சனி, ஏப்ரல் 14

பொது அறிவு

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவு சம்பந்தமான வினாக்களின் தொகுப்பு.
  • 1. 2012ல் ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெறுகிறது? - இலண்டன்
  • 2.தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் எத்தனை? - 32
  • 3.சூரிய கதிர்வீச்சினை அளவிட - பிரிஹிலியோ மீட்டர்
  • 4.காற்றின் ஈரப்பதத்தினை அறிய - ஹைக்ரோ மீட்டர்
  • 5.மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
  • 6.தமிழ்நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதி - எம். யூசுப் இக்பால்
  • 7.தமிழக ஆளுநர் - கொனியேட்டி ரோசையா
  • 8. தமிழ்நாட்டு விலங்கு - வரையாடு
  • 9.தமிழ்நாட்டு பூ - செங்காந்தல் கார்த்திகைப்பூ
  • 10.தமிழ்நாட்டு பறவை - மரகதப்புறா
  • 11.தமிழ்நாட்டு மரம் - பனை
  • 12.தமிழ்நாட்டு சின்னம் - திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
  • 13.தமிழ்நாட்டு சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கை - 234
  • 14.தமிழ்நாட்டு நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை - 39
  • 15.சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல் - காவல்கோட்டம் எழுதியவர் - சு. வெங்கடேசன்
  • 16.கல்வெட்டு பற்றிய படிப்பு - எபிகிராபி
  • 17.நம் காதுகள் கேட்கவல்ல ஒலி அதிர்வெண் - 20 - 20000 ஹெர்ட்ஸ்
  • 18.யானைக்கால் நோய் ஏற்படுத்தும் உயிரி - க்யூலக்ஸ் வகை கொசுக்கள்
  • 19.மலேரியாவை பரப்புவது - அனபிலாஸ் கொசுக்கள்
  • 20.இந்திய நெப்போலியன், கவிராஜா, சாஹாரி போன்ற பட்டப்பெயர்கள் - சமுத்திரகுப்தருக்கு உரியவை
  • 21.நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் - குமார குப்தர்
  • 22.யுவான் சுவான் எழுதிய பயண நூல் -சியூக்கி
  • http://alaiyallasunami.blogspot.com/
  • 23.சின்னம் -சேரர் - வில்,சோழர் - புலி, பாண்டியன் - மீன்
  • 24.இயக்கங்கள் - பிரம்ம சமாஜம் - ராஜாராம் மோகன்ராய், ஆரிய சமாஜம் - சுவாமி தயானந்த சரஸ்வதி,ஒளவை இல்லம் - சகோதரி சுப்புலட்சுமி,.
  • 25.பத்திரிகைகள் - யங் இந்தியா - காந்திஜி, இந்தியா - பாரதியார், நியூ இந்தியா - அன்னிபெசண்ட், இண்டிபெண்டண்ட் - மோதிலால் நேரு, நேசனல் ஹெரல்ட் - ஜவகர்லால் நேரு.
  • 26.தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை கட்டியவர் - ராஜராஜ சோழன்
  • 27.UNESCO HERITAGE பட்டியலில் இடம்பெற்றவை - தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரக் கோவில்
  • 28.கல்வி மற்றும் கலாச்சார மையங்கள் - DAV பள்ளிகள் - லாலா லஜபதிராய், அலிகார் முஸ்லீம் பல்கலைகழகம் - சர்.சையது அகமது கான், கலாசேத்ரா - ருக்மணி தெவி அருண்டேல், காசி இந்து பல்கலைக்கழகம் - மதன்மோகன் மாளவியா, ஆசியாட்டிக் சொஸைட்டி - வில்லியம் ஜோன்ஸ்
  • 29.ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்து இடுபவர் - நிதித்துறை செயலர். பிற ரூபாய் நோட்டுகளில் கையெழுத்து இடுபவர் - ரிசர்வ் வங்கி கவர்னர்.
  • 30.உச்சமன்ற நீதிபதியின் ஓய்வு வயது - 65. உயர்நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது - 62.
  •                                                                                                       தொடர்ச்சி நாளை .....
  • அன்புடன்
  • விச்சு



4 கருத்துகள்: