திங்கள், பிப்ரவரி 20

கம்மா வேலை

         2008 மே முதல் தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஒரு குடும்பத்திற்கு நூறு நாள் வேலை வழங்கப்பட்டு அதற்கு கூலியாக ரூ 80 (2009 - ரூ120 இப்போ எவ்வளவுனே தெரியல!!!). தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர். இதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் என்று பெயர் சூட்டியுள்ளனர்.


 பல கிராமங்களில் இதனை கம்மா வேலை என்றுதான் அழைக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் கம்மாவிலேயே வேலை நடப்பதால் (கண்மாய்களில் தண்ணீர் இல்லாதது இதற்கு வசதியாய் போய்விட்டது) . இதற்கு சும்மா வேலை என்றே பெயர் வைத்திருக்கலாம். கூலியாட்களை குறை சொல்ல முடியாது. சிறிய இடத்தை பத்துபேர் சேர்ந்துகொண்டு சுரண்டுவது ஒரு வேலையென இது நடக்கிறது. இதனால் அரசாங்கத்திற்கு பெரிய அளவில் நட்டம்தான். விவசாயத்திற்கு ஆட்களே கிடைப்பதில்லை. ஏனென்றால் சும்மா இருந்தாலே ஊரக வேலையில் சம்பளம். இதனால் எல்லோரும் அங்கு செல்லவே விரும்புகிறார்கள்.


      விவசாயத்தினை பொறுத்தவரை நெல் நடவு செய்ய, களை எடுக்க, அறுவடைக்கு என ஆட்களின் தேவை இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இப்போது ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்துவிட்டது. அப்படியே வந்தாலும் பத்து வருடத்திற்குமுன் செய்த மாதிரி வேலை செய்வதில்லை.சம்பளமும் அதிகரித்துவிட்டது. நெல் அறுவடையின்போது வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் போட்ட முதல்கூட திரும்பவராத நிலைமை. வட்டிகட்டக் கூட முடியாமல் விவசாயம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்த ஊரக வேலை வாய்ப்புதிட்டமும் இப்போதைய காரணம். கீழுள்ள படத்தில் இடத்தை வாங்கத்தான் பந்தல் போட்டு வரிசையில் நிற்கின்றனர்.


           நிலைமை இப்படியே போனால் விவசாய நிலங்கள் எல்லாம் கட்டிடமாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை. சமீபத்தில்தான் நில விற்பனை கனஜோராக நடந்து வருகிறது, விவசாய நிலங்களை விற்கும்போது மனம் பதறுகிறது. குளுகுளு என்று நீர் ஓடிய இடங்களெல்லாம் இப்போது ஏசி கார்கள் ஓடுகின்றன.காரணம் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் அனைவருமே நிலங்களை விற்றுவிட்டு வேறு வேலைகள் பார்க்க சென்றுவிட்டனர். இந்தியா ஒரு விவசாய நாடு என்ற பெருமையை விரைவில் இழக்கும்.

  பின் அனைவரிடமும் பணம் இருக்கும். உணவுதான் இருக்காது.அனைவருமே உணவுக்குப் பதில் பணத்தினை சாப்பிடக் கடும் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். வருங்காலத்தில் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாக தமிழகத்தில் அந்த நிலைமை விரைவில் வரும். விவசாய நிலத்தினை இதற்காகவே விவசாயம் செய்ய வழியில்லாமல் தரிசாகப் போட்டு விடுகி்றனர்.


       இந்த திட்டத்தில் ஊழல் என்றும் புகார் எழுந்துள்ளது. (எதில்தான் ஊழல் இல்லை).ஏரி, குளத்தை ஆழப்படுத்தும் பணியும், கரைகளைப் பலப்படுத்தும் பணியும் நிரந்தரமானவையாகக் கருதப்பட முடியாத பணிகள். மழைக்காலத்தில் ஏரி, குளத்தின் கரைகள் கரைந்து போகும். ஆழப்படுத்தப்பட்ட ஏரிகள் மழையில் தூர்ந்துபோகும். ஆகவே, இத்திட்டத்தில் பொய்க்கணக்கு எழுதி சம்பாதிப்பது என்பது மிக எளிதாக இருக்கிறது. கிராமத்து ஆள்களைக் கூட்டி வந்து மதியச் சாப்பாடு போட்டு, கையில் ரூ.20, 30 கொடுத்து அனுப்பி விட்டு, 50 பேர் வந்த இடத்தில் 100 பேருக்குக் கணக்கு எழுதினாலும் இதையெல்லாம் கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுகிறது.(நன்றி YOGIBALA). மேட்டூர் நவப்பட்டி கிராமத்தில் இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறைந்த பட்சம் சாகுபடி பணிகள் முடியும் வரையாவது இத்திட்டத்தை நிறுத்திவைக்க கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.(நன்றி : POSITIVE KARTHICK).


