உலகம் குழந்தையாக இருந்தபோது எனும் நூலில் இந்தியப் பழங்குடியினரின் பலவகையான பழங்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த அழகிய நூலைத் தமிழில் பிரிஜிட்டா ஜெயசீலன் எழுதியுள்ளார். சில கதைகள் சுவாரஸ்யமானவை. மலைவாழ் மக்கள் மனிதன் தோன்றியது குறித்துப் பல்வேறு அபிப்பிராயங்கள் கொண்டுள்ளனர். சிலர், கடவுள் தம் கைகளினால் முதல் மனிதனைக் களிமண் கொண்டு உருவாக்கினார் எனக் கூறுகிறார்கள்.
சிலர் ஆதிமனிதன் பெரிய முட்டையிலிருந்து வெளிவந்ததாகக் கூறுகிறார்கள். வேறுசிலர், பூமித்தாயின் குழந்தையாய் பூமி பிளந்து மனிதன் வெளிவந்ததாய்க் கூறுகிறார்கள். சிலர் ஒரு தேவதைக்கு மகனாகப் பிறந்தவனே ஆதி மனிதன் எனவும் இன்னும் சிலர் விலங்கிலிருந்து பிறந்தவனே மனிதன் எனவும் சொல்கின்றனர். ஆனால் எல்லோரும் ஒத்துக்கொள்ளும் விசயம் ஒன்று உண்டு; ஆதி மனிதன், தற்கால மனிதனைவிடத் தோற்றத்தில் நிறைய மாறுபட்டிருந்தான். இந்த ஒத்த கருத்தைப் பின்வரும் கதைமூலம் அறியலாம். ஒரிசாவைச் சேர்ந்த சாரோக்கர்கள் ஆதிமனிதர்களுக்கு வால் இருந்ததாக நம்புகிறார்கள்.
மனிதர்களுக்கு வால் இருந்த பழங்காலத்தில் அவர்களுடைய வால்கள் தரையைத் தொடுமளவுக்கு நீண்டிருந்தன. ஜனத்தொகை பெருகவே, விசேஷ காலங்களில், கல்யாணக்கூட்டங்களில், சாவுக்கூட்டங்களில் ஒருவருடைய வாலை மற்றவர் மிதித்தனர்; தடுக்கி விழுந்தனர். இது மிக வேடிக்கையாக இருந்தது.
ஒருமுறை கிட்டுங் எனும் கடவுள் சந்தைக்குப் போனபோது வழக்கம்போல் அங்கு ஒரே கூட்டம். நல்ல புகையிலைக்காக கடைகடையாகத் தேடி அலைந்தபோது யாரோ ஒருவர் வாலினால் தடுக்கிவிட , நிலைகுழைந்து விழுந்துவிட்டார். துரதிருஷ்டவசமாக கல்லின்மேல் விழுந்ததால் முன்வரிசைப்பற்கள் இரண்டு கீழே விழுந்தன. சந்தை முழுவதும் சிரிக்க , கிட்டுங்குக்குக் கோபம் வந்தது.. இத்தனைக்கும் காரணமான வாலைப் பிடுங்கித் தூர எறிந்தார். பிறவால்கள் இதைப்பார்த்ததும் பயந்து போய்த் தாமே உடலிலிருந்து கழட்டிக் கொண்டு ஓடின. கிட்டிங்குவின் வால் பனைமரம் ஆனது. பிறவால்கள் புற்கலாகி இப்பொது துடைப்பம் செய்யப்பயன்படுகின்றனவாம்.
குறிப்பு : ஒவ்வொரு வீட்டு துடைப்பத்திலும் யாரோட வால் இருக்குதோ!
குறிப்பு : ஒவ்வொரு வீட்டு துடைப்பத்திலும் யாரோட வால் இருக்குதோ!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :D
பதிலளிநீக்குவால் போய் விட்டது... இந்த சேட்டை தான் போகவில்லை... ஹா... ஹா...
பதிலளிநீக்குவித்தியாசமான கதை! புதிய தகவல்! நன்றி!
பதிலளிநீக்குவித்தியாசமான வரலாற்றுக்கதை நூல் போல!ம்ம் வால் கதை சிரிப்பாக இருக்கு!ம்ம்
பதிலளிநீக்குகிட்டுங்ன்னு ம் ஒரு கடவுளாஆஆஆஆ.கடவுள் எண்ணிக்கையோடு இன்னுமொருத்தரா.நல்லாப் பாத்தீங்களா விச்சு.கிட்டுங்ன்னு இருக்கா இல்லா விச்சுங்ன்னு இருக்கா....ஹாஹா !
பதிலளிநீக்குவால் அறுக்காம இருந்திருக்கலாம்ன்னு இருக்கு.இன்னும் அழகாவும் அவனது குணத்துக்கு ஏத்தாமான வடிவமாவும் இருந்திருப்பான்.அழகு விச்சு !
சகோ. அருமையான பகிர்வு .. இந்த நூலை நானும் வாசிக்க வேண்டும் .. மனிதனுக்கு ஏன் வால் இல்லை என்ற எவனோ ஒருவனின் சிந்தனைத் தூண்டலில் எழுந்த கதை தான் இந்த சரோக்கர்கள் கதை .. படிக்க நல்லா இருக்கு !!
பதிலளிநீக்குகுறிப்பு : ஒவ்வொரு வீட்டு துடைப்பத்திலும் யாரோட வால் இருக்குதோ!
பதிலளிநீக்கு///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
நமக்கெல்லாம் வாலும் இருந்தா, எவ்ளோ சூப்பராக இருக்கும்?:)))...
பதிலளிநீக்குஇல்ல விச்சு மாஸ்டர் வாலோட படிப்பிச்சால் எப்பூடி? இருப்பார்?:)) ஹையோ இதெல்லாம் ச்ச்ச்சும்மா ஒரு கற்பனை பண்ணிப் பார்த்தேன்.
பிறகு வாலுக்கு பவுனால சில்வரால என குஞ்சம் எல்லாம் கட்டுவினம், தகுதிக்கு ஏற்றபோல:)) ஹையோ... இதை எல்லாம் யோசிச்சுத்தானாக்கும் வால் வைக்கவில்லை:))
என்ன ஒரு வில்லத்தனம்..... வாலுக்கே வாலா? வாலை மடக்கிக்கொண்டு சேரில் உட்காருவது ரொம்ப கஷ்டமாயிடும்.
நீக்குஇன்னும்டார்வின் தியரியைத்தான் சொல்லிகொண்டிருக்கிறார்கள்.மனித இனம் உருவான வரலாறு பற்றி பேசுகிற போது/
பதிலளிநீக்குநல்ல கதை..
பதிலளிநீக்குமனிதன் உருவாகும் போது,வாலுடன் தான் பிறக்கிறான்...
ஆனால், நாளடைவில் வால் மருகி விடுகிறது..
அதனால், தான் இன்றும் பல மனிதர்கள் பேஸ்புக் வாலிலேயே திரிகிறார்கள்
வாழை இழந்த கடஹை வித்தியாசமா இருக்கு.
பதிலளிநீக்குகதை புதுசா இருக்கு அண்ணா! நல்லாருக்கு!
பதிலளிநீக்குஎன்ன ஒரு புதுக் கதை. ரசனை தான்.
பதிலளிநீக்குபதிவிற்கு நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
ரசித்தேன்.
பதிலளிநீக்கு// கிட்டிங்குவின் வால் பனைமரம் ஆனது. பிறவால்கள் புற்கலாகி இப்பொது துடைப்பம் செய்யப்பயன்படுகின்றனவாம். // நல்ல கதை.
பதிலளிநீக்குதொடருங்கள்
வித்தியாசமான கதை
நீக்குவை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி.