தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ( Continuous and Comprehensive Evaluation )
வரும் (2012 - 2013 ) கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முப்பருவத்தேர்வு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. புத்தகங்கள் தொகுதி 1 ல் தமிழ் மற்றும் ஆங்கிலமும், தொகுதி 2 ல் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலும் இருக்கும். மூன்று பருவத்திற்கும் தனித்தனிப் புத்தகங்கள் வழங்கப்படும். முதல் பருவம் ஜீன் முதல் செப்டம்பர் வரை, இரண்டாம் பருவம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை, மூன்றாம் பருவம் ஜனவரி முதல் ஏப்பிரல் வரை இருக்கும்.1 முதல் 8ம் வகுப்புவரை மதிப்பீடு முறையானது CCE முறையில் இருக்கும்.
CCE முறையானது உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த அனைத்துக் கூறுகளையும் மதிப்பிடுதல் ஆகும். மதிப்பீடு தொடர்ந்து நடைபெறும். கல்விசார் மதிப்பீடானது ஐந்து பாடங்கள் மற்றும் உடற்கல்வியை உள்ளடக்கியது. இவற்றில் இரண்டு வகை:
1. வளரறி மதிப்பீடு ( Formative Assesment Evaluation ) - பருவம் முழுவதும்.
2. தொகுத்தறி மதிப்பீடு ( Summative Assesment Evaluation ) - ஒவ்வொரு பருவ இறுதியிலும், தற்போதுள்ள எழுத்து தேர்வு போன்றது.
1. வளரறி மதிப்பீடு ( Formative Assesment Evaluation )
FA ( a ) - குழந்தையில் நெகிழ்வுத்தன்மை உடையது. தன்னார்வம், பங்கேற்பு, ஆர்வம், ஈடுபாடு, மகிழ்ச்சி மற்றும் ஆசிரியரின் உற்று நோக்கலை அடிப்படையாகக்கொண்டது.
ஏதேனும் நான்கு செயல்பாடுகளில் சிறந்த இரண்டு செயல்பாடுகளை மதிப்பிட வேண்டும். ஒவ்வொன்றிற்கும் பத்து மதிப்பெண்கள் வீதம் இருபது மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
FA ( b ) - குறிப்பிட்ட பாடப்பொருள் மாணவர்களின் கற்றலடைவை அறிய வாய்மொழி அல்லது சிறு எழுத்து தேர்வு முறையில் மதிப்பிடுவது ஆகும். இது குறிப்பிட்ட விடையை மட்டும் பெற உதவும். பாடப்பொருள் குறித்த அறிவுத்திறனை மதிப்பிட இது உதவும். ஏதேனும் நான்கு செயல்பாடுகளில் சிற்நத இரண்டு செயல்பாடுகளை மதிப்பிட வேண்டும். ஒவ்வொன்றிற்கும் பத்து மதிப்பெண்கள் வீதம் இருபது மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
இதனை தரநிலைப்பதிவேட்டிலும் பதிய வேண்டும். மாணவனின் திரள் பதிவேட்டிலும் பதியவேண்டும்.
2. தொகுத்தறி மதிப்பீடு ( Summative Assesment Evaluation ) - பருவ இறுதியில் எழுத்து தேர்வின் மூலம் மதிப்பிடப்படும். வினாத்தாள் திட்ட வரைவின்படி இருக்கும். கற்றல் அடைவுகளை அறிய இது பயன்படும்.
முதலில் AVVAIYAR FONT இங்கு கிளிக் செய்து தரவிறக்கி அதை copy செய்து கொண்டு control panalல் FONTS என்பதில் PASTE செய்து கொள்ளவும்.
2012 - 2013 ம் ஆண்டில் தொடக்க நிலை வகுப்புகளுக்கான அனைத்துப் பாடங்களின் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பற்றிய கையேடுகள் பெற இங்கு கிளிக் செய்யவும்.
உயர் தொடக்க வகுப்புகளுக்கான கையேடுகள் கீழே...
6ம் வகுப்பு ஆங்கிலம் CCE TEACHERS MANUAL இங்கு கிளிக் செய்யவும்.
7ம் வகுப்பு ஆங்கிலம் CCE TEACHERS MANUALஇங்குள்ளது.
8ம் வகுப்பு ஆங்கிலம் CCE TEACHERS MANUAL இங்கு கிளிக் செய்யவும்.
கணிதப்பாடத்திற்கான பவர்பாயிண்ட் இங்கு கிளிக்கவும்.
அறிவியல் பாடத்திற்கான கையேடு இங்குள்ளது.
சமூக அறிவியல் பாடத்திற்கான கையேடு பெற இங்கு கிளிக் செய்யவும்.
நிறைய நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க என்று மட்டும் தெரியுது... ஆனா எதுவும் புரியுதில்லை:((
பதிலளிநீக்குஆமா ஆதிரா! இன்னும் ஆசிரியர்களுக்கே விழங்கவில்லை. இந்தாண்டு முதல்தான் அமலுக்கு வருகிறது.
நீக்குபிரயோசனமான பதிவுகள்.தேவையானவர்களிடம் போய்ச்சேர வையுங்க விச்சு !
பதிலளிநீக்குதமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இதனைப்பற்றிய பயிற்சி வழங்கியுள்ளார்கள். இன்னும் முழுமையாகப் புரிவதற்கு கையேடுகள் துணைபுரியும்.
நீக்குபலருக்கும் பயன்படும் பதிவு
பதிலளிநீக்குஆசிரியர் - மாணவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே புதிய மதிப்பீட்டு முறையின் சிறப்புகள் வெளிப்படும்.
பதிலளிநீக்கு