வெள்ளி, ஜூன் 1

இல்லை... இல்லை...


ஒரு பயிற்சியில் சொன்ன இல்லை... இல்லை... என்ற கருத்துடைய விசயத்தை அவர்கள் எங்கு சுட்டார்களோ! அதனைச் சுட்டு உங்களுக்கு தருகிறேன். ஆமா! இதெல்லாம் உண்மையா? 

மலைப்பாம்பிற்கு விஷமில்லை
ஈக்களுக்கு பற்களில்லை
பாலில் இரும்பு சத்து இல்லை
வண்ணத்துப்பூச்சிக்கு வாயில்லை
பாம்பின் கண்களுக்கு இமையில்லை
யமுனைநதி கடலில் கலப்பதில்லை
வடதுருவத்தில் நிலப்பரப்பில்லை
’சானா’ புழுவுக்கு தாயில்லை
முதலைக்கு நாக்கில்லை

பாம்பிற்கு செவியில்லை
வெளவாலுக்கு பார்வையில்லை
ஈசலுக்கு வாயில்லை
கிவி பறவைக்கு இறக்கையில்லை
தவளைக்கு கழுத்து இல்லை
நண்டுக்கு தலையில்லை
காண்டாமிருகம் கொம்பினால் தாக்குவதில்லை
போலார்கரடி நீர் குடிப்பதில்லை
சுண்டெலிக்கு வியர்ப்பதில்லை
யானையின் துதிக்கையில் எலும்பில்லை
குயில் கூடு கட்டுவதில்லை
சந்திரனில் வாயுமண்டலம் இல்லை
அல்பேனிய நாட்டில் மதங்களில்லை
ஆப்பிரிக்காவில் புலிகளில்லை
ஆப்கானிஸ்தானில் ரயில்களில்லை
சவுதி அரேபியாவில் நதிகளில்லை
நியூசிலாந்து நாட்டில் காக்கைகளில்லை
......................................................
கொஞ்சம் கலாட்டா...

சென்னையில் பெட்ரோல் இல்லை (குடிக்கத் தண்ணியே இல்லை)
காதலுக்கு கண்ணில்லை (கிட்னி, நுரையீரல், கல்லீரல், கணையம் எல்லாம் இருக்கா?)
அரசியலில் நிரந்தர எதிரியில்லை (நிரந்தர நண்பனும் இல்லை.. மொத்தத்தில் மனுசனே இல்லை)
சினிமா வில்லனுக்கு ஜோடியில்லை ( பிறகு எப்படி ஹீரோயினை கடத்துறது?)
சில சாமியாருக்கு பெண்ணாசை இல்லை ( காலை அமுக்கிவிடும் பெண்சீடர்கள் மட்டும் உண்டு... குறிப்பு : ரஞ்சிதாவை சொல்லவில்லை)
பெண்ணில்லாமல் ஆணுக்கு வெற்றியில்லை (மனைவியின் நச்சரிப்பு தாங்காமத்தான் புதுசு புதுசா யோசிக்கிறான்)