     இதற்கு ஒரே தீர்வு நூறு நாட்கள் சும்மா பார்க்கும் வேலைக்கு சும்மாவே சம்பளத்தினை கொடுத்து விடலாம். வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு இவ்வளவு ரூபாய் என்று தீர்மானித்து வழங்கலாம். இதனால் வழக்கமாக நடைபெறும் அனைத்து வேலைகளுக்கும் ஆட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்து விடுவார்கள். அவர்களுக்கும் அது உதவித்தொகை போன்று பணமும் கிடைத்துவிடும். ஓரளவு விவசாயமும் பிழைக்கும். சில கட்சிகளும் இந்த கருத்தினை வலியுறுத்துகின்றன. இல்லையென்றால் மேலே கண்ட காட்சிதான் ( பணத்தினைத்தான் உண்ணவேண்டும்)

     சில படங்கள் கூகுள் தேடலில் கிடைத்தவை. நன்றி.
     

22 கருத்துகள்:

 1. பெயரில்லா20 பிப்ரவரி, 2012

  வெளிவராத நிலையை பற்றி எழுதியதுக்கு நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 2. செவிட்டில் அறைவது போல் உண்மையை போட்டு உடைத்து இருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 3. வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு இவ்வளவு ரூபாய் என்று தீர்மானித்து வழங்கலாம்.

  சிந்திக்கவேண்டிய சிறப்பான பகிர்வுகள்..

  பதிலளிநீக்கு
 4. வ்ருமைக்கோடு என்பதற்கு என்ன அளவு கோல் வச்சிருக்காங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசாங்கம் வைத்திருக்கும் அளவுகோலில் எல்லாம் மூன்று வேலையும் உணவு அருந்த முடியாது.

   நீக்கு
 5. குளுகுளு என்று நீர் ஓடிய இடங்களெல்லாம் இப்போது ஏசி கார்கள் ஓடுகின்றன.காரணம் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் அனைவருமே நிலங்களை விற்றுவிட்டு வேறு வேலைகள் பார்க்க சென்றுவிட்டனர். இந்தியா ஒரு விவசாய நாடு என்ற பெருமையை விரைவில் இழக்கும்.
  தாங்கள் கூறுவது வருந்த்ததுடன் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மைதான் .

  பதிலளிநீக்கு
 6. கம்மா வேலை வந்த பின் பசியாறும் குடும்பங்களும் பல உள்ளன சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். அதனால்தான் அதை உதவித்தொகை போன்று வருடத்திற்கொருமுறை மொத்தமாக கொடுக்கலாம் அல்லது மாதமொரு தடவை கொடுக்கலாம். மற்ற தொழில்கள் பாதிக்காது.

   நீக்கு
  2. உங்கள் கருத்துக்கு நன்றி ராஜி.

   நீக்கு
 7. வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படாத உன்னை அருமையாய் சொல்லி இருக்கிறீர்கள்!!

  பதிலளிநீக்கு
 8. இன்றைய நிலைமையை கவலையோடு சொல்லியிருக்கிறீர்கள்.சிந்திப்பார்களா !

  பதிலளிநீக்கு
 9. நீங்கள் சொல்வதுதான் யதார்த்தமான உண்மை
  உள்ளூர் தலவர்களும் மக்கள் பிரதி நிதிகள்
  அனைவருக்கும் இது தெரியும்
  ஓட்டு அரசியல் வாயைத் திறக்க மாட்டார்கள்
  அதிகார்களும் பிரச்சனையின்றி ஓடுகிறவரை
  ஓடட்டும் என்கிறார்கள்
  பார்ப்போம்

  பதிலளிநீக்கு
 10. அந்தக்காலத்தில் மன்னர்கள் வீட்டுக்கொருவரை அரசாங்கத்தின் சார்பில் குளம் வெட்ட, வாய்க்கால் வெட்ட என்று ஊர்ப்பணி செய்ய அழைப்பார்களாம். அதற்கு சம்பளம் கிடையாதாம். அதைத்தான் வெட்டி என்பார்கள் என்று படித்திருக்கிறேன். சம்பளமில்லாமல் சும்மா வேலை செய்வதுதான் வெட்டிவேலை என்பது போய் வேலையும் இன்றி வருமானமும் இன்றி சும்மா இருப்பதே வெட்டி என்று ஆகிவிட்டதாம். இனி வரும் காலத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு சும்மா இருப்பதுதான் வெட்டிவேலை என்று ஆகிவிடும்போல் உள்ளது.

  நாட்டு நடப்பைத் துல்லியமாய்ப் பகிர்ந்தவிதம் அருமை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 11. நல்ல பதிவு.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு