ஞாயிறு, ஆகஸ்ட் 19

காகித கப்பல்

அலையல்ல சுனாமி

அழகழகான 
கப்பல்  செய்து 
விட்டுகொண்டுதான்
இருந்தேன்
நீயும் ரசிக்கிறாய்
என நினைத்து...
அடிப்பாவி! 
விட்டது கப்பலை அல்ல
என் கவிதையை!
-------------------------------------------------------

நீயும் நானும் 
ஒன்றுதான்
நீ மிதக்கிறாய்
தண்ணீரில்
நான் மிதக்கிறேன்
கண்ணீரில்
-------------------------------------------------------

வெற்றுக்காகிதமான நீ
அவள் கைபட்டபின்
கப்பலானாய்!
வெற்றுமனிதனான நான்
அவள் பார்த்தபின்
கவிஞனானேன்!
------------------------------------------------------

நாமிருவரும்
ஒன்றுதான்...
நினைவுகளைச்
சுமந்து பயணிக்கும் 
காகிதக்குப்பை!
-------------------------------------------------------

நான் செய்த

காகித கப்பல் 
அழகுதான்
விட்ட இடம்தான்
காட்டாறு!
-------------------------------------------------------