ஞாயிறு, மே 13

கிராமங்களில் காணாமல் போனவை

கிராமங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பல விசயங்கள் காணாமல் போய்விட்டன. சில தொலைந்து வருகின்றன.அவற்றில் சிலவற்றினை கூகுளின் துணையோடு தொகுத்துள்ளேன். சில பொருட்களின் புகைப்படங்கள் கூகுளில் தேடினாலும் கிடைக்கவில்லை.உதாரணமாக பம்ப்செட் வருவதற்கு முன்னர் கமலையில் நீர் இறைக்கும் உருளை, கமலைக்குழி போன்றவைதான் நீர் இறைக்கப் பயன்பட்டன. . அதில் ஒரு மாட்டுத்தோலிலான பை கட்டி நீர் இறைப்பார்கள். அதன் பெயர்கூடத் தெரியவில்லை.அதன் புகைப்படம் தேடினாலும் கிடைக்கவில்லைஅதுபோல நெல்லினை சேமித்து வைக்கும் குலுக்கை என்று சொல்வார்கள். அதுவும் கிடைக்கவில்லை. இப்படி இன்னும் நிறைய பொருட்கள் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் இருந்து தொலைந்து வருகின்றன. 

இன்னும் சில வீடுகளில் புழக்கத்தில் இருக்கும் பொருள்கள் என்றால் அது அம்மி, ஆட்டுக்கல், உரல், உலக்கை, திருகை போன்றவை. மின்சாரத் தட்டுப்பாட்டினால் இது போன்ற பொருட்கள் இன்னும் கொஞ்சம் உயிரோடு உள்ளன.
அலையல்ல சுனாமி
திருக்கை


அம்மி

அலையல்லசுனாமி
உரல்

ஆட்டுக்கல்


கிராமங்களில் போக்குவரத்து என்றாலே அது மாட்டு வண்டியும், குதிரை வண்டியும்தான். எங்கள் ஊர் அரசு மருத்துவமனையின் முன்பு நிறைய குதிரை வண்டி நிற்கும். அப்போதெல்லாம் அதுதான் ஆம்புலன்ஸ் வண்டி. பல வருடங்களுக்கு முன்பே அவை தன் அடையாளத்தினை இழந்து விட்டன. அவற்றினை வைத்து பொழப்பு நடத்தியவர்கள் இப்போது என்ன செய்து கொண்டு இருப்பார்கள் என்பது கேள்விக்குறி.

கிராமம்
குதிரை வண்டி
வயலினை உழவு செய்வதற்கு மாட்டு வண்டியை விட்டால் வேறு வழியில்லை. இப்போது உழவு செய்ய நிலமே இல்லை. மாடுகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. கிணறுகளில் நீர் இறைக்க பல வழிமுறைகளை கடைப்பிடித்தனர். அதில் முக்கியமானது கமலை, ஏற்றம் , காலால் நடந்து கொண்டே நீர் இறைத்தல் போன்றவை. அவை எல்லாமே எப்போதோ காணாமல் போய்விட்டன. 
கிராமம்


கிராமம்
கமலை இறைத்தல்விறகு அடுப்பு, பனை ஓலையில் செய்த முறம், கிலுகிலுப்பை, பொட்டி, விசிறி போன்றவை, கீரை கடையும் மத்து, அரிக்கேன் லைட், ஊர் கல், பழைய ஐந்து பைசா, கோலி சோடா , சுமைகளை இறக்கி வைக்கப் பயன்படும் சுமைதாங்கி கல் , காதிலும் மூக்கிலும் நகைகள் அணியும் கிராமத்துப்பெண் இப்படி நிறைய விசயங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து தொலைந்து விட்டன.

முறம்
கிலுகிலுப்பை

பனைஓலை பொருட்கள்விச்சு


ஊர் கல்

சுமைதாங்கிதமிழக பாரம்பரிய விளையாட்டுக்கள் அடியோடு ஒழிந்துவிட்டன. எல்லாக் குழந்தைகளும் தொலைக்காட்சிக்கும், வீடியோ கேமுக்கும், கிரிக்கெட்டுக்கும் மாறிவிட்டனர். பல குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பும் கிடையாது. அடுக்கு மாடியில் பூட்டப்பட்ட அறையினுள் துணைக்குகூட இன்னொரு குழந்தைகூட இல்லாமல் (நாம் இருவர் நமக்கு ஒருவர் கலாச்சாரம்) தனியாக விளையாடும் பரிதாபம். கிராமத்தின் கலாச்சாரம், பாரம்பரியத்தை மீட்டெடுப்பது மிகவும் கஷ்டமான விசயம் என்றாலும் சிலவற்றையாவது பாதுகாப்போம்.
தட்டாங்கல்


காயா? பழமா?

ஒரு குடம் தண்ணியெடுத்து...


பாண்டி ஆட்டம்

தாவி விளையாடுதல்

கண்ணாமூச்சி

பல்லாங்குழி