ஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (PG TRB EDUCATION) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு. இனிவரும் பதிவுகளிலும் வினாக்கள் தொடரும். இதனை வாசிப்பவர்கள் தயவுசெய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வாசித்து அனைவரும் பயன்பெறவும் தங்களின் கருத்துக்களையும் தெரிவிக்கவும்.
1.கட்டாய இலவசக்கல்வியை 6 - 14 வரை அனைவருக்கும் வழங்க பரிந்துரை செய்த குழு - சாப்ரு கமிட்டி
2.நடமாடும் பள்ளிகள் என்ற கருத்தை புகுத்தியவர் _ மெக்டொனால்டு
3.இடைநிலைக் கல்விகுழு என்று அழைக்கப்படுவது - லட்சுமண முதலியார் குழு
4.தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1978
5.மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்
6.பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி
7.குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கும் சட்டப் பிரிவு - 24
8. சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1934
9.தேசிய எழுத்தறிவு இயக்கம் எந்த வயதினரிடையே எழுத்தறிவின்மையை போக்க கொண்டு வரப்பட்டது - 15-35
10.கிண்டர்கார்டன் என்பதன் பொருள் - குழந்தைகளின் தோட்டம்
11.கிராமப்புறகல்வி பற்றி ஆய்வு மேற்கொண்ட குழு - டாக்டர் ஷரிமாலி குழு
12.நவோதயா பள்ளிகளை தொடங்கிய பிரதமர் - ராஜிவ்காந்தி
13.தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது - உடுமலைப்பேட்டை அருகே
14.சைனிக் பள்ளிகள் கழகத்தலைவர் யார் -நமது பாதுகாப்பு அமைச்சர்
15.சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச்செயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள். அமெரிக்கா, கனடா
16.விஸ்வபாரதி என்பது ஒரு - பல்கலைக்கழகம்
17.ஒருவரது கவனவீச்சினை அறிய உதவும் கருவி - டாசிஸ்டாஸ்கோப்
18.டிஸ்கவரி ஆப் தி சைல்ட் என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மரியா மாண்டிசோரி
19.நுண்ணறிவு சோதனையின் தந்தை - ஆல்பிரெட் பீனே
20.ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் - அரவிந்தர்
21.தனி பயிற்றுவிப்பு முறை கற்பித்தலின் வேறு பெயர் என்ன - கெல்லர் திட்டம்
22.சோசியல் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற புத்தகத்தினை எழுதியவர் - ஹெர்பர்ட் ஸ்பென்சர்
23. உளவியலில் லோகஸ் என்ற சொல்லின் பொருள் - அறிவியல்
24.செயல்படு ஆக்கநிலையிறுத்தம் - ஸ்கின்னர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய விலங்கு - எலி
25.கெஸ்டால்ட் என்ற சொல்லின் பொருள் - முழுமை
26.உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய குரங்கின் பெயர் - சுல்தான்
27.நீந்தக்கற்றலின் அடிப்படை - செய்திறன் கற்றல்
28.அச்சீவிங் சொசைட்டி என்ற நூலின் ஆசிரியர் - மெக்லிலெண்டு
29.மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல்
30.நுண்ணறிவு ஈவுடன் தொடர்புடைய பரவல் - இயல்நிலைப்பரவல்.
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே...
பதிலளிநீக்கு