வெள்ளி, மே 18

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க

தமிழ் புத்தகம்
தமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தமாகத் தொகுக்கும் ஒரு சிறிய முயற்சி. இன்னும் நிறைய தளங்கள் உள்ளன. நான் தேடியவற்றில் கிடத்த தளங்களை மட்டும் தொகுத்துள்ளேன்.அவற்றில் மிகச்சிறப்பான தளங்கள் எனில் ஓபன்ரீடிங், அழியாச்சுடர்கள்தமிழ் தொகுப்புகள், சிலிக்கான் ஷெல்ப் போன்றவையாகும்.  ஓபன் ரீடிங் தளத்தில் வகைவகையாகப் புத்தகங்களைப் பிரித்து வைத்துள்ளனர்.அவை

சிலிக்கான் ஷெல்ஃப் தளம் புத்தகங்களுக்கான ஒரு பிளாக் என அறிமுகப்படுத்திக்கொண்டு நிறைய சிறுகதைகள் எழுத்தாளர்கள் வரிசையில் பிரிக்கப்பட்டுள்ளது.
நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்பு பெட்டகம் என அறிமுகப்படுத்தும் அழியாச்சுடர்கள் தளமும் பிரபலமான அனைத்து எழுத்தாளர்களின் புத்தகங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.
war of the ring திரைப்படம் உருவான விதம்பற்றி 16 எம்பி மற்றும் 280 பக்கங்கள் கொண்ட அருமையான மின்நூல் கருந்தேள் தளத்தில் கிடைக்கின்றன. மிகவும் கஷ்டப்பட்டு பல நண்பர்கள் ஒன்றிணைந்து உருவாகியுள்ளார்கள்.
தமிழ் தொகுப்புகள் தளமும் வகைவகையாக புத்தகங்களைப் பிரித்து எழுத்தாளர்களின் பெயர்களோடு பட்டியலிட்டுள்ளனர்.
சமையல், பயணக்கட்டுரை, கம்ப்யூட்டர், பகவத்கீதை, முல்லா கதைகள், பாட்டி வைத்தியம் என அத்தனையும் சுமார் எழுபதுக்கும் அதிகமான தமிழ் புத்தகங்கள் ஒரே கோப்பில் வேண்டுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். இதில் save file to computer என்பதில் கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
செந்தில்வயல் தளத்தில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கிடைக்கின்றன. அனைத்துமே உபயோகமான புத்தகங்கள் ஆகும். 
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலை ஓசை, பார்த்திபன் கனவு என மிகவும் பிரபலமான நாவல்கள் மற்றும் புத்தகங்களை டவுன்லோட் செய்ய தங்கம்பழனி தளத்தினை கிளிக் செய்யுங்கள்.
தமிழ்தேனி தளத்திலும் மிகவும் பிரபலாமன எழுத்தாளர்களின் புத்தகங்களின் இணைப்பு உள்ளது. இதைப்பயன்படுத்தி நீங்கள் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்யலாம்.
காதலின் ரகசியம் என்ற புத்தகம் 1 எம்பி கொள்ளளவில் உள்ளது. விழியீர்ப்பு விசை என்ற தபூசங்கரின் புத்தகம் பெற இங்கே கிளிக் செய்யவும். வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் என்ற புத்தகம் பெற இங்கே கிளிக் செய்யவும். தேவதைகளின் தேவதை, எனது கருப்பு பெட்டி போன்ற தபூசங்கரின் புத்தகங்களும் உள்ளன. எளிய தமிழில் ஜாவா மென்நூல் பெற இங்கு கிளிக் செய்யவும். மருத்துவமும் சிகிச்சையும் என்ற அழகான நூல் தமிழில் இங்குள்ளது, தமிழ் கம்ப்யூட்டர் டிக்‌ஷ்னரி பெற இங்கு கிளிக் செய்யவும்.
கவிஞர் அறிவுமதியின் நட்புகாலம் புத்தகம் பெற இங்கே கிளிக் செய்யவும். இந்த கவிதைத்தொகுப்பு ஆண்பெண் நட்பின் ஆழத்தினைக்காட்டும்.
கவிஞர் வைரமுத்துவின் மிகவும் ரசிக்கத்தக்க கவிதை வடிவில் ஒரு காதல் காவியம் அன்றால் அது தண்ணீர் தேசம்தான். அதனைப்பெற இங்கு கிளிக் செய்யவும்.
மேலும் சில தளங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ் வார, மாத இதழ்களைத் தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள்.
இதுபோன்று இன்னும் பல தளங்கள் இருக்கலாம். தமிழில் புத்தகம் வேண்டுவோர் மற்றும் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய விரும்புவோர் இதனைப் பயன்படுத்திப்பாருங்கள்.

23 கருத்துகள்:

  1. அன்பரே நீண்ட நாட்களாக இதை தேடினேன் நன்றி

    பதிலளிநீக்கு
  2. புத்தகங்கள் மனிதனை பண்படுத்துகின்றன.அவைகளி தொகுத்திருக்கும் தளங்களைப்பற்றிய தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அனைத்துமே உபயோகமான புத்தகங்கள்.தளங்களைப்பற்றிய தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா18 மே, 2012

    அன்புள்ள மாரிமுத்து,

    சிலிகான் ஷெல்ஃப் தளத்தைப் பற்றிய உங்கள் பாராட்டுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு தல, நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும், இவற்றை தொகுக்க மிகவும் கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று உணர்கிறேன் ..!

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  7. எனக்குக் கிடைத்த விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் அதை ஏற்றுக் கொள்ள தாழ்மையுடன் அழைக்கின்றேன்


    மீண்டு(ம்) வந்தேன்

    பதிலளிநீக்கு
  8. பொக்கிஷ அறையின் சாவியை சகோதரிக்கு பரிசளித்த சகோதரருக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. நல்ல தொகுப்பு சார் ! நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான சேவை
    மனமார்ந்த நன்றிகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  11. நல்ல தொகுப்பு நன்றி

    பதிலளிநீக்கு
  12. உங்களின் பணியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    என் போன்ற நூல் விரும்பிகளுக்கு ஏற்ற தளம் உங்களுடையது நன்றி.
    வாழ்க உங்கள் பணி.

    பதிலளிநீக்கு
  13. இது ஒரு அற்புத பொக்கிஷம்.. நன்று விச்சு பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
  14. நீண்ட நாள் ஆசை .நன்றி

    பதிலளிநீக்கு
  15. தடை செய்ய பட்டுள்ளது போல உங்கள் தொடுப்பு .முன்னரே பார்க்காமல் விட்டுவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  16. ஓம் ஸ்ரீமுருகன் துணை

    வணக்கம் நண்பரே! மாபெரும் நற்பணி! பலத்தளங்களில் தேடித்தேடி அலைந்து கண்டெடுத்த ரத்தினங்களை ஒரே தளத்தில் காணம்படியும், பதிவு இறக்கம் செய்யும்படியும் செய்து உள்ள உங்கள் தமிழ்ப்பணி போற்றுதலுக்கு உரியது.
    நன்றி
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு