வியாழன், நவம்பர் 8

ஒரு டவுட்!

வரவர நானும் அறிவாளியாகிக்கிட்டே இருக்கேன். ஒரு டவுட்டுனு  சொல்லிட்டு நிறைய கேட்டிருக்கேன்.

ஒருதலைக்காதல்
 இருவரும் காதலிச்சால்தானே அது காதல். அப்படித்தானே! அப்போ... ஒருதலைநினைப்பு!
குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது
அப்போ பார்ல வண்டியை பார்க் பண்ன எதுக்கு இடம் ஒதுக்குறீங்க...


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாளாம்!
அப்போ.. ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் யார் இருக்கிறாங்க? (ஏன் பின்னாலேயே இருக்கிறாங்க..)

பெண்புத்தி பின்புத்தி
 ஏன் பின்னை மட்டும் சொல்லனும். ஒரு அறுவாள், கத்தி, பிளேடு ஏதும் சொல்லக்கூடாதா?

தகுதித்தேர்வு
ஒன்றுமறியா குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க மட்டும் ஆசிரியர்களுக்குத் தகுதித்தேர்வாம்! நிறைய விசயங்கள் அறிந்த மக்களை ஆட்சி செய்பவர்களுக்கு மட்டும் தகுதி எதுவும் வேண்டாமா? ( அட! குறைந்த பட்சம் பள்ளிக்காவது சென்றிருக்க வேண்டாமா...)


ஃபேஸ்புக்’
ஆனால் நிறைய பேர் ஃபேஸையே மறைச்சுதான் இருக்காங்க.. இதுக்கு ஏதும் வேறபேர் வைக்கலாம்ல...

பாடல் எழுதினால் பாடலாசிரியர். கதை எழுதினால் கதாசிரியர். அப்போ.. பரீட்சை எழுதினால்?
அவன் மட்டும் ஸ்டூடெண்டா?


குறட்டை போட்டா மத்தவங்களுக்கு கேட்குது .. ஏன்? அவர் குறட்டை அவருக்கு கேட்க மாட்டுக்கு?
விளக்கம் கொடுப்பவர்களுக்கு  கீழே வழங்கப்பட்டுள்ள சான்றிதழ் வழங்கப்படும். காப்பி பேஸ்ட் பண்ணிக்கொள்ளவும். சான்றிதழ் பிடிக்காதவர்கள் வேறு சான்றிதழை நீங்களே டிசைன் பண்ணி வைத்துக்கொள்ளவும். நீண்ட விளக்கம் வேண்டாம். கம்பெனி ஆட்களுக்கு புரியாமல் போய்விடும்.