சனி, ஆகஸ்ட் 25

குழந்தையிடம் கற்றுக்கொள்

அனைத்தும் அறிந்ததாக நினைக்கும் மனிதா
குழந்தையிடம் கற்றுக்கொள்
பழையதை உடனே மறக்க
பொறாமையை பொசுக்க
சிறிய பொருளிடத்திலும் இன்பம் காண
கோபத்திலும் கொஞ்ச!

அனைத்தும் அறிந்ததாக நினைக்கும் மனிதா

குழந்தையிடம் கற்றுக்கொள்
அனைவரிடத்திலும் நட்பு கொள்ள
அன்னையிடத்தில் அன்புகொள்ள
தந்தையிடம் பாசம் காட்ட
மற்ற குழந்தைகளிடம் பிரியம் காட்ட!


அனைத்தும் அறிந்ததாக நினைக்கும் மனிதா
குழந்தையிடம் கற்றுக்கொள்
எதிர்பார்ப்பில்லாத அன்பு காட்ட
அடித்தாலும் உன்னைத் அணைக்க
மண்ணிலும் மயக்கம் கொள்ள
நிறைவான வாழ்க்கை வாழ!


அனைத்தும் அறிந்ததாக நினைக்கும் மனிதா
குழந்தையிடம் கற்றுக்கொள்
பாசாங்கு இல்லாத வாழ்க்கை வாழ
போலியான போக்கினை கைவிட
உண்மையான முகத்துடன் வாழ
சின்ன ஸ்பரிசத்திலும் இன்பம் காண!


அனைத்தும் அறிந்ததாக நினைக்கும் மனிதா
குழந்தையிடம் கற்றுக்கொள்!



10 கருத்துகள்:

  1. சிறப்பான கவிதை! இத்தனையும் குழந்தைகளின் அற்புதமான குணநலன்கள்! கற்றுக்கொள்ள வேண்டும் தான்!

    இன்று என் தளத்தில்
    சித்துண்ணி கதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
    பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html

    பதிலளிநீக்கு
  2. குழந்தையிடம் கற்றுக்கொள்ள் நிறைவான விளக்கங்கள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை.
    // அனைத்தும் அறிந்ததாக நினைக்கும் மனிதா
    குழந்தையிடம் கற்றுக்கொள்! //அருமையாகவுள்ளது

    என்னுடைய தளத்தில் ஏணிப்படி

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. கவிதையும் படமும் அழகாக உள்ளன.
    கருத்துக்களும் வெகு அருமை.
    பாராட்டுக்கள்.
    vgk

    பதிலளிநீக்கு
  5. அதைத்தானே கள்ளமில்லா வயசு என்கிறோம்.வளர்ந்து விபரம் தெரிய கள்ளமும் குடியேறிக்கொள்கிறது.....சிலசமயங்களில் குழந்தைகளின் கேள்விகளுக்கு எம்மால் ஈடு கொடுக்கவே முடிவதில்லையே !

    பதிலளிநீக்கு
  6. நிஜமே அண்ணா! குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள எத்தனை விஷயங்கள்! நுணுக்கமான கேள்விகள், வேகமும் விவேகமும், எதையும் மறப்பது, அடித்தாலும் வந்து அணைப்பது! அருமையான பதிவு அண்ணா!

    பதிலளிநீக்கு
  7. குழந்தையிடம் கற்றுக்கொள் அனைவரிடத்திலும் நட்பு கொள்ள.அருமையான கவிதை விச்சண்ணா.

    பதிலளிநீக்கு
  8. நெகிழ்ந்து போனேன். உண்மை. குழந்தை கற்றுத் தரும் பாடம் ப்மனிதன் படிக்க மறக்கும் பாடம்.குழந்தையாக மனிதன் இருந்துவிட்டால் குழப்பம் ஏதும் இல்லை என்பது உண்மையே

    பதிலளிநீக்கு
  9. இதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றனரோ?!!!!

    பதிலளிநீக்கு