவு தோல்தான் சிறந்தஅழகாமே.சொன்னார்கள்
  விபரமறியாதவர்கள். அதெல்லாம் வியர்வை வாசம் மிகுந்த உனது வேலை முனைப்பின் முன் காணமல் போனதுதான் அன்பே.
  தெரு முழுவதிலுமாய் அப்படியே ஜனங்கள் வற்றிப் போக நாம் இருவர்
  மட்டும் உழைப்பின் சுகந்தத்தில் லயித்துப் போகமாட்டோமா என ஆசைப் பட்டதுண்டு அன்பே.தலையில்வாடித் தெரியும் மல்லிகைப் பூவும் ,பூப் போட்ட பாவாடயும்,சாந்துப் பொட்டும் ,ஊதாக் கலர் ரப்பர் பேண்டுமே உனது அதிக பட்ச காஸ்ட்டியூம் எனச் சொன்னாய் நீ.
  அப்போதெல்லாம் உனக்கு அதிக பட்ச ஸ்நேகிதிகள் இல்லை என்று சொன்னாய் நீ.அந்த கிராமத்தில் உனக்கிருந்த ஒரே சினேகிதி சுமதிதான்.
  அவளும் பள்ளி இறுதி வகுப்பை முடித்துவிட்டு கல்லூரி வாசலில் கால் வைத்த நேரம்.மற்ற உன் வயது இளசுகளெல்லாம் உனது நெருங்கிய சொந்தங்களே. அவர்களிடமும் உன் வயதான பாட்டியிடமும், பகிர்ந்து கொள்ள முடியாத விடலைப் பருவத்தின் இனிக்கும் எண்ணங்களை ,கனவுகளை,என்னுடன் பகிர்ந்து கொள்கிறாய் நிறைவுடன்.
  அதில் அப்பிக் கிடந்த ,சந்தோஷங்களும் துக்கங்களும், ஏக்கங்களும்,
  விட்டேத்தியான பெருமூச்சுகளும் ,எல்லைகளற்ற இலக்கில்லாத கனவுகளும்,உன்னை எவ்வளவு தூரம் அலைக் கழித்திருக்கும் என இப்போது உணர முடிகிறது அன்பே.
  அப்படி உணர முடிகிற தருணங்களும்,மனதும் பரஸ்பரம் நம் இருவருக்கும் இருக்கிறதாலேயே நமக்கு திருமணமாகி ,இரண்டு பிள்ளைகள்
  ஆகிவிட்ட இந்த பதினைந்து வருடங்களும் ஒருவரை ஒருவர் முடிந்து வைத்துள்ளோம் மனதில். வேறென்ன ஆரம்ப வரிகள்தான்.

  பதிலளிநீக்கு
 4. ஒரு அற்புதமான கருத்தினை ( சாரி.. தங்களது படைப்பினை) கூறியதற்கு மிக்க நன்றி.கிஞ்சித்தும் பிரியம் குறையாமல் இருக்கும் அந்த அன்புதான் காதல்.காதல் என்ற வார்த்தைகூட அறியாமல் காதலிப்பதுதான் உண்மையான காதல்.மறுபடியும் தங்களது படைப்பினையே கருத்தாக வெளியிட்ட தங்களுக்கு நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 5. மனம் நிறைந்த வாழ்த்துகள் நூறாவது பதிவுக்கு,வலைச்சர ஆசிரியர் பணிக்கு இன்னும் காதல் தின வாழ்த்தும் !

  காதல் கண்டிப்பாய் எங்கும் எதிலும் வேணும் விச்சு.இல்லையேல் வாழ்வில் பிடிப்பேயிருக்காது.காதலில் மொழிகளைக் கோர்த்தெடுத்து காதல் வலையாக்கியிருக்கிறீர்கள் இன்று.அருமை விச்சு.உங்கள் கவிதையில் சிறு சோகக்கோடு.ஆனாலும் உணர்வோடு இருக்கிறது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துக்களை பார்த்தபின் சந்தோஷம். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 6. நூறாவது பதிவு சிறப்பானதாக அமைந்துள்ளது காதலால்.
  பதிவுலகின் காதல் மேலும் வளர வாழ்த்துகள்.
  வலைச்சரத்தில் ஆசிரியர் பணி அசத்தலாக இருக்கிறது.தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 7. நூறாவது பதிவிற்கு நிறைவான வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 8. உயிர் கொண்ட அகைத்திடமும் இருக்கிறது காதல் பார்வை....

  அந்த காதல் கவிதைகளில்தான் தேக்கிவைக்கப்படுகிறது...

  அழகிய பதிவு...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லா14 பிப்ரவரி, 2012

  அவர்கள் கவிதைகளோடு உங்கள் வரிகள் போட்டி போடுகின்றன...

  நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் விச்சு...

  வலைச்சரத்தில் ஆசிரியர் பணி அசத்தலாக இருக்கிறது...தொடருங்கள்..

  காதல் தின வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா14 பிப்ரவரி, 2012

  பதிவு 100க்கு வாழ்த்துகள்.
  நூறென்ன ஆயிரமும் அதற்கு மேலுமாகட்டும்.
  வலைச்சர ஆசிரியர் பணி சிறக்கட்டும்.
  காதலர் தின வாழ்த்துகள்.நாளை
  வலைச்சரத்தில் சந்திக்கலாம்.வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துகள் விச்சு வரேன் வலைச்சரத்துக்கும் நன்றி மிக அங்கே என்னை சிறப்பித்தமைக்கு.

  பதிலளிநீக்கு
 12. காத‌லின் சிருங்கார‌ம் அதைப் ப‌ற்றி எழுத‌ப் புகுப‌வ‌ர்க‌ளின் க‌ர‌ங்க‌ளில் வியாபித்து விடுகிற‌து! த‌ங்க‌ள் செள‌ந்த‌ர்ய‌ல‌ஹ‌ரி உட்ப‌ட‌!

  பதிலளிநீக்கு
 13. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் நண்பா,
  காதலர் தினத்தன்று நூறாவது பதிவினை கண்டிருக்கிறீங்க.
  வாழ்த்துக்கள்! அத்தோடு வலைச் சரத்திலும் சம நேரத்தில் ஜமாய்த்திருக்கிறீங்க.
  எனக்கு பாடசாலை காரணமாக தங்கள் பக்கம் வர முடியலை!

  மீண்டும் வாழ்த்துக்கள்! தொடர்ந்தும் எழுதுங்கள்!

  கவிஞர்களின் வைர வரிகளை காதல் வரிகளாய் இங்கே அர்ச்சித்திருக்கிறீங்க.
  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு