செவ்வாய், அக்டோபர் 23

நானோ

தனிமமாக இருக்கும் நம்மை
உன் தந்தை சேர்மமாக மாற்றுவாரா!

இது வேதியியல் படிக்கும் ஒரு மாணவரின் காதல் கவிதை. சரி தனிமம் என்றால் என்ன? சேர்மம் என்றால் என்ன?

தனிமம் : தனிமம் என்பது தனிப்பட்ட ஒரே வகை அணு. ஒவ்வொரு தனிமத்திற்கும் ஓர் அணு எண் உண்டு.  தங்கம், வெள்ளி, இரும்பு போன்றவை வெவ்வேறு தனிமங்கள் ஆகும். 2006 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் மொத்தம் 117 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றுள் அணுவெண் 1 கொண்ட ஹைட்ரஜன் முதலாக அணுவெண் 94 கொண்ட புளுட்டோன்யம் வரை உள்ள 94 தனிமங்களும் இயற்கையில் கிடைப்பன. இது, சாதாரண வேதியியல் நுட்பங்களைப் பயன்படுத்தி வேறு பதார்த்தங்களாகப் பிரிக்க அல்லது அவ்வாறு மாற்ற முடியாதவை ஆகும். இத் தனிமங்களின் இயல்பு கெடாமல் மேலும் பிரிக்கமுடியாத மிகச் சிறிய துகள் அணு எனப்படும். தனது எல்லா அணுக்களிலும் ஒரே அளவான புரோட்டான்களை (protons) கொண்ட பதார்த்த வகையே தனிமம் ஆகும். கால்சியம் என்ற தனிமம் அனைத்து உயிரிகளின், உடல் செயல்பாட்டுக்கும் கட்டாயம் தேவையாகும். கால்சியம் என்றால் என்ன தெரியுமா? அதுதான் சுண்ணாம்பு. லத்தீனில் கால்சிஸ் என்ற வார்த்தைக்கு சுண்ணாம்பு என்பதுதான் பொருள். ஓஸ்மியம் (osmium) அல்லது இருடியம் (iridium) தான் அடர்த்தி மிகுந்த தனிமம் ஆகும்.


அலையல்லசுனாமி


சேர்மங்கள் : சேர்மங்கள் என்பன ஒன்றுக்கும் மேற்பட்ட தனிமங்களின் இணக்கத்தினால் உருவாகும் கூட்டமைப்பு ஆகும். அணுக்களின் இடையே உருவாகும் பிணைப்பின் தன்மையைப் பொறுத்து சேர்மங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டு ஹைட்ரஜன்அணுக்களையும் ஒரு ஆக்ஸிஜன் அணுவினையும் கொண்ட நீர் (H2O) ஒரு சேர்மம் ஆகும்.
நானோ :நானோ தொழில் நுட்பம் (nanotechnology) என்ற சொல்லை முதல் முதலில் டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகப் (Tokyo Science University) பேராசிரியர் நொரியோ தனிகுச்சி (Norio Taniguchi) என்பவர் 1974ல் அறிமுகப்படுத்தினார்.ஒரு நானோ மீட்டர் 1,000,000,000 பாகமாக பிரித்தால் கிடைக்கும் ஒருபகுதி ஆகும். ஒரு நானோ மீட்டர் என்பது பத்து ஹைட்ரஜன் அணுக்களை பக்கத்தில் வைத்தால் கிடைக்கும் நீளம் ஆகும்.மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000நானோமீட்டர்  தடிமன் கொண்டது. ஒரு எலக்ட்ரானை தன் விருப்பம்போல் நடத்துவதுதான் நானோவின் முக்கிய குறிக்கோள். தற்போது இதன் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. கம்ப்யூட்டர் முதல் உடல் செயல்பாடு, விவசாயம், மருத்துவம் என அனைத்திலும் நானோவின் தொழில்நுட்பம் பயன்படுகிறது. பெண்களுக்கு இதன் பயன்பாடு ரொம்பவே அதிகம். அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இனி வருங்காலத்தில் பெண்ணை வர்ணிக்கும்போதுகூட
அலையல்லசுனாமி

”நாணமோ இன்னும் நாணமோ...” என்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் பாடிய பாடலை ”நானோவோ இன்னும் நானோவோ...” என்று வருங்கால நடிகர்கள் மரத்தைச் சுற்றி பாடலாம். நானோ பற்றி மேலும் அறிந்து கொள்ள அதனுள்ளேயே பயணம் செய்ய  இங்கு கிளிக் செய்யவும். கட்டணம் இலவசம். இதற்கு மேல் எழுதினால் அது நானோ பதிவாக இருக்காது. போதும் நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்.

2 கருத்துகள்: