வெள்ளி, பிப்ரவரி 17

விருது

        என் எழுத்தினை யாரும் கவனிப்பார்களா? என்ற சந்தேகத்துடன் நான் பதிவுலகில் காலடி(கையாலதான் டைப் பண்றோம்) எடுத்துவைத்து சில மாதங்களில் கிடைத்த அங்கீகாரம் இரண்டு விருதுகள். யுவராணி தமிழரசன் எனக்கு வழங்கிய "`Versatile Blogger Award ". மனமகிழ்வுடன் இதனை ஏற்கிறேன் (விருது கிடைச்சா வேண்டாம்னா சொல்வோம்). எனது பதிவிற்காக அவர் வழங்கிய இந்த விருதுக்கு எனது நன்றி.


பிடித்த ஏழு விசயங்கள் சொல்ல வேண்டுமாதலால் எனக்குப் பிடித்தவை :

* புத்தகம் வாசிப்பது
* அம்மாவின் அன்பு
* எனது மனைவியுடன் ஊர் சுற்றுவது
*  நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது
* குழந்தைகளுடன் பழகுவது
* இயற்கையையும் ரம்மியமான இசையையும் ரசிப்பது
* கமல்ஹாசனின் படங்கள் பார்ப்பது

பகிர விரும்பும் ஐந்து பதிவர்கள் :

1.கவிதைகளை அற்புதமாக எழுதும் சசிகலாவிற்கு.
2.அழகான படைப்புகளைத் தரும் கௌசல்யாவிற்கு.
3. நல்ல கட்டுரைகளையும் எங்கள் ஊரைச்சுற்றியுள்ள தளங்களையும் எழுதும் ரத்னவேல் ஐயாவிற்கு.
4.சிறப்பான பத்வுகளைத் தரும் விமலன் அவர்களுக்கு
5.நல்ல படைப்புகளைதரும் மணிமேகலாவிற்கும் வழங்குகிறேன்.
     மற்றொரு விருதான சகோதரி ராஜி வழங்கிய லீப்ச்டர் என்கிற இளம் வலைப் பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது.இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும்.இதைப் பெறுபவர்,மேலும் தான் விரும்பும் ஐந்து இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைப்பூக்களுக்கு விருது வழங்க வேண்டும்.


1.கவிதைகள், சிறுகதை, படித்ததில் பிடித்தது எனப்பண்முகம் காட்டும் நிலாமகள்
2.புரட்சிகரமாகவும் உண்மை நிலையையும் உரைக்கும்   இருதயம் அவர்களுக்கும்.
3.கவிதை வடிவில் திருக்குறள் எழுதும் ரிஷ்வன் அவர்களுக்கும்
4.திருக்குறளில் காதல் கொண்டுள்ள வியபதிக்கும்
5. இந்தாண்டு முதல் எழுதும் திவ்யா @ தேன்மொழி அவர்களுக்கும் இதனை வழங்கி மனமகிழ்ச்சி கொள்கிறேன்.
      
    இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக இதன் படத்தை தங்கள் தளத்தில் காப்பி - பேஸ்ட் செய்து கொள்ளவும்.தாங்களும் இந்த விருதினை உங்கள் மனம் கவர்ந்த ஐந்து பதிவர்களுக்கு பகிர்ந்து உற்சாகப்படுத்துங்கள்